ஹையர் இந்தியா பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை - தென்னிந்திய வீடுகளுக்கு புதுமையை கொண்டு வருகிறது

ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா, பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் வீட்டிற்குள் அசோசியேட் ஸ்பான்சராக தனது புதுமையான தொழில்நுட்பங்களை கொண்டு வருகிறது. இதன் மூலம், பிராந்தியத்தின் மிகுந்த தாக்கம் கொண்ட பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களுடனான தனது தொடர்பை ஹையர் மேலும் வலுப்படுத்துகிறது. இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஹையரின் ஹோம் அப்ளையன்சஸ் தயாரிப்புகளின் தொகுப்பு பிக் பாஸ் வீட்டின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறி, போட்டியாளர்களின் தினசரி செயல்பாடுகளுடன் இயல்பாக இணைந்திருக்கும். இந்த ஆண்டின் கூட்டாண்மை மூலம் பிக் பாஸ் வீட்டிலும் டாஸ்க் அரங்கிலும் அர்த்தமுள்ள பிராண்ட் தொடர்பு புள்ளிகளை உருவாக்குவதுடன்,  ‘மோர் க்ரியேஷன், மோர் பாசிபிலிட்டீஸ்’  என்ற ஹையரின் தத்துவத்தை வலுப்படுத்துகிறது.

இந்த ஒருங்கிணைப்பில் ஹையர் லுமியர் 4இ-டோர் சைட் பை சைட் ரிப்ரிஜிரேட்டர், க்ராவிட்டி ஏஐ ஏசிக்கள், மினி எல்இடி டிவி-ன் பல்வேறு மாடல்கள் மற்றும் வோக் சீரிஸ் மைக்ரோவேவ்  ஆகியவை இடம்பெறும். இதன் மூலம், வீட்டிற்குள் நடைபெறும் உண்மையான அன்றாட அனுபவங்களின் வாயிலாக தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் நவீன வாழ்க்கை முறையின் மீது ஹையர் கொண்டுள்ள கவனம் வெளிப்படுத்தப்படும். வழக்கமான தயாரிப்பு காட்சிப்படுத்தலைத் தாண்டி, ஹையர் பிக் பாஸ் வீட்டிற்குள் லைவ் வாஷிங் மெஷின் டாஸ்க் ஒன்றையும் அறிமுகப்படுத்துகிறது. அன்றாட வீட்டு பணியை நிகழ்ச்சியின் முக்கிய செயல்பாடுகளுக்குள் கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாஸ்க், போட்டியாளர்கள் ஹையர் வாஷிங் மெஷினின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறனை வேடிக்கையான மற்றும் போட்டித்தன்மை கொண்ட முறையில் நேரடியாக அனுபவிக்க வாய்ப்பளிக்கும்.

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த ஹையர் அப்ளையன்சஸ் இந்தியாவின் சிஇஓ என்.எஸ் சதீஷ் கூறுகையில், “பிக் பாஸ் தமிழ், பார்வையாளர்களுடன் வலுவான மற்றும் நீடித்த தொடர்பை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலம் வாடிக்கையாளர் தொடர்பை வலுப்படுத்தவும், ஹையரை நுகர்வோர்களுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு செல்லவும் எங்களது கூட்டாண்மை ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மக்கள் வாழும் விதத்திற்கு தொழில்நுட்பத்தை மேலும் பொருத்தமானதாக மாற்றுவதே எங்களது அணுகுமுறையாக எப்போதும் இருந்து வருகிறது. அந்தத் தத்துவத்தை நிஜமாக்குவதற்கு பிக் பாஸ் வீடு ஒரு இயல்பான தளமாக அமைகிறது. தமிழ்நாட்டில் எங்களது இருப்பை மேலும் வலுப்படுத்தி வரும் நிலையில், பொருத்தமான மற்றும் ஈடுபாட்டை ஏற்படுத்தும் அனுபவங்கள் மூலம் நுகர்வோர்களுடன் இணைய இந்த கூட்டாண்மை எங்களுக்கு உதவுகிறது. அதே நேரத்தில், ‘மோர் க்ரியேஷன், மோர் பாசிபிலிட்டீஸ்’ என்ற எங்களது தத்துவத்தையும் நிஜ வாழ்க்கை அனுபவங்களின் மூலம் வெளிப்படுத்துகிறது” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form