மேட்டுப்பாளையம் சாலையில் ராயல்ஓக் ஃபர்னிச்சர் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஸ்டோர் திறப்பு

இந்தியாவின் முன்னணி ஃபர்னிச்சர் பிராண்டான ராயல்ஓக் ஃபர்னிச்சர், கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்டோரைத் திறந்துள்ளது. இந்த ஸ்டோர் அமர் ஜோதி சரோஜ் நகர், மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர், பழமுதிர் நிலையம் எதிரில், விஜி மருத்துவமனை அருகில், கோயம்புத்தூர் என்ற முகவரியில் அமைந்துள்ளது. + 91 63644 63220 என்ற தொலைபேசி மூலம் ஸ்டோருக்கு தொடர்பு கொள்ளலாம்.

16,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்டோரை கே.ஜி. மருத்துவமனை மற்றும் கே.ஜி. குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், யுபிஎஸ்சி முன்னாள் உறுப்பினரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் இ. பாலகுருசாமி, கங்கா மகளிர் மற்றும் குழந்தைகள் மையத்தின் ஆலோசகர் டாக்டர் எஸ். ஆனந்தி, M/s கார்னிஷ் இண்டீரியர்ஸ் நிறுவனத்தின் ஃபிரான்சைஸ் பார்ட்னர் திரு. பன்னீர்செல்வம், கொடிசியா தலைவர் வி. ரங்கசாமி,  ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம், மற்றும் ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. மதன் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய ஸ்டோரில் ராயல்ஓக்கின் கன்ட்ரி கலெக்ஷன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லிவிங் ரூம்கள், படுக்கையறைகள், டைனிங் பகுதிகள், ஸ்டடி மற்றும் அலுவலகம், வெளிப்புற இடங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஃபர்னிச்சர்கள் இங்கு கிடைக்கின்றன. சர்வதேச வடிவமைப்புகளை மலிவு விலையில் ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய ராயல்ஓக் ஃபர்னிச்சர் நிறுவனத்தின் தலைவர் திரு. விஜய் சுப்ரமணியம் கூறுகையில், “கோயம்புத்தூரில் எங்களது ஃபிளாக்ஷிப் ஸ்டோரைத் திறப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 250-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களைக் கொண்டுள்ள நிலையில், இந்த புதிய ஸ்டோர் திறப்பு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான எங்களது உறுதிப்பாட்டையும், இந்த சந்தையின் வளர்ச்சி வாய்ப்புகள் மீதான எங்களது நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. கோயம்புத்தூர் மக்கள் மலிவு விலையில் சர்வதேச தரத்திலான ஃபர்னிச்சர்களை விரும்பி வரவேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த விரிவாக்கம் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் விற்பனையாளர்கள் மற்றும் ஃபிரான்சைஸிகளுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form