திருச்சிராப்பள்ளியில் அலன் கரியர் இன்ஸ்டிடியூட்-ன் புதிய மையம் திறப்பு




தமிழ்நாட்டில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அலன் கரியர் இன்ஸ்டிடியூட் தனது புதிய மையத்தை திருச்சியில் பிரம்மாண்டமாகத் திறந்துள்ளது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி வழிகாட்டுதல், கட்டமைக்கப்பட்ட கற்றல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பை மேலும் எளிதாகக் கொண்டு சேர்க்கும் அலனின் முயற்சியில், இந்தப் புதிய மையத்தின் தொடக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த புதிய மையம் திருச்சி அண்ணாமலை நகரில் அமைந்துள்ளது.

திறப்பு விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலன் முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அலன் கரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CAO)  சி.ஆர். சௌத்ரி, அலன் கரியர் இன்ஸ்டிடியூட், தென் மண்டலத் தலைவர்  மகேஷ் யாதவ், அலன் கரியர் இன்ஸ்டிடியூட், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்விப் பிரிவுத் தலைவர்  சந்தோஷ் சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர்  ஜி.வி. பாண்டியராஜ், ஐ.ஆர்.எஸ்., இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ‘டாப்பர்ஸ் டாக்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் AIIMS, JIPMER, IIT மற்றும் NIT ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் அலன் முன்னாள் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடினர். அவர்கள் தங்களது தேர்வுத் தயாரிப்பு பயணம், எதிர்கொண்ட சவால்கள், கற்றல் அனுபவங்கள் மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்த பயனுள்ள தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். போட்டித் தேர்வு பயணத்தை வெற்றிகரமாகக் கடந்த சாதனையாளர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை இந்த அமர்வு மாணவர்களுக்கு வழங்கியது.திறப்பு விழாவுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ஊடகப் பிரதிநிதிகள் அலன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய அலன் கரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி  சி.ஆர். சௌத்ரி, “திருச்சி மையத்தின் தொடக்கம், தமிழ்நாடு முழுவதும் மேலும் அதிகமான மாணவர்களுக்கு தரமான கல்வி வழிகாட்டுதலை எளிதில் கிடைக்கச் செய்வதற்கான எங்களது முயற்சியில் ஒரு முக்கியமான படியாகும். திருச்சியில் திறமையும், சாதிக்கும் ஆர்வமும் கொண்ட மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் சூழல், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பில் ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் ஆதரவளிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்றார்.

அலன் கரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தென் மண்டலத் தலைவர்  மகேஷ் யாதவ் கூறுகையில், “தமிழ்நாடு எப்போதும் எங்களுக்கு முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. திருச்சி மையத்தின் தொடக்கம், மாநிலம் முழுவதும் எங்களது கல்விச் சூழலை விரிவுபடுத்துவதற்கான எங்களது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மையம் முக்கியமான கல்வி மையமாக உருவாகும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

அலன் கரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்விப் பிரிவுத் தலைவர்  சந்தோஷ் சிங் கூறுகையில், “இந்த மையத்தின் மூலம், மாணவர்கள் தங்களது இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு உதவும் வகையில், முறையான தேர்வுத் தயாரிப்பு, கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.

திருச்சி மையத்தின் தொடக்கத்தின் மூலம், அலன் தனது கல்விச் சூழலை மேலும் விரிவுபடுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும், முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்ற தங்களது இலக்குகளை நோக்கி முன்னேறவும் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form