மிகப்பெரிய மோட்டோ-கலாச்சார கொண்டாட்டமான மோட்டோவெர்ஸ் 2026 நிகழ்ச்சிக்கு தயாராகி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் - அதற்காக இந்தியா முழுவதிலுமிருந்து மிகவும் தனித்துவமான குரல்கள் மற்றும் ஒலிகளை ஒன்றிணைக்கும் நிகழ்வின் கலைஞர்களின் முதல் பட்டியலை அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு 125-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையடுத்து திட்டமிடப்பட்டுள்ள மோட்டோவெர்ஸ் 2026 நிகழ்வானது நவம்பர் 27 முதல் 29 வரை கோவாவின் வாகேட்டாரில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் இசை, மோட்டார்பைக்ஸ், கலை, விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கவுள்ளது.
இத்திருவிழாவின் மிகப்பெரிய பதிப்பாக அமையவுள்ள ‘மோட்டோவெர்ஸ் 2026’ பிரத்யேக மோட்டார்பைக்குகளின் வெளியீடுகள் மற்றும் அறிமுகங்கள் இதில் நடைபெறும்.
ரிபெல், லிஃபாஃபா, ஃபர்ஹான் அக்தர், சஞ்சித் ஹெக்டே, எம்எச்ஆர் அண்ட் ஃபிரண்ட்ஸ் மற்றும் தி திங்க் ஃப்ளாய்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் - ஹிப்-ஹாப், இந்தி மொழி எலக்ட்ரானிகா, பின்னணி பாடல்கள் மற்றும் அஞ்சலி செலுத்தும் இசைப்படைப்புகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட இசை விருந்தாக வழங்கவுள்ளனர். ரிபெல் இந்தியாவின் சுயாதீனமான ஹிப்-ஹாப் உலகின் நிதர்சனமான ஆற்றலைக் கொண்டு வரவுள்ளார், அதுவே இப்போது தேசிய திரைப்பட ஒலிப்பதிவுகளில் பெரிதாக கொண்டாடப்படுகிறது; ஃபர்ஹான் அக்தர் திரை மற்றும் மேடைக்கு இடையில் சுதந்திரமாக பயணிக்கிறார்; சஞ்சித் ஹெக்டே பன்மொழி பின்னணி பாடல்களின் தொகுப்புடன் வருகிறார்; மேலும் லிஃபாஃபா இந்தி மொழி எலக்ட்ரானிக்காவின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறார். மேடையை முழுமையாக மாற்ற MHR & ஃபிரண்ட்ஸ் ராப், மெலடி மற்றும் புதுமையான இசை படைப்புகளை புதிய ரகமாக தொகுத்து வழங்கவுள்ளனர். அதே நேரத்தில் தி திங்க் ஃப்ளாய்டியன் அவர்களது பிங்க் ஃப்ளாய்ட்டின் மெய்சிலிர்க்க வைக்கும், நேரடி இசையை தங்களுக்கே உரிய வசீகரமான பின்னணி சைசெடிலிக் செட்டில் காட்சிப்படுத்தவுள்ளனர். எல்லாம் ஒன்றாக, இந்த கலைஞர்களின் படைப்புகளுடன் மோட்டோவர்ஸ் பிரம்மாண்டமகவும், பன்முகத்தன்மையுடனும் சிறப்பாக நடைபெறும்.
