ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதய நோய்களுக்கு குறைந்த ஊடுருவலுடனான அறுவை சிகிச்சை முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், நாராயணா ஹெல்த் சிட்டி சேலம் நகரில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெங்களூருவிலுள்ள நாராயணா ஹெல்த் சிட்டியினஇதய அறுவை சிகிச்சை நிபுணர், மூத்த ஆலோசகர் டாக்டர் திருத்தணி குமரன் எம்.எம். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறைகள் இன்று இதய சிகிச்சை துறையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், பாதுகாப்பான, குறைந்த காயத்துடன் விரைவான குணமடைதலை வழங்கும் சிகிச்சை முறையாக உருவெடுத்துள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, நாராயணா ஹெல்த் சிட்டி மேம்பட்ட இதய சிகிச்சை துறையில் முக்கியமான சாதனையை எடுத்துக்காட்டியது. இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்காக 1,200-க்கும் அதிகமான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. குறிப்பாக, மருத்துவமனையில் ஏப்ரல் 2025-ல் இதய ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மொத்த ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளில் சுமார் 17 சதவீதமாகும்.
ரோபோடிக் இதய் அறுவை சிகிச்சையின் வளர்ந்து வரும் பயன்பாடு குறித்து பேசிய டாக்டர் திருத்தணி குமரன் எம்.எம் : “ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை இன்று சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் முறையையே மாற்றி அமைத்து வருகிறது. ரோபோடிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன், அதிக துல்லியமான அறுவை சிகிச்சை, குறைந்த இரத்த இழப்பு, குறைவான வலி, சிறிய அளவிலான காயங்கள், குறுகிய கால மருத்துவமனை தங்குதல் மற்றும் நோயாளிகளுக்கு விரைவான குணமடைதல் போன்ற பல நன்மைகளை வழங்க முடிகிறது. முன்பு மிகவும் சவாலானதாக கருதப்பட்ட அறுவை சிகிச்சைகளையும் தற்போது குறைந்த காயங்களுடன் அதிக பாதுகாப்புடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ள முடிகிறது.” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “1,200-க்கும் அதிகமான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல; இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வரும் நோயாளிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நோயாளிகள் எங்கள் மையத்தில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்வதில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து அதிகரித்து வரும் இந்த வரவேற்பு, குறைந்த காயத்துடனான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை குறித்து நோயாளிகளிடையே விழிப்புணர்வும் நம்பிக்கையும் உயர்ந்து வருவதை காட்டுகிறது. விரைவான குணமடைதல், அறுவை சிகிச்சைக்குப் பின் குறைந்த அசௌகரியம், இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புதல் மற்றும் சிறந்த சிகிச்சை முடிவுகள் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன,” என்றார்.
மேம்பட்ட இதய சிகிச்சை முறைகள் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாராயணா ஹெல்த் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக மருத்துவமனையை அணுகுதல், இந்த பகுதியில் இதய சிகிச்சை மற்றும் மேம்பட்ட ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான வலுவான சான்றாகும். மேலும், சிக்கலான இதய சிகிச்சைகளை மேம்பட்ட தொழில்நுட்பத்துடனும் உயர்தர மருத்துவ நிபுணத்துவத்துடனும் வழங்கும் நாராயணா ஹெல்த் சிட்டி மீது நோயாளிகள் வைத்துள்ள நம்பிக்கையையும் இது வெளிப்படுத்துகிறது. டாக்டர் திருத்தணி குமரன் எம்.எம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமையன்று சேலம் மின்னாம்பள்ளியில் உள்ள ஜெய் தேவ் மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இதன் மூலம், நோயாளிகள் தங்களது சொந்த ஊருக்கு அருகிலேயே சிறந்த மருத்துவ ஆலோசனையும் தொடர்ச்சியான சிகிச்சை வழிகாட்டுதலையும் பெற முடிகிறது.
