லோட்டஸ் கார்ஸ்இந்தியா, தனது விருது பெற்ற எலக்ட்ரிக் பெர்ஃபார்மன்ஸ்கார்களான 'லோட்டஸ் எலெட்ரே' மற்றும்'லோட்டஸ் எமியா' ஆகியவற்றை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் அகில இந்தியஅளவிலான பயணத்தை அறிவித்துள்ளது. பல நகரங்களை உள்ளடக்கிய இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, லோட்டஸ் கார்ஸ் இந்தியா செப்டம்பர் 22 மற்றும் 23, 2026 அன்று கோயம்புத்தூரில் தொழில்முனைவோர்,வணிகத் தலைவர்கள், சொகுசு வாகன விரும்பிகள் மற்றும்வாகன ஆர்வலர்களுக்காக ஒரு பிரத்யேக அனுபவ நிகழ்வை நடத்துகிறது.
தெற்கு மற்றும் கிழக்கு இந்திய சுற்றுப்பயணம் சென்னையில் தொடங்கி கோயம்புத்தூர், திருச்சூர், கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, பெங்களூரு, புவனேஸ்வர், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்குப்பயணிக்கிறது. அதே நேரத்தில், மேற்கு இந்தியாவில் புனே, கோலாப்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் இந்தபயணம் நடைபெறுகிறது.
லோட்டஸ் எலெட்ரே என்பது சிறப்பான செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாடு ஆகியவற்றை இணைக்கும் ஒரு முழுமையான எலக்ட்ரிக் ஹைப்பர்-எஸ்யூவி ஆகும். ஒரு சொகுசு எஸ்யூவி-யில் எதிர்பார்க்கப்படும் அனைத்து வசதிகளையும், ஈடு இணையற்ற செயல்திறனையும் வழங்குகிறது.லோட்டஸ் எமியா நிறுவனத்தின் முழுமையான எலக்ட்ரிக் ஹைப்பர்-ஜிடி ஆகும். இது அதிரடி செயல்திறன், மூச்சுத்திணற வைக்கும் வடிவமைப்பு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கான சொகுசு ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோயம்புத்தூர் நிகழ்வில்,அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சிறந்த ஓட்டுநர்அனுபவங்கள், கார்களின் சிறப்பம்சங்கள் குறித்த நேரடி விளக்கங்கள் மற்றும் பிராண்ட் குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்படும். வாகனங்களைக் காட்சிப்படுத்துவதைத் தாண்டி, நாடு முழுவதும் தங்கள் இருப்பை விரிவுபடுத்துவதிலும், முக்கிய சொகுசு சந்தைகளில் வாடிக்கையாளர்களுடனான உறவை வலுப்படுத்துவதிலுமான லோட்டஸ் கார்ஸ் இந்தியாவின்அர்ப்பணிப்பை கோயம்புத்தூர் நிகழ்வு பிரதிபலிக்கிறது.
லோட்டஸ் கார்ஸ் இந்தியாவின் இயக்குநர் எமி அரோராகூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பிராண்டுகளையும் அனுபவங்களையும் வழங்குவதே எப்போதும் எங்களின் முயற்சியாகும். வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் எங்கள் தத்துவம் எங்களை தனித்து நிற்கச்செய்கிறது; இது வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை ஏற்படுத்த எங்களுக்கு உதவுகிறது. அதே நேரத்தில், இந்தியா முழுவதும் சிறப்பான விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்கி, தடையற்ற உரிமையாளர் அனுபவத்தைஉறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்றார்.
.jpg)