பஜாஜ் ஃபின்சர்வ் மியூச்சுவல் ஃபண்ட், தனது முன்னணி ஃபண்டான பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டின் மூன்றாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இது, தனித்துவமான மெகா டிரெண்டஸ் உத்தியைப் பயன்படுத்தி, லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஓப்பன் எண்டட் ஈக்விட்டி திட்டமாகும்.
14 ஆகஸ்ட் 2023 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த நிதியின் நேரடித் திட்டம் -வளர்ச்சித் திட்டம் 18.21% CAGR வருமானத்தை வழங்கியுள்ளது. இதே காலகட்டத்தில் இதன் பெஞ்ச்மார்க்கான பிஎஸ்இ 500 டிஆர்ஐ வழங்கிய CAGR 12.74% ஆகும். அதாவது, 13 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, இந்த நிதி தனது பெஞ்ச்மார்க்கை 5.47 சதவீதப் புள்ளிகள் தாண்டியுள்ளது. அதே கால கட்டத்தில், வழக்கமான திட்டம் -வளர்ச்சித் திட்டம் 16.59% CAGR வருமானத்தை வழங்கியுள்ளது.14 ஆகஸ்ட் 2023 முதல் 13 ஆகஸ்ட் 2026 வரையிலான முழு மார்க்கெட் சுழற்சியில், நேரடித் திட்டம்-வளர்ச்சி ஆனது, 65.2% முழுமையான வருவாயை வழங்கியுள்ளது, இதனுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்இ 500 டிஆர்ஐ 43.3% வழங்கியுள்ளது. அதே காலத்தில் வழக்கமான திட்டம்-வளர்ச்சி விருப்பத் தேர்வு 58.5% வழங்கியுள்ளது.
13 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, திட்டம் தொடங்கிய போது டைரக்ட் திட்டத்தில் செய்யப்பட்ட ₹10,000 முதலீடு ₹16,513 ஆக வளர்ந்திருக்கும், இதனுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்இ 500 டிஆர்ஐ-யில் ₹14,325 ஆகவும், இத்திட்டத்தின் கூடுதல் பெஞ்ச்மார்க்கான நிஃப்டி 50 டிஆர்ஐ-யில் ₹13,003 ஆகவும் வளர்ந்திருக்கும். வழக்கமான திட்டம்-வளர்ச்சி விருப்பத் தேர்வில் செய்யப்பட்ட அதற்கு இணையான முதலீடு ₹15,843 ஆக வளர்ந்திருக்கும்.
பிஎஸ்இ 500 டிஆர்ஐ இன் 0.50 உடன் ஒப்பிடுகையில், இந்த ஃபண்ட் 0.82 என்ற ஷார்ப் விகிதத்துடன் சாதகமான ரிஸ்க்-அட்ஜஸ்டட் செயல்பாட்டு புரொஃபைலை வழங்கியுள்ளது, இது பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிடுகையில் சாதகமான ஆபத்து-வருவாய் புரொஃபைலைப் பிரதிபலிக்கிறது. இது பெஞ்ச்மார்க்கின் 14.22 உடன் ஒப்பிடுகையில் 13.24 என்ற குறைந்த ஸ்டாண்டர்ட் டீவியேஷனையும், திட்டம் தொடங்கிய நாள் முதல் 4.48% ஜென்சன்ஸ் ஆல்ஃபாவையும் பதிவு செய்துள்ளது. இந்த அளவீடுகள் இணைந்து, வருவாயை உருவாக்கும் அதே வேளையில் அபாயத்தை நிர்வகிப்பதில் ஃபண்டின் கட்டுப்பாடு கொண்ட a எடுத்துக் காட்டுகின்றன.
31 ஜூலை 2026 நிலவரப்படி, இந்த ஃபண்டின் நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துக்கள் ₹8,149.81 கோடியாக இருந்தது, இது 3,22,231 முதலீட்டாளர்களின் ஃபோலியோக்களில் பரவியுள்ளது.
13 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, இதன் நேரடித் திட்டம்-வளர்ச்சி என்ஏவி 16.52 ஆகவும், வழக்கமான திட்டம்-வளர்ச்சி என்ஏவி 15.85 ஆகவும் இருந்தது.
நீண்ட கால முதலீடு செய்வதற்கான ஒரு மெகா டிரெண்ட்ஸ் அணுகுமுறை
பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் ஆனது, நீண்டகாலத் தாக்கம் கொண்ட கட்டமைப்பு ரீதியான நகர்வுகளால் பயனடையக் கூடிய நிலையில் உள்ள நிறுவனங்களை அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு தனித்துவமான மெகா டிரெண்ட்ஸ் முதலீட்டு வியூகத்தைக் கடைப்பிடிக்கிறது
அதன் நிறுவனத் தனியுரிமை பெற்ற T.R.E.N.D.S. கட்டமைப்பு, வாய்ப்புகளை ஆறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது:
● தொழில்நுட்பம்
● ஒழுங்குமுறை மாற்றங்கள்
● பொருளாதார மாற்றம்
● இயற்கை மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மை
● மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் நகர்வுகள்
● சமூக மாற்றம்
இந்த உத்தியானது, கட்டமைப்பு போக்குகளை மேலிருந்து-கீழ் அடையாளம் காண்பதையும், கீழிருந்து-மேல் (bottom-up) நிறுவன ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டுக் கட்டுப்பாட்டையும் இணைக்கிறது. மேலும், இது ஏஎம்சி இன் InQuBe முதலீட்டுத் தத்துவத்தையும் பயன்படுத்துகிறது. இந்தத் தத்துவம், தகவல் சார்ந்த, கணிதம் சார்ந்த மற்றும் நடத்தை சார்ந்த நுண்ணறிவுகளை போர்ட்ஃபோலியோ முடிவுகளில் ஒருங்கிணைக்கிறது.
