ராமநாதபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 40 வருடத்திற்கும் மேலாக தரமான இனிப்புகள், கேக்குகள் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை வழங்கி வரும் பெஸ்ட் மம்மி ஸ்வீட்ஸ் & கேக்ஸ், மதுரையில் தனது புதிய கிளையைத் தொடங்கியுள்ளது. மதுரை போத்திஸ் ஜவுளிக்கடை அருகே அமைந்துள்ள இந்த புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
திறப்பு விழாவில் கோமதி அம்மாள் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பழனி பிரகாஷ், நரேஷ் பாபு, தினேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை வரவேற்றனர்.
1987-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் எஸ்.மாரிமுத்து & எம்.கோமதி அம்மாள் தம்பதியரால் தொடங்கப்பட்ட பெஸ்ட் மம்மி, காலத்திற்கேற்ப வாடிக்கையாளர்களின் சுவை மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தனது தயாரிப்புகளையும் சேவைகளையும் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. கேக், பன், பிரெட், கன்ஃபெக்ஷனரி பொருட்கள், சாண்ட்விச்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பேக்கரி மற்றும் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
பிறந்தநாள், திருமணம், திருமண நாள், வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பிரத்யேக கேக்குகளையும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தயாரித்து வழங்கி வருகிறது. குறிப்பாக, பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் சுவைகளில் கேக்குகள் கிடைப்பது பெஸ்ட் மம்மியின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக வாடிக்கையாளர்களால் குறிப்பிடப்படுகிறது.
இனிப்புகள் மற்றும் கார வகைகளுடன், தினசரி தேவைக்கான பிரெட், பன் உள்ளிட்ட பேக்கரி தயாரிப்புகள், பேஸ்ட்ரிகள், சாண்ட்விச்கள், ஸ்நாக்ஸ் மற்றும் பல்வேறு உணவு வகைகளும் கிடைக்கின்றன. சில கிளைகளில் ஹோம் டெலிவரி மற்றும் டேக்-அவே வசதிகளும் வழங்கப்படுகின்றன.
ராமநாதபுரம் நகரம் மட்டுமின்றி உச்சிப்புளி, கீழக்கரை, பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பெஸ்ட் மம்மியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக ராமநாதபுரம் மக்களின் ஆதரவைப் பெற்று வளர்ந்து வந்த பெஸ்ட் மம்மி, தற்போது மதுரை போன்ற முக்கிய நகரில் தனது கிளையைத் தொடங்கியிருப்பது நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அமைந்துள்ளது. மதுரை மக்களுக்கும் ராமநாதபுரத்தின் சுவையையும், பெஸ்ட் மம்மியின் தனித்துவமான தயாரிப்புகளையும் வழங்குவதே புதிய கிளையின் நோக்கம் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மதுரையில் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் புதிய கிளை அமைந்துள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமின்றி மதுரைக்கு வருகை தரும் பொதுமக்களும் பெஸ்ட் மம்மியின் தயாரிப்புகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.
தரம், சுவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை முன்னிலைப்படுத்தி தொடர்ந்து பயணித்து வரும் பெஸ்ட் மம்மி, மதுரையிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.