இதில் பங்கேற்கும் சமூக அமைப்பின் மேடைக்கும் அதே ஆத்மார்த்த உணர்வு கடத்தப்படுகிறது; எனவே, இது இந்தியாவின் சுயாதீனமான மற்றும் வளர்ந்து வரும் இசை உலகை நோக்கி அனைவரின் கவனத்தையும் கொண்டுவருகிறது. பாடகர்-பாடலாசிரியர்களான ருஷில் மற்றும் மாலி மனதிற்கு நெருக்கமான, உணர்ச்சிகரமான அனுபவத்தை கொண்டு வருகிறார்கள்; சுக்கஹன்னி ஒரு கூர்மையான ஹிப்-ஹாப் குரலுடன் அசத்தவுள்ளார்; மற்றும் கர்டெயின் ப்ளூ, கொமோரேபி & கோயா, OG SHEZ மற்றும் அக்சோமேனியாக் ஆகியோர் சுயாதீனமான, எலக்ட்ரானிக் மற்றும் ரீஜினல் R&B இசைகளின் கலவையுடன் வளம் வரவுள்ளனர். இரண்டு தளங்களிலும், மோட்டோவெர்ஸின் சுறுசுறுப்பான, தனிநபர் உணர்வைப் பகிர்ந்து கொள்ளும் இசையானது அந்தந்த கலைஞர்களைக் கொண்டாடுவதாக இருக்கும் - அவர்கள் புதிய வழிகள், ஒலிகள் மற்றும் சாத்தியக்கூறுகளை தொடர்ந்து ஆராய்ந்து வரும் படைப்பாளர்கள். இந்த கொண்டாட்டம் துவங்குவதற்கு முன்னதாக கூடுதலாக பல கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளன.
ப்யூர் ஸ்போர்ட் மைதானத்தில் ரைடர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்கள் திறமைகளை டர்ட் டிராக், மோட்டோ போலோ, மவுட் கா கோன், ஸ்லைடு ஸ்கூல், டிரிஃப்ட் ஸ்கூல் மற்றும் டிரெயில் ஸ்கூல் ஆகியவற்றில் வழித்தடங்களில் முயற்சி செய்து பார்க்கலாம். மோட்டோவில் ராயல் என்ஃபீல்டின் உலகளாவிய படைப்பாற்றல் இயக்கத்தின் மூலம் - படைப்பாற்றல் மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடவுள்ளது; அதே நேரத்தில் மோடோரீல் மூலம் ரைடர்கள், சாகசப் பிரியர்கள், ரேஸ் வீரர்கள், கஸ்டம் பில்டர்கள் மற்றும் பயணர்கள் அவர்களுக்கான பயிலரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் கதைகளில் பங்கேற்கலாம்.
இத்திருவிழா மைதானங்களுக்கு அப்பால் கடந்து, மோட்டோவெர்ஸ் மீண்டும் கோவா முழுவதும் திட்டமிடப்பட்ட பயணங்கள், சுவாரஸ்யமான அனுபவங்கள், அச்சமூகத்தினரால் வழிநடத்தப்படும் போட்டிகள், மற்றும் இன்டராக்டிவ் பயிலரங்குகள் ஆகியவற்றை நடத்துகின்றது. மேலும் 100-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்ளிங் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டுகளையும் கொண்டு வருகிறது. ஃப்ளையிங் ஃப்லீ-யின் மின்சார வாகன ரகங்கள் உட்பட ராயல் என்ஃபீல்டின் மோட்டார்பைக்குகளின் முழுமையான போர்ட்ஃபோலியோவை காணவும், ஒட்டும் அனுபவத்தைப் பெறவும், பரிசோதிக்கவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
முன்கூட்டிய முன்பதிவுகள் இப்போது நடந்து வருகின்றன; டிக்கெட்டுகள் ₹2,599 முதல் தொடங்குகின்றன. குரூப் பாஸ்கள், தள்ளுபடிகள் மற்றும் பிரத்தியேக எர்லி பேர்டு (முன்கூட்டிய) சலுகைகள் ஆகியவை பைக் பயணக் குழுவினர் மற்றும் கோவாவுக்கு தங்கள் பயணத்தைத் திட்டமிடும் குழுவினருக்கும் வழங்கப்படுகின்றன.
மோட்டோவெர்ஸ் 2026-இல் பங்கேற்க பதிவு செய்ய www.royalenfield.com/motoverse <http://www.royalenfield.com/motoverse> என்ற வலைத்தளத்தைக் காணவும்.
