எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் உதவியுடன் ஈரோடு தந்தை பெரியார் அரசு மருத்துவமனையில் முக்கிய சுகாதார மேம்பாட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன



ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்புக்கு மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் சேர்க்கப்பட உள்ளன.  எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முன்முயற்சியின் கீழ் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்படுகிறது. ரோட்டரி இண்டர்நேஷனல் மாவட்டம் 3234- இன் கீழ் அங்கமாக உள்ள ரோட்டரி கிளப் மெட்ராஸ் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உதவியுள்ளது. 

இந்தத் தொடக்க நிகழ்வில், ரோட்டரி மாவட்ட ஆளுநர், எம்டி, கே. பூபதி, ரோட்டரி  மாவட்ட ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.கே.விஜயச்சந்திரன், ரோட்டரி  முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.எம்.சிவசங்கரன், ரோட்டரி  அண்மைய முன்னாள் மாவட்ட ஆளுநர்,ஏகேஎஸ் வினோத் சாரோகி என ரோட்டரியின்  மூத்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்த முன்முயற்சியின் மூலம், டிஃபிபிரிலேட்டர், மல்டிபாரா மானிட்டர், சி-ஆர்ம் இணக்கமான அறுவைச் சிகிச்சை மேசை, வேர்டிகல் ஆட்டோக்ளேவ், மயக்க மருந்து வொர்க் ஸ்டேஷன், நியோ டையாதெர்மி, எலக்ட்ரோ கார்டியோகிராம், கரு கண்காணிப்புக் கருவி மின்னணு மார்பகப் பம்ப் மற்றும் ஹிஸ்டெரோஸ்கோபி கருவி உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவச் சாதனங்கள் மருத்துவமனைக்கு வழங்கப்பட உள்ளன.இந்தக் கூடுதல் உபகரணங்கள் ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கான முக்கியமான நோயறிதல், கண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை மற்றும் அவசரகாலச் சிகிச்சை சேவைகளை ஆதரிக்கும்.

இந்த முன்முயற்சியானது, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும், பொது சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்துவதிலும் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட் கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ், ரோட்டரி இண்டர்நேஷனல் மாவட்டம் 3234 உடன் இணைந்து, மருத்துவமனை அடையாளம் கண்ட மருத்துவ உள்கட்டமைப்புத் தேவைகளுக்கு ஏற்ப சமூகப் பொறுப்பு ஆதரவை ஒருங்கிணைத்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உதவியது. 

இந்த முன்முயற்சியைச் செயல்படுத்துவதில் நிகில் ராஜ், கணேஷ் அனந்தகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி விஜயன், அர்ஜுன் அனந்த் ஆகியோரின் முயற்சிகள் முக்கியப் பங்கு வகித்தன.ரோட்டரி இண்டர்நேஷனல் மாவட்டம் 3234-இன் மாவட்ட ஆளுநர் நியமனப் பட்டியலில் உள்ள ரவி சுந்தரேசன், பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேற்கொள்வதிலும், இந்த முன்முயற்சியைச் சுமுகமாகச் செயல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.

சிஎஸ்ஆர் வளங்களை ரோட்டரியின் சேவை வலையமைப்புடனும், அரசு சுகாதார நிறுவனத்தின் நிபுணத்துவத்துடனும் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த முன்முயற்சி நோயாளிகளுக்கு நீடித்த பயன்களை உருவாக்குவதையும், இப்பகுதியில் தரமான சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கு ஆதரவளிப்பதையும் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட்நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form