உலகின் நம்பர் 1 முக்கிய வீட்டு உபயோக சாதனங்கள் பிராண்டாக தொடர்ந்து 17 ஆண்டுகளாகத் திகழும் ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா, ஏஐ அட்மோக்ஸ் தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஸ்பார்டன் ஏஐ டவர் ஏர் கண்டிசனரை அறிமுகப்படுத்தி, நவீன வாழ்க்கை முறைக்கு சக்தி, பெருமை, துல்லியம் மற்றும் பிரீமியம் வடிவமைப்பின் புதிய வெளிப்பாட்டை கொண்டு வருகிறது.
செயல்திறனுக்கு இணையாக வலுவான தோற்றத்தையும் எதிர்பார்க்கும் வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஸ்பார்டன் ஏஐ டவ ஏசி, சக்திவாய்ந்த மற்றும் உயர்தர குளிர்விப்புடன், சிறந்த செயல்திறன் திறனையும் வழங்குகிறது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட பொறியியல் அம்சங்களால், இது ஒரு சாதாரண சாதனத்தைத் தாண்டி, அறையின் முக்கிய அம்சமாக மாறுகிறது. எளிமையான அழகியலையும், இயல்பாக ஒருங்கிணையும் தொழில்நுட்பத்தையும் விரும்பும் நுகர்வோருக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது, அடுத்த தலைமுறை புதுமைகள் மற்றும் நுகர்வோரின் தேவைகளை உண்மையாக பூர்த்தி செய்யும் சிந்தனையுள்ள வடிவமைப்பில் ஹையரின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இதில் ஏஐ க்ளைமேட் கண்ட்ரோல் 2.0 போன்ற மேம்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது பயனாளர்களின் பயன்பாட்டு முறைகளை கற்றுக்கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட குளிர்விப்பை வழங்குகிறது. இதனுடன் டைனமிக் என்விரோமெண்டல் அடாப்சன் இணைந்து, நிகழ்நேரத்தில் செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும், 1 கி.மீ. ஜியோஃபென்ஸ் வரம்புக்குள் பயனாளர் வருகையை முன்கூட்டியே கணித்து, அறையை முன்பே குளிர்விக்கும் ஏஐ ப்ரீ கூலிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இது பராமரிப்பையும் மிகவும் எளிதாக்குகிறது. ஏஐ ஓடியு சைக்ளோன் க்ளீன் அம்சம், சக்திவாய்ந்த ரிவர்ஸ் ஏர்ஃப்ளோ தொழில்நுட்பத்தின் மூலம் வெளிப்புற யூனிட்டை தானாக சுத்தம் செய்து, வேகமான குளிர்விப்பு, குறைந்த மின்சார பயன்பாடு மற்றும் ஆண்டு முழுவதும் நம்பகமான செயல்திறனை உறுதி செய்கிறது. உட்புற யூனிட்டில் ஏஐ ப்ரோஸ்ட் செல்ப் க்ளீன் வசதி வழங்கப்பட்டுள்ளதால், தேவையான போது பயனாளர்கள் ஆழமான சுத்தம் செய்ய முடியும். இது சாதனத்தை திறமையாகவும் சீராகவும் இயங்க உதவுகிறது. இந்த அனைத்து அம்சங்களும் சேர்ந்து இது ஒரு சாதாரண ஏர் கண்டிஷனராக அல்லாமல், நவீன இந்திய வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட முழுமையான குளிர்விப்பு தீர்வாக மாற்றுகின்றன.
இந்த அறிமுகம் குறித்து ஹையர் அப்ளையன்சஸ் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி என்.எஸ். சதீஷ் கூறுகையில், “ஸ்பார்டன் ஏஐ டவர் ஏர் கண்டிஷனர் என்பது இந்தியா போன்ற பல்வகைத் தன்மையும், வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சந்தையிலும் ஒரு ஏர் கண்டிஷனர் என்ன செய்ய முடியும் என்பதை மறுபரிசீலனை செய்யும் எங்கள் நோக்கத்தின் வெளிப்பாடாகும். இது வெறும் ஒரு இடத்தை குளிர்விப்பது பற்றியது அல்ல; நவீன குடும்பங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற புத்திசாலித்தனமான, பதிலளிக்கும் மற்றும் உயர்தர அனுபவங்களை உருவாக்குவது பற்றியது. இதில் உள்ள ஒவ்வொரு புதுமையும், பயனாளர்களின் தேவைகளை முன்கூட்டியே கணித்து, வாழ்க்கையை எளிமைப்படுத்தி, செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் புதிய தரநிலைகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், இந்திய நுகர்வோரின் விருப்பங்களுடன் உண்மையாக ஒத்துப்போகும் நோக்கம், துல்லியம் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வீட்டு உபயோக சாதனங்களின் எதிர்காலத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என்றார்.
ஹையர் ஸ்பார்டன் ஏஐ டவர் ஏசி, இந்தியா முழுவதும் முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீட்டெயில் சேனல்களில் ரூ. 99,000 முதல் கிடைக்கும். வாங்கும் வாடிக்கையாளர்கள் 20% வரை உடனடி கேஷ்பேக் மற்றும் மாதம் ரூ. 1,994 முதல் தொடங்கும் நிரந்தர இஎம்ஐ வசதியையும் பெறலாம்.
