கோயம்புத்தூர் உணவுப் பிரியர்களின் மாறிவரும் சுவை மற்றும் சோசியல் லைஃப்ஸ்டைலுக்கு ஏற்ப, ‘ஓ பை தமரா’ நிறுவனமானது தங்களின்ப்ரத்யோக ‘ஹை டைவ்’ உணவகத்தை ஒரு புத்தம் புதிய உணவு மற்றும் பானங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தின் உன்னதமான கதைகளால் ஈர்க்கப்பட்ட இந்த புதிய ‘ஹை டைவ்’, மக்களை நீண்டகாலமாக ஒன்றிணைத்த இசை, கலாச்சாரம் மற்றும் சமூக உணர்வை அடிப்படையாகக் கொண்டு, அந்த ஏக்கம் நிறைந்த காலத்தின் சாரத்தை இன்றைய தலைமுறைக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்து வழங்குகிறது.
இதன் சிறப்பம்சங்களாக, 'உலகளாவிய சமையல், உள்ளூர் ஆன்மா' என்ற சிந்தனையுடன் கொண்ட உணவுப் பட்டியல், முற்றிலும் புதிய காக்டெய்ல் தேர்வுகள் மற்றும் பிரத்யேக அனுபவங்களுக்கான காலண்டர் அட்டவணை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது சாதாரண சந்திப்புகள் முதல் வார இறுதி கொண்டாட்டங்கள் வரை அனைத்திற்கும் ஒரு அட்டகாசமான சூழலை உருவாக்குகிறது.
சர்வதேச அளவில் விரும்பப்படும் உணவுகளுடன், தமிழ்நாட்டு உணவுப் பிரியர்களுக்குப் பரிச்சயமான சுவைகள், மசாலாக்கள் மற்றும் பருவகாலப் பொருட்களை இணைத்து, இந்த உணவுப் பட்டியல் பழக்கப்பட்ட சுவையையும் புதிய தேடலையும் சம அளவில் வழங்குகிறது. நாவில் நடனமாடும் சுவைகொண்ட உணவுகள், குடும்பத்துடனான கூடல்கள் மற்றும் நிதானமான மாலை பொழுதுகள் மீதான கோயம்புத்தூரின் காதலை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வு, 'ஹை டைவ்' உணவகத்தை உணவு உண்பதற்கும் சமூகக் கூடல்களுக்குமான ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது. இதில் கறிவேப்பிலை பட்டர் கார்லிக் பிரான்ஸ் , செட்டிநாடு ஸ்பைஸ்டு லோட்டஸ் ஸ்டெம்ஸ் , குறுமிளகு கோழி பீட்சா மற்றும் ஆச்சி மீன் குழம்பு பவுல் ஆகியவை தனித்துவமான படைப்புகளாகக் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
முக்கிய உணவுப் பட்டியலைத் தாண்டி, தலைமைச் சமையல் கலைஞர்களின் (chef) சீசன் ஸ்பெஷல்ஸ் மற்றும் பிரத்யேக உணவு-பான காமினேஷன் ஆகியவை எப்போதும் புதிய சுவைகளைக் கண்டறியும் வாய்ப்பை வழங்கும். "உணவிற்காக வாருங்கள், பானங்களுக்காகத் தங்குங்கள், இரண்டிற்காகவும் மீண்டும் வாருங்கள்" என்ற சமையலறையின் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், தலைமைச் சமையல் கலைஞரின் பரிந்துரைகளும் இந்த அனுபவத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சமையல் கலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், 'டைவ் டீப்' என்ற சிக்னேச்சர் காக்டெய்ல் கலவையைக் கொண்ட புத்தம் புதிய பானங்கள் சீரிஸூம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை நெக்ரோனி , செட்டிநாடு மியூல் , தி ஃபர்ஸ்ட் டைவ், ஹை நூன் மற்றும் தி டீப் எண்ட் போன்ற படைப்புகளை உள்ளடக்கிய இந்தத் தட்டச்சு, கிளாசிக் காக்டெய்ல்களுக்கு நவீன வடிவத்தைத் தருவதோடு, உள்ளூர் பொருட்கள் மற்றும் பிராந்திய சுவைகளின் ஈர்ப்பையும் பிரதிபலிக்கிறது.
O by Tamara உணவகத்தின் பொது மேலாளர் உமாபதி அமிர்தம் கூறுகையில், “சிறந்த விருந்தோம்பல் அனுபவங்கள் என்பது பெரும்பாலும் மாலைப் பொழுது முடிந்தாலும், நீண்ட நாட்களுக்கு நம் நினைவில் நிலைத்திருப்பவை ஆகும். ‘ஹை டைவ்’ எப்போதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு இடமாகவே இருந்து வருகிறது, ஆனால் கோயம்புத்தூரின் அதிநவீனமாக மாறிவரும் லைஃப்ஸ்டைல் சூழலைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய இடமாக இது இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். விருந்தினர்கள் மீண்டும் மீண்டும் வர விரும்பும் ஒரு மாலைப் பொழுதை உருவாக்குவதற்காகவே, உணவுப் பட்டியல் மற்றும் காக்டெய்ல் தேர்வுகள் முதல் இங்குள்ள அனுபவங்கள் மற்றும் சூழல் வரை அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இந்த கொண்டாட்டத்தை கூடுதல் சிறப்பாக்கும் வகையில், 'ரெட்ரோ நைட்ஸ்' (Retro Nights) என்ற தொடர் இசை நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தசாப்தங்கள் மற்றும் இசை வகைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் மெய்மறக்கச் செய்யும் சூழல் ஆகியவற்றின் மூலம் மக்களை ஒன்றிணைக்கின்றன. இதுமட்டுமின்றி, நேரடி இசை, பிரன்ச் (brunch) உணவுகள், செஃப்ஸ் டேபிள் அனுபவங்கள், விளையாட்டுத் திரையிடல்கள் மற்றும் பிரத்யேக உணவு-பான நிகழ்வுகள் ஆகியவையும் இந்த நாட்காட்டியில் இடம்பெறவுள்ளன. இவை இங்கு வரும் ஒவ்வொரு வருகையையும் தனித்துவமானதாக மாற்றுவதை உறுதி செய்கின்றன.
தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் 'ஹை டைவ்', அதன் தனித்துவமான உணவு, நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட பானங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வழங்கி, கோயம்புத்தூரின் சமூக வாழ்க்கை முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய இடமாகத் திகழ்கிறது.
