இந்தியா, இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தகத்தை அனுமதிக்கும் எப்டிஏ ஒப்பந்தத்தை எதிர்நோக்கும் நிலையில், ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனம் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் சிபியு மாடல் கார்களின் புதிய குறைக்கப்பட்ட விலைகளை அறிவித்துள்ளது. ரேஞ்ச் ரோவர் எஸ்வி மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி ஆகியவை எப்டிஏ மூலம் பயனடையும் முக்கிய மாடல்களாகும்.
இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரின் விலை ரூ.425 லட்சத்திலிருந்து ரூ. 350 லட்சமாக குறைத்துள்ளது. க்ளாஸ் மற்றும் சேட்டின் ஃபினிஷ்களில் புதிகாக சேர்க்கப்பட்டுள்ள எஸ்வி அல்ட்ரா மெட்டாலிக் பெயின்ட்ஸ் ரகங்களால் ரேஞ்ச் ரோவர் எஸ்வி-யின் முன்மொழியப்பட்ட மதிப்பீடு கணிசமாக உயர்ந்துள்ளது, இது இப்போது முதல் முறையாக வழக்கமான ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படுகிறது. மேலும், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி காரின் விலை ரூ.275 லட்சத்தில் இருந்து ரூ.235 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட விலைகள் எப்டிஏ ஒப்பந்தத்தால் செயல்படுத்தப்பட்ட புதிய வரி கட்டமைப்பை பின்பற்றி உருவாக்கப்பட்டவை, மேலும் இவை உடனடியாக நடைமுறைக்கு வரும். (* தொடக்க விலை எக்ஸ்-ஷோரூம்).
ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜன் அம்பா கூறுகையில், "இந்தியா -இங்கிலாந்து இடையிலான எப்டிஏ ஒப்பந்தம் செயல்படுத்தப்படவுள்ளதைத் தொடர்ந்து, அதன் நன்மைகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். ரேஞ்ச் ரோவர் எஸ்வி மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி ஆகிய கார்களின் விலைகளைக் குறைத்தது, எங்கள் வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்க வேண்டும் என்கிற எங்களது வாடிக்கையாளருக்கு முதல் உரிமை அளிக்கும் எங்களது அணுகுமுறை, மற்றும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த எப்டிஏ ஒப்பந்தமானது அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை அவர்கள் விரும்பும் மற்றும் வாங்க ஆசைப்படும் எஸ்வி போர்ட்ஃபோலியோவை பரிசிலிக்க அனுமதிக்கும்; மேலும், இந்த மாற்றம் ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர் எவோக், ரேஞ்ச் ரோவர் வெலார் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் உள்ளிட்ட உள்நாட்டில் தயாரிக்கப்படும் கார் மாடல்களின் விலைகளில் இங்கிலாந்து - இந்தியா இடையேயான எப்டிஏ ஒப்பந்தம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. டிஃபென்டர் மற்றும் டிஸ்கவரி ஆகிய கார்கள் ஐரோப்பாவின் ஸ்லோவாக்கியா நாட்டில் தயாரிக்கப்படுவதால் அவற்றின் தற்போதைய விலை வரம்புகள் அப்படி மாற்றமின்றி இருக்கும். எனவே இங்கிலாந்து -இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமான எப்டிஏ-வின் வரம்பிற்குள் இவை வராது.