70% என்ற உயர் ஆக்டிவ் ஷேர் உடன், இந்த நிதி தனித்துவமான, உறுதியான முதலீட்டு நம்பிக்கையின் அடிப்படையிலான போர்ட்ஃபோலியோவைப் பராமரிக்கிறது. தனது வாக்குறுதிக்கு (லேபிள்) ஏற்ப, பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், பல்வேறு மார்க்கெட் சுழற்சிகளுக்கு ஏற்ப முதலீட்டு ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. இதில் IT துறையில் குறைவான முதலீட்டு ஒதுக்கீடும், நுகர்வோர் நீண்ட காலம் பயன்படுத்தும் பொருட்கள், மருந்துத் துறை, வாகன உதிரி பாகங்கள் மற்றும் பல்வகைப் படுத்தப்பட்ட உலோகங்கள் ஆகிய துறைகளில் அதிக கவனமும் அடங்கும். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலான முதலீட்டு அணுகுமுறை, பல்வேறு மார்க்கெட் சுழற்சிகளிலும் இந்த நிதி அதன் பெஞ்ச்மார்க்கைத் தாண்டிச் செயல்பட உதவியுள்ளது. அதே சமயம், பெரும்பாலான மார்க்கெட் சரிவுகளின் போது இழப்புகளை மட்டுப்படுத்துவதைக் குறி வைக்கவும், அவற்றிலிருந்து விரைவாக மீளவும் இது உதவியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த ஃபண்ட் சுகாதாரம், ஒப்பந்த ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சேவைகள், ஆற்றல் மாற்றம் மின்மயமாக்கல் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி வளர்ச்சியுடன் தொடர்புடைய துல்லியப் பொறியியல் உள்ளிட்ட கருப்பொருள்களில் முதலீடு செய்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு மையங்கள், உள்நாட்டு உற்பத்தி, சரக்குகள், மின்சார EV வாகனங்கள் மற்றும் பேட்டரி சேமிப்பு ஆகியவற்றில் உருவாகி வரும் வாய்ப்புகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறது.
இந்த முக்கிய சாதனை நிலை குறித்துப் பேசுகையில், பஜாஜ் அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் திரு கணேஷ் மோகன் அவர்கள் கூறினார்: “மூன்று ஆண்டுகளை நிறைவு செய்வது, எங்கள் முதன்மையான ஈக்விட்டி நிதியான பஜாஜ் ஃபின்சர்வ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டிற்கு ஒரு முக்கியமான சாதனையாகும். ஆகஸ்ட் 2023 இல் தொடங்கப்பட்டது முதல், இந்த நிதியானது ரூ.8,100 கோடிக்கும் மேற்பட்ட மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்களாக வளர்ந்துள்ளது மற்றும் 31 ஜூலை 2026 நிலவரப்படி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர் ஃபோலியோக்களைக் கொண்டுள்ளது. இந்த வளர்ந்து வரும் பங்கேற்பு, முதலீட்டாளர்கள் எங்களின் தனித்துவமான, மெகாட்ரெண்ட்ஸ் சார்ந்த அணுகுமுறையிலும், லேபிளுக்கு உண்மையாக இருப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டிலும் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.இந்த ஃபண்டின் பயணமானது, கட்டுப்பாடான முதலீடு செய்தல், நன்கு சிந்தித்த அபாய நிர்வாகம் மற்றும் மார்க்கெட் சுழற்சிகளில் சீரான செயல்படுத்துதல் ஆகியவை நீண்ட கால செல்வ உருவாக்கத்திற்கு இன்றியமையாதவை ஆகும் என்ற எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதி செய்கிறது.”
பஜாஜ் அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட்டின் தலைமை முதலீட்டு அதிகாரி திரு நிமேஷ் சந்தன் அவர்கள் மேலும் கூறுகையில், “பஜாஜ் ஃபின்சர்வ் ஃபிளெக்சி கேப் ஃபண்ட் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், எதிர்கால லாபக் குழுக்களை உருவாக்கக்கூடிய மெகாட்ரெண்டுகளைக் அடையாளம் காணுதல் மற்றும் அவற்றிலிருந்து பலன் பெறக் கூடிய திறன்கள், பேலன்ஸ் ஷீட் பலம் மற்றும் நிர்வாக ஆழம் ஆகியவற்றைக் கொண்ட தரமான வணிகங்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே எங்கள் முதலீட்டுக் கொள்கை தொடர்ந்து மையமாக உள்ளது. மார்க்கெட் மூலதன மதிப்புகளில் எங்களின் நெகிழ்வுத் தன்மை (flexibility), தொழில்நுட்ப, ஒழுங்குமுறை, மக்கள்தொகை அமைப்பு, நீடித்து நிலைக்கும் தன்மை, பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களிலிருந்து எழும் வாய்ப்புகளைப் பின் தொடர எங்களை அனுமதிக்கிறது, அதே சமயம், நாங்கள் அடிப்படை ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டுக் கட்டுப்பாட்டில் உறுதியாக நிலைத்திருக்கிறோம். நீண்ட காலத்திற்கு மதிப்பைக் கூட்டும் திறன் கொண்ட நீடித்த வணிகங்களின் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்.” என்று கூறினார்.