முயற்சியற்ற நேர்த்தி: கிளாசிக் 350 சிக்னேச்சர் ஒயிட் எடிஷனின் அறிமுகம்

நடுத்தர வகை மோட்டார் சைக்கிள் பிரிவில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், 2026 கிளாசிக் 350 ‘சிக்னேச்சர் ஒயிட்’ பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.கிளாசிக் 350 சிக்னேச்சர் ஒயிட் மாடல், எமரால்டு கிரீன் பதிப்புடன் இணைந்து கிளாசிக் 350 வரிசையில் டாப்-எண்ட் வேரியண்ட்களில் ஒன்றாக விற்பனைக்குக் கிடைக்கும். இது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் விற்பனையகங்களிலும் கிடைக்கும்; இதன் ஆரம்ப விலை ₹2,24,275 (எக்ஸ்-ஷோரூம், சென்னை).

ஆர்இ கிளாசிக் 350 சிக்னேச்சர் ஒயிட்-ல் ரைடர் மற்றும் பின்னால் அமர்பவருக்கான பிரீமியம் பிரவுன் டூரிங் சீட்-கள், பக்கவாட்டு பேனலில் புதிய ‘கிளாசிக்’ லோகோ, எரிபொருள் டேங்க்கில் ஸ்டென்சில் பாணி டெக்கால் மற்றும் இருபுறமும் ஆர்இ பேட்ஜ் உள்ளிட்ட கலைநயமிக்க வடிவமைப்பு, அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் அண்ட் பிரேக் லீவர்கள், ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் யுஎஸ்பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் மற்றும் தடையற்ற பயணத்திற்கு வழிகாட்டும் ட்ரிப்பர் பாட் ஆகிய சிறப்பம்சங்களுடன் வருகிறது.

2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பழமை மாறாத அழகியலையும் நவீன பொறியியலையும் இணைக்கும் உன்னதமான ஆட்டோமோட்டிவ் வடிவமைப்பின் நீடித்த அடையாளமாகத் திகழ்கிறது. காலத்தால் அழியாத வடிவம், தனித்துவமான கட்டமைப்பு, மாசற்ற கம்பீரம் ஆகியவை இதனை ராயல் என்ஃபீல்டின் முக்கிய அடையாளமாகவும், தலைமுறைகள் கடந்த ரைடர்களின் விருப்பமான தேர்வாகவும் மாற்றியுள்ளன.

Post a Comment

Previous Post Next Post

Contact Form