டிவிஎஸ் ஜூபிடர், புத்தம் புதிய டூயல்-டோன் ஸ்பெக்ட்ரல் வண்ணங்களுடன் களமிறங்குகிறது

 


டிவிஎஸ் மோட்டார் கம்பெனி  இந்தியாவின் முன்னணி குடும்ப ஸ்கூட்டரான டிவிஎஸ் ஜூபிடரில் புதிய 'டூயல் டோன் ஸ்பெக்ட்ரல் ரேஞ்ச்'  மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 110சிசி ஸ்கூட்டர் பிரிவில் முதன்முறையாக ஸ்பெக்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்பெக்ட்ரல் காப்பர் ஆகிய இரண்டு தனித்துவமான டூயல்-டோன் வண்ணங்களை இந்த புதிய மாடல் கொண்டுவந்துள்ளது. இந்தத் தனித்துவமான வண்ணங்களின் தோற்றத்திற்குப் பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட இன்னர் பேனல்கள், புதிய நிறத்திலான சீட் மற்றும் க்ரோம் ஃபினிஷ் ரியர் வியூ மிரர்கள் ஆகியவை இந்த ஸ்கூட்டருக்கு ஒரு ப்ரீமியம் மற்றும் அசத்தலான தோற்றத்தைக் கொடுக்கின்றன.  புதிய டிவிஎஸ் ஜூபிடர் டூயல் டோன் ஸ்பெக்ட்ரல் மாடல், அங்கீகரிக்கப்பட்ட டிவிஎஸ் விற்பனை நிலையங்களில் விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ₹89,825/- ஆகும்.

 ரைடர் மற்றும் பின்னால் அமர்பவர் இருவருக்குமான பேக்ரெஸ்ட் வசதியுடன் கூடிய நீளமான ப்ரீமியம் சீட் இதில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்,  சீக்வென்ஷியல் டர்ன் சிக்னல் இண்டிகேட்டர்கள், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், கோணத்திற்கேற்ப நிறம் மாறும் டிவிஎஸ் ஸ்பெக்ட்ரல் கலர் டெக்னாலஜி ஃபினிஷிங், 33 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் மற்றும் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் தொழில்நுட்ப வசதிகளும் இதில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. 113.3 சிசி சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் என்ஜினுடன் இயங்கும் இந்த ஸ்கூட்டர், 5.9 கிலோ வாட் பவர் மற்றும் 'டிவிஎஸ் ஐகோ அசிஸ்ட்' தொழில்நுட்பத்துடன் 9.8 என்எம் வரையிலான டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது சிறப்பான மைலேஜைத் தருவதோடு, வேகமான பிக்-அப்பையும் வழங்குகிறது. அன்றாடப் பயண அனுபவத்தின் ஒவ்வொரு பகுதியையும் மேலும் சிறப்பாக்கும் நோக்கில் இந்த புதிய டூயல் டோன் ஸ்பெக்ட்ரல் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் கம்யூட்டர் அண்ட் இவி வர்த்தகப் பிரிவு சீனியர் வைஸ் பிரசிடென்ட் அனிருத்தா ஹல்தார் பேசுகையில், "பல ஆண்டுகளாகக் குடும்பங்களின் தேவைகளை உணர்ந்து, பயனுள்ள பல புதிய மாற்றங்களுடன் இது தொடர்ந்து மெருகேறி வருகிறது. அந்த வகையில், நவீன டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் உருவாகியுள்ள இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் டூயல்-டோன், முதல்முறையாக அறிமுகமாகியுள்ள ஸ்பெக்ட்ரல் வண்ணங்கள் மற்றும் சீக்வென்ஷியல் டர்ன் சிக்னல் விளக்குகள் போன்ற சிறப்பம்சங்களுடன் ஒரு நவீனமயமான அனுபவத்தை வழங்குகிறது. இந்த புதிய வடிவமைப்பு மேம்பாடுகள், இன்றைய நவீன குடும்பங்களின் முதல் தேர்வாக டிவிஎஸ் ஜூபிடர் தொடர்ந்து நீடிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form