750-க்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்ற ஸ்டார் முகவர் திருவிழா 2026

வேலூரில் தனது 20 ஆண்டுகாலப் பயணத்தை நிறைவு செய்துள்ள இந்தியாவின் முன்னணி ஸ்டாண்ட்-அலோன் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்  ஸ்டார் முகவர் திருவிழா 2026’-ஐ வேலூரில் நடத்தியது.  இந்நிகழ்வில் 750-க்கும் மேற்பட்ட முகவர்களும், 100-க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு உறுப்பினர்களும் பங்கேற்றனர். மேலும், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துடன் இரண்டு தசாப்தங்களாக இணைந்து பணியாற்றி வரும் நீண்டகால முகவர்கள் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர். ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் புதுச்சேரி மண்டலத்தின் சார்பில், தமிழ்நாடு வணிகத் தலைவர் பாலாஜிபாபு மற்றும் புதுச்சேரி மண்டலத் தலைவர் சேகர் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பிராந்திய, கிளைம்ஸ், விற்பனை மற்றும் கற்றல் & மேம்பாட்டுக் குழுக்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் புதுச்சேரி மண்டலம், 26 ஆம் நிதியாண்டில் 82,000-க்கும் மேற்பட்ட பாலிசிகளை வழங்கி, 2.07 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. இந்த மண்டலம் சுமார் ₹168 கோடி ஜிடபிள்யுபி-ஐ பதிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில், 12 கிளைகள், 9,000 முகவர்கள் மற்றும் 149 நெட்வொர்க் மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது. 26ஆம் நிதியாண்டில், இந்த மண்டலம் 11,000-க்கும் மேற்பட்ட கிளைம்களை செட்டில் செய்து, சுமார் ₹92 கோடி கிளைம் தொகையை வழங்கியுள்ளது. தொடக்கம் முதல், புதுச்சேரி மண்டலம் சுமார் 65,000 கிளைம்களை செட்டில் செய்து, ₹434 கோடிக்கும் மேல் கிளைம் தொகையை வழங்கியுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தமிழ்நாடு வணிகத் தலைவர் பாலாஜிபாபு கூறியதாவது: “வாடிக்கையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் வலுவான உறவுகளைக் கொண்ட முகவர்களின் ஆதரவுடன், வேலூர் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான இடமாகத் திகழ்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக முகவர்கள் வழங்கி வரும் அர்ப்பணிப்பு, மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மேலும் பல குடும்பங்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும் எங்களுக்கு உதவியுள்ளது. இன்று, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட முகவர்கள், 16,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளைக் கொண்ட வலையமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் ஸ்டார் ஹெல்த் செயல்பட்டு வருகிறது. மேலும், 2.8 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கி, தொடக்கம் முதல் ₹71,100 கோடிக்கும் மேல் கிளைம் தொகையை வழங்கியுள்ளது. எங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியில், முகவர் வலையமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, வேலூர், தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் மருத்துவக் காப்பீட்டுக்கான அணுகலை மேம்படுத்த தொடர்ந்து செயல்படுவோம்.”

மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், வாடிக்கையாளர்கள் தங்களது காப்பீட்டுத் தேவைகளைப் புரிந்துகொள்ள உதவுவதிலும், குடும்பங்களுக்கு பாலிசி சேவை மற்றும் கிளைம் தொடர்பான ஆதரவை வழங்குவதிலும் முகவர்களின் முக்கியப் பங்கை இந்நிகழ்வு எடுத்துரைத்தது. ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் ஆரம்ப காலகட்டம் முதல் இணைந்து செயல்பட்டு வரும் முகவர்கள், வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்காக சிறப்பிக்கப்பட்டனர்.

அனுபவக் கண்காட்சி அரங்குகளில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ‘2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தொலைநோக்கு, முகவர்களுக்கான தொழில் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள், ஸ்டார் ஹெல்த் மருத்துவமனை வலையமைப்பு, பிரதம் மருத்துவமனை சேவைகள், வீட்டு மருத்துவப் பராமரிப்பு மற்றும் கிளைம் உதவி ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. ஒளி-ஒலி காட்சி மூலம், நிறுவனத்தின் முக்கிய சாதனைகள் மற்றும் கடந்த 20 ஆண்டுகளில் அதன் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் விநியோக வலையமைப்பின் பரிணாம வளர்ச்சி எடுத்துரைக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form