பேட் சேஞ்ச் அலர்ட்’ வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட Stayfree Secure XL அறிமுகம்

 


மாதவிடாய் காலங்களில், கசிவு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும், இது நாள் முழுவதும் அவர்கள் தங்கள் பேட்களை அடிக்கடி சரிபார்க்க வழிவகுக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவின் முன்னணி மாதவிடாய் சுகாதார பிராண்டான ஸ்டேஃப்ரீ (Stayfree), அதன் மேம்படுத்தப்பட்ட Stayfree Secure XL-ஐ அறிமுகப்படுத்துகிறது. 

புதிய (மேம்படுத்தப்பட்ட) ஸ்டேஃப்ரீ செக்யூர் எக்ஸ்எல் அதன் 'டபுள் லீக் லாக்' (Double Leak Lock) தொழில்நுட்பத்தின் மூலம் 12 மணிநேரம் வரை இரட்டிப்பு பாதுகாப்பை1 (Double Protection) வழங்குகிறது, இதில் வெளிப்புறத் தடுப்பு 'பேட் சேஞ்ச் அலர்ட்'3 (Pad Change Alert³) ஆக செயல்படுகிறது, இது இந்தப் பிரிவில் ஒரு முன்னோடி புதுமையாகும். மேம்படுத்தப்பட்ட ஸ்டேஃப்ரீ செக்யூர் எக்ஸ்எல் மூலம், இந்த பிராண்ட் பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களை நம்பிக்கையுடன் கையாளவும், முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்பட்ட வசதியைப் பெறவும் அவர்களுக்கு வழிவகுக்கிறது! 

விரிவான நுகர்வோர் ஆராய்ச்சி மற்றும் சரிபார்ப்பின் ஆதரவுடன், ஸ்டேஃப்ரீ செக்யூர் எக்ஸ்எல் பெண்களின் சுகாதாரப் பிரிவை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, பெண்கள் தங்களின் நாளை சிறந்த முறையில் கட்டுப்படுத்த அவர்களுக்கு 'வசதியான பாதுகாப்பை' (‘comfortable protection’) வழங்குவதற்கான பிராண்டின் அர்ப்பணிப்பையும் மேலும் வலுப்படுத்துகிறது. உண்மையில், ஸ்டேஃப்ரீ செக்யூர் எக்ஸ்எல் குறித்த நுகர்வோர் ஆய்வுகள் மற்றும் சோதனைகளில், 100% பெண்கள் இந்த மேம்படுத்தப்பட்ட புராடக்டை விரும்புவதாக2 ஒப்புக்கொண்டனர்.

Stayfree Secure XL உடன் இரட்டிப்பு பாதுகாப்பு: டபுள் லாக் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது

முதலாவது லாக்: இரத்தம் உட்புறத் தடுப்பில் இருக்கும்போது - உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை! 

இரண்டாவது லாக்: வெளிப்புறத் தடுப்பு சிவப்பாக மாறத் தொடங்கும்போது - பேடை மாற்ற வேண்டிய நேரம் இது.

ஸ்டேஃப்ரீ இந்தியாவின் மார்க்கெட்டிங் இயக்குனர் சுப்ரியா சீனிவாசா அவர்கள் இவ்வாறு கூறினார், “மாதவிடாய் என்பது உடல் ரீதியான அசௌகரியங்களை மட்டுமல்லாமல், கழிப்பறைகளைப் பயன்படுத்துவது, போதுமான பேட்கள் இருக்கிறதா என்ற தொடர்ச்சியான கணக்கீடுகள், மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் என பெண்கள் சுமக்கும் குறிப்பிடத்தக்க மனச் சுமையையும் சேர்த்தே கொண்டுவருகிறது. ஸ்டேஃப்ரீயில், நாங்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, அவர்களின் மாதவிடாய் கால அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இங்குதான் ஸ்டேஃப்ரீ செக்யூர் எக்ஸ்எல்-இன் புராடக்ட் மேம்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இது, 'பேடை எப்போது மாற்ற வேண்டும்?' என்ற அவர்களின் முக்கியப் பதற்றங்களில் ஒன்றை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் 'பேட் சேஞ்ச் அலர்ட்' அம்சத்தின் மூலம், ஸ்டேஃப்ரீ செக்யூர் எக்ஸ்எல்  பிராண்டின் காப்புரிமை பெற்ற லீக் லாக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 12 மணிநேரம் வரை இரட்டிப்பு பாதுகாப்பை1 வழங்குகிறது, இதனால் பெண்கள் தங்களைப் பற்றியும் தங்களின் நாளைப் பற்றியும் அதிகக் கவனம் செலுத்த முடியும்.”

1இரண்டு தடுப்புகள் பேடின் ஓரங்களில் ஓடி இரத்தத்தை லாக் செய்கின்றன. வெளிப்புறத் தடுப்பு சிவப்பாக மாறத் தொடங்கும்போது, உங்கள் பேடை மாற்ற வேண்டிய நேரம் இது. 

2 2026இல் இந்தியாவில் எம்எம்ஆர் மூலம் நடத்தப்பட்ட ஆய்வகத் தரவு & நுகர்வோர் சோதனையின் அடிப்படையில். 

3 வழிகாட்டுதலின்படி பயன்படுத்தும்போது, தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம்.

கென்வியூ நிறுவனத்தின் குழந்தை மற்றும் பெண்கள் சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர் திலிப் திரிபாதி அவர்கள் மேலும் கூறியதாவது, "பாரம்பரியமாக, மாதவிடாய் சுகாதாரப் பிரிவு 'பாதுகாப்பை' வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளது, இது முக்கியமானது என்றாலும், மாதவிடாய் நாட்களிலும் 'வசதிக்கான' தேவையை ஒருபோதும் பூர்த்தி செய்யவில்லை. பாதுகாப்போடு வசதியையும் இணைத்த முதல் பிராண்டுகளில் ஸ்டேஃப்ரீயும் ஒன்று, இது பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் நம்பிக்கையுடனும் வசதியுடனும் இருக்க வழிவகுக்கிறது. Stayfree Secure XL -இல் எங்களது இந்த சமீபத்திய புதுமை, பெண்கள் மிகவும் பிஸியான வாழ்க்கையை வாழும்போது அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, இந்த அர்ப்பணிப்பையும் மேலும் வலுப்படுத்துகிறது. 'பேட் சேஞ்ச் அலர்ட்' மற்றும் 'டபுள் லீக் லாக் டெக்னாலஜி' ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளைக் கொண்ட பெண்களிடமிருந்து பெறப்பட்ட விரிவான ஆராய்ச்சி மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. அதிநவீன தொழில்நுட்பத்தை பயனர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்புடன் இணைப்பதன் மூலம், மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதே எங்களுடைய நோக்கமாகும். இது அவர்கள் நம்பிக்கையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க அனுமதிக்கிறது." 

இந்த அறிமுகத்தை இன்னும் பெரிய அளவில் கொண்டு சேர்க்க, ஸ்டேஃப்ரீ ஒரு விரிவான மார்க்கெட்டிங் விளம்பரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது, இதில் பிரபலமான பாலிவுட் நடிகையும் பிராண்ட் தூதருமான கியாரா அத்வானி நடிக்கும் ஒரு தொலைக்காட்சி விளம்பரமும் அடங்கும். இதை பிரபல பாலிவுட் இயக்குனர் சூஜித் சிர்கார் இயக்கியுள்ளார், மேலும் ஆம்னிகாம் (மேக்னான் இந்தியா) இதன் தயாரிப்பு நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்த விளம்பரப் படத்திற்கு இன்ஃப்ளூயன்ஸர் செயல்பாடுகள், இலக்கு வைக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் ஆன்-கிரவுண்ட் செயல்பாடுகள், சாம்பிள் வழங்குதல், சுவர் ஓவியங்கள் மற்றும் பலவும் ஆதரவாக இருக்கும். 

ஸ்டேஃப்ரீயின் இந்த சமீபத்திய புதுமை குறித்து, ஸ்டேஃப்ரீயின் பிராண்ட் தூதர் கியாரா அத்வானி அவர்கள் கூறியதாவது, “இன்று, பெண்கள் தங்களுடைய வேலை, இலட்சியங்கள், தனிப்பட்ட விருப்பங்கள், குடும்பம் என பலவற்றையும் சமநிலைப்படுத்தி, தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்களது கனவுகளையும் ஆசைகளையும் அடைய பாடுபடும் வேளையில், மாதவிடாய் நாட்கள் அதற்கே உரிய சவால்களைக் கொண்டுவரக் கூடும். இருப்பினும், ஸ்டேஃப்ரீ எப்போதும் எனக்கு துணையாக இருந்து ஆதரவளித்து வருகிறது, மேலும் மேம்படுத்தப்பட்ட ஸ்டேஃப்ரீ செக்யூர் எக்ஸ்எல் மூலம் இந்த வாக்குறுதி இன்னும் வலுவடைகிறது. இது பேட்களை அடிக்கடி மாற்ற வேண்டுமோ என்ற கவலையைப் போக்கி, பெண்களுக்கு நாள் முழுவதும் பதற்றம் ஏதுமில்லாமல், முழுமையான நம்பிக்கையை அளிக்கிறது."

மேம்படுத்தப்பட்ட Stayfree Secure XL தற்போது சூப்பர் மார்க்கெட்டுகள், கிராணா ஷாப்கள், மற்றும் இ-காமர்ஸ் மற்றும் குவிக் காமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது, இது ஒரு மிகச்சிறந்த மாதவிடாய் பாதுகாப்புத் தீர்வைத் தேடும் அனைத்துப் பெண்களுக்கும் எளிதான அணுகலை வழங்குகிறது. 


Post a Comment

Previous Post Next Post

Contact Form