இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமும், டிவிஎஸ் வேணு குழுமத்தின் ஒரு அங்கமுமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தனது 'டிவிஎஸ் ரைடர் சூப்பர் ஸ்குவாட் எடிஷன்' வரிசையில் 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக, மார்வெல் திரைப்படங்களின் இறுதியில் வரும் போஸ்ட் கிரெடிட் காட்சிகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பாரம்பரியத்தைப் பின்பற்றி, புதிதாக வெளியான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சிக்குப் பிறகு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் இந்த புதிய 'டாக்டர் டூம்' மாடலைத் திரையிட்டு டிவிஎஸ் ரைடர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மார்வெல்லின் சக்திவாய்ந்த 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தின் கம்பீரமான தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த புதிய சூப்பர் ஸ்குவாட் எடிஷன் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறும் ஒரு தனித்துவமான பலவண்ண ட்ராவல் ஃபினிஷிங்குடன் 'ஸ்பெக்ட்ரல் கிரீன்' வண்ண வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தின் கம்பீரமான ஆளுமையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல், அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற செயல்பாட்டையும் நவீன பாணியையும் விரும்பும் இளம் பைக் பிரியர்களிடையே டிவிஎஸ் ரைடரின் தனித்துவமான அடையாளத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
125 சிசி பிரிவில் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக விளங்கும் டிவிஎஸ் ரைடர் சூப்பர் ஸ்குவாட் எடிஷன், தனது சிறப்பான செயல்திறன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை இதில் தொடர்ந்து ஒருங்கிணைத்திருக்கிறது. ஆற்றல்மிக்க 3-வால்வு எஞ்சின் கொண்ட இந்த பைக், 85-க்கும் மேற்பட்ட கனெக்ட்டெட் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ரிவர்ஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் வேகமான முடுக்கத்திற்கு உதவும் 'iGO அசிஸ்ட்' தொழில்நுட்பத்துடன் iGO Assist technology வருகிறது. இதன் அகலமான டயர்கள் சாலையில் கூடுதல் பிடிப்பையும், டாப் வேரியண்ட்டில் உள்ள சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன்கூடிய டூயல் டிஸ்க் பிரேக்குகள்பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்கின்றன.
கடந்த 2023-ம் ஆண்டில் ’அயர்ன் மேன்’ மற்றும் ’பிளாக் பேந்தர்’ கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் சூப்பர் ஸ்குவாட் எடிஷனை அறிமுகப்படுத்தியதன் மூலம், மார்வெல் தீம் கொண்ட இந்தியாவின் முதல் மோட்டார்சைக்கிளை டிவிஎஸ் ரைடர் களமிறக்கியது. அதைத் தொடர்ந்து 2025-ல் ’டெட் பூல்’ மற்றும் ’உல்வரின்’ மாடல்கள் மூலம் இந்தக் கூட்டணி மேலும் விரிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அறிமுகமாகியுள்ள 'டாக்டர் டூம்' எடிஷன், கம்பீரமான வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் புதிய தலைமுறை பைக் பிரியர்களுக்கான பிரத்தியேக அனுபவத்தை ஒருங்கிணைத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
புதிய ஸ்பெக்ட்ரல் கிரீன் நிறத்தில் அறிமுகமாகியுள்ள 'டிவிஎஸ் ரைடர் சூப்பர் ஸ்குவாட் எடிஷன்' தற்போது அனைத்து டிவிஎஸ் மோட்டார் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்களிலும் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ₹95,320(எக்ஸ் ஷோரூம், டெல்லி)
