பாராசூட் அட்வான்ஸ்டு, தமிழ்நாட்டில் உள்ள நுகர்வோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் புதிய வகை ஹேர் ஆயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொகுப்பில் கறிவேப்பிலை, செம்பருத்தி மற்றும் ரோஸ்மேரி ஆகிய மூன்று தயாரிப்புகள் உள்ளன. இவை, மூலப்பொருட்களின் ஆற்றலை வெளிக்கொணர உதவும் 10 மணி நேர தீவிர மெதுவான குக்கிங் செயல்முறையில் தூய தேங்காய் எண்ணெயைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தயாரிப்பும் அதன் முக்கிய மூலப்பொருளின் நன்மைகளை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது, இது நுகர்வோருக்கு வெவ்வேறு கூந்தல் தேவைகளுக்கு ஏற்ற ஒரு ஹேர் ஆயிலை வழங்குகிறது. இந்த தயாரிப்புகள் இணையவழி வர்த்தகம், நவீன வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது வர்த்தக கடைகள் ஆகியவற்றின் மூலம் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.
இந்த அறிமுகத்தின் மூலம், பாராசூட் அட்வான்ஸ்டு, நம்பகமான கூந்தல் பராமரிப்பு மரபுகள் மற்றும் கலாசார ரீதியாக வேரூன்றிய நுகர்வோர் நுண்ணறிவுகளால் உத்வேகம் பெற்ற புதுமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த பிராந்தியத்தில் தனது இருப்பை இந்நிறுவனம் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில் இன்றைய நுகர்வோரின் விருப்பங்களுக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக்கொள்வதோடு தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் செழுமையான பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலான பயனுள்ள கூந்தல் பராமரிப்புத் தீர்வுகளை வழங்குவதிலும் அது உறுதியாக உள்ளது.
இதன் அறிமுக விழாவில்,- மரிகோ லிமிடெட்டின் இந்திய கோர் பிசினஸ், தலைமை செயல் அதிகார் ஆஷிஷ் கௌபால், பேசுகையில் " இந்த புதிய தயாரிப்பு வரிசையின் மூலம், தமிழ்நாட்டின் வளமான கூந்தல் பராமரிப்பு பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்திருக்கும் அதே வேளையில், கறிவேப்பிலை, செம்பருத்தி மற்றும் ரோஸ்மேரி போன்ற மூலப்பொருட்களின் நீடித்த நம்பகத்தன்மையைப் பயன்படுத்தி உயர் செயல்திறன் கொண்ட ஒரு தயாரிப்பை நாங்கள் வழங்குகிறோம்." என்றார்.
மரிகோ லிமிடெட்டின் தலைமை ஆர் அண்ட் டி, டாக்டர் ஷில்பா வோரா கூறுகையில், "சகறிவேப்பிலை, செம்பருத்தி மற்றும் ரோஸ்மேரி போன்ற இயற்கை மூலப்பொருட்கள் நுகர்வோரால் பெரிதும் நம்பப்படுகின்றன. ஆனால் இதை வீட்டில் உருவாக்குவது பெரும்பாலும் அதிக நேரத்தை எடுக்கும். இந்த மூலப்பொருட்களின் நன்மைகளை ஒரு வசதியான வடிவத்தில் ஒன்றிணைத்து, நுகர்வோர் தங்கள் ஹேர் ஆயில்களில் எதிர்பார்க்கும் பராமரிப்பை வழங்குவதோடு, இன்றைய வேகமான வாழ்க்கை முறைக்குள் தடையின்றி பொருந்தும் வகையில் இந்த தயாரிப்பு வரிசை உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
.png)