தமிழ்நாட்டில் பலரின் வளர்ந்த நாட்களின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது பிரிட்டானியா மில்க் பிக்கிஸ். பல்வேறு முயற்சிகள் வழியாக மாநிலத்தின் மொழி, பண்பாடு மற்றும் மரபுகளை இந்த பிராண்ட் கொண்டாடி வருகிறது. பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் அத்தகைய ஒரு தனித்துவமான பழக்கம், பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் கிளாசிக்கை உண்ணும் விதம்தான் - முதலில் பூ வடிவம் பதிந்த ஓரத்தைச் சுற்றிக் கடித்துவிட்டு, பிறகு நடுப்பகுதியை முடிப்பது. இந்தப் பழக்கம் எந்த அளவுக்குப் பிரபலமாகிவிட்டது என்றால், மாநிலம் முழுவதும் தலைமுறை தலைமுறையாக மக்கள் இந்த பிஸ்கட்டுக்கு அன்புடன் ஒரு தனிப் பெயரையே சூட்டியுள்ளனர் - ‘பூ போட்ட பார்டர் பிஸ்கட்’, அதாவது பூ வடிவ ஓரம் கொண்ட பிஸ்கட்.
ஆனால், பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் கிளாசிக்கை விரும்பும் தலைமுறைகள் ஒருபோதும் கேட்டிராத, ஆனால் அடிக்கடி யோசித்திருக்கக் கூடிய ஒரு கேள்வி உள்ளது: அது எந்தப் பூ? பிரிட்டானியாவின் சமீபத்திய பிராண்ட் பிரச்சாரம் இந்தக் கேள்விக்கு விடையளிக்கிறது.
டாலண்டெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், இந்த மர்மத்தைக் கண்டறியப் புறப்படும் ஆர்வமிக்க ஒரு சிறுமியுடன் தொடங்குகிறது. தன் பகுதியில் உள்ள பூ விற்பவரிடம் இருந்து தன் அறிவியல் ஆசிரியர் வரை, விடை தேடி தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் இடங்களையும் அவள் நாடுகிறாள். இறுதியில் அவளது தேடல், தமிழ்நாட்டின் மிகவும் மதிக்கப்படும் பண்பாட்டுக் குரல்களில் ஒருவரான பேராசிரியர் சாலமன் பாப்பையாவிடம் அவளை அழைத்துச் செல்கிறது. பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் கிளாசிக் மீது தமிழ்நாட்டு மக்கள் தலைமுறை தலைமுறையாகக் காட்டிவரும் அன்பைக் கொண்டாடும் வகையில் அவர் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
இந்தப் பிரச்சாரம் குறித்துப் பேசிய சித்தார்த் குப்தா, துணைத்தலைவர் - மார்க்கெட்டிங், “பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சிறப்பான தருணங்களையும் மரபுகளையும் கொண்டாடுவதில் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஒரு பங்காக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சாரம் அந்தப் பயணத்தின் தொடர்ச்சியே. தனித்துவமான ஒரு தமிழ் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் கிளாசிக் பழக்கத்தையும், தலைமுறைகளாக இந்த பிராண்ட் மீது மக்கள் கொண்டுள்ள பாசத்தையும் இது உயிர்ப்பிக்கிறது. தமிழ்நாட்டுடனான இந்த சிறப்பான உறவைக் கொண்டாட இன்னும் பல வழிகளைக் கண்டறிய நாங்கள் ஆவலுடன் உள்ளோம்” என்றார்.
பி.ஜி. ஆதித்யா, இணை நிறுவனர் மற்றும் தலைமை படைப்பாக்க அதிகாரி, டாலண்டெட், கூறியதாவது:“கேள்விக்குள்ளேயே விடையைக் கண்டோம். பிஸ்கட்டில் உள்ள பூவுக்கும் (பூ) அன்புக்கும் (அன்பு) இடையிலான சொல்விளையாட்டு, இந்த மாநில மக்கள் தலைமுறை தலைமுறையாக மில்க் பிக்கிஸ் மீது காட்டி வரும் பாசத்தை வெளிப்படுத்த ஓர் அழகான வழியை எங்களுக்கு அளித்தது. மேலும், ஒரு விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சாலமன் பாப்பையாவை விடச் சிறந்தவர் யார்?” என்றார்.
ஃபரூக் முகமது, இயக்குநர் மற்றும் இணை நிறுவனர், கதை ஃபிலிம்ஸ், கூறியதாவது:“அவ்வளவு பரிச்சயமான ஒரு பிஸ்கட்டில் உள்ள சிறிய ஒரு விவரம், ஒரு முழு உலகத்தையே திறந்துவிட முடியும் என்பதுதான் எங்களை உற்சாகப்படுத்தியது. அந்தத் தேடலில் பார்வையாளர்களையும் உடன் அழைத்துச் சென்று, அந்தச் சிறுமியின் ஆர்வம் கதையை நகர்த்தும் வகையில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு படத்தை உருவாக்க விரும்பினோம். மில்க் பிக்கிஸ் கிளாசிக் எங்கள் சொந்த வளர்ந்த நாட்களின் மிகப் பெரிய பகுதியாக இருந்தது; எனவே அந்த இணைப்பு உடனடியாகவே ஏற்பட்டது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த யோசனையின் இதயம் சரியான இடத்தில் இருந்தது. இதை நம்பி, ஒவ்வொரு காட்சியிலும் அந்த அன்பைக் கொண்டுவந்த சிறந்த ஒரு குழு எங்களுக்குக் கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம்.” என்றார்.
பிராண்ட் பிரச்சார இணைப்பு: <https://www.youtube.com/watch?v=NlDtFNI_Yvk>
திரைப்படத்திற்கு அப்பாலும் இந்தப் பிரச்சாரம் இந்த உண்ணும் பழக்கத்தைக் கொண்டாடி, பல்வேறு சில்லறை விற்பனைத் தளங்களில் அதை உயிர்ப்பிக்கிறது. பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் கிளாசிக்கை சரியான முறையில் ரசிப்பதற்கான ஒரு விளையாட்டுத்தனமான வழிகாட்டி சில்லறை விற்பனை இடங்களில் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டின் தலைமுறைகள் இந்தச் சிறிய பழக்கத்தைத் தங்களுக்கே உரியதாக மாற்றிக்கொண்ட பல வழிகளைக் கொண்டாடும் ஒரு புகைப்படத் தொடரும் இடம்பெறுகிறது.
.jpeg)