கயத்தாறில் டாடா பவரின் 100 மெகாவாட் சூரியசக்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது


 இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றும், தி டாடா பவர் கம்பெனி லிமிடெட்-ன் துணை நிறுவனமுமான டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெட் தமிழ்நாட்டின் கயத்தாறில் உள்ள வெள்ளாளன்கோட்டை மற்றும் நாலந்துலா கிராமங்களில் தனது 100 மெகாவாட் குரூப் கேப்டிவ் சோலார் ப்ராஜெக்ட்-ஐ வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், டிபிஆர்இஎல்-ன் யூட்டிலிட்டி போர்ட்ஃபோலியோ 12.3 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதுடன், செயல்பாட்டு திறன் 7 ஜிகாவாட் என்ற முக்கிய மைல்கல்லையும் தாண்டியுள்ளது.

இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 240.63 மில்லியன் யூனிட் தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வைத் தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, டாடா திட்டத்திற்காக இந்தியாவில் முதன்முறையாக ஃப்ளெக்ஸிபிள் டெர்ரைன் கம்பாட்டிபிள் சிங்கிள் ஆக்ஸிஸ் ட்ராக்கர்  தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2,61,660 மோனோ பெர்க் பைஃபேசியல் சோலார் மாட்யூல்களைக் கொண்டுள்ள இந்தத் திட்டம், மாறுபட்ட நிலப்பரப்பு சூழ்நிலைகளிலும் எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதுடன், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் 7 ஜிகாவாட் செயல்பாட்டு திறனில் 5.7 ஜிகாவாட்டுக்கும் அதிகமான சூரியசக்தி மற்றும் 1.3 ஜிகாவாட் காற்றாலை எரிசக்தி சொத்துகள் அடங்கும். மேலும், அதன் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தும் வகையில், டிபிஆர்இஎல் பல்வேறு கட்ட வளர்ச்சியில் கூடுதலாக 5.3 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டங்களை கொண்டுள்ளது. இதில் 2.2 ஜிகாவாட் சூரியசக்தி மற்றும் 3.1 ஜிகாவாட் காற்றாலை திட்டங்கள் அடங்கும். இத்திட்டங்கள் அடுத்த 6 முதல் 24 மாதங்களில் கட்டம் கட்டமாக செயல்பாட்டுக்கு வர உள்ளன.

இந்தத் திட்டம், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தில் முன்னணி நிறுவனமாக டிபிஆர்இஎல் -ன் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், புதுமையான மற்றும் உயர்தரமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளை தொடர்ந்து வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. இத்தீர்வுகள், 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தி திறனை அடைய வேண்டும் என்ற நாட்டின் இலக்கிற்கு ஆதரவளிக்கின்றன.பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துகளை செயல்படுத்துவதில் விரிவான நிபுணத்துவம் கொண்ட இந்நிறுவனம், யூட்டிலிட்டி அளவிலான சூரியசக்தி, மிதக்கும் சூரியசக்தி மற்றும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் திட்டங்களை உள்ளடக்கிய பரந்த அளவிலான பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form