பாரத் டிஜிட்டல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அசோசியேஷன் (பிடிஐஏ) ஏற்பாடு செய்த முதல் தேசிய அளவிலான “பாரத் டிஜிட்டல் சம்வாத்” மாநாட்டில் பாரத் கிளவுட் கலந்துரையாடல்களில் பங்கேற்றது.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, இந்தியாவின் டிஜிட்டல் சுயாட்சி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பு தயார்நிலை, மற்றும் உள்நாட்டு கிளவுட் சூழலமைப்பின் எதிர்காலம் குறித்து விவாதிக்க கொள்கை நிர்ணயர்கள், கிளவுட் உள்கட்டமைப்பு தலைவர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப துறை பங்குதாரர்களை ஒருங்கிணைத்தது.
இந்த நிகழ்வில், “டேட்டா ஸ்வராஜ்” என்ற தொலைநோக்கு பார்வையுடன், கொள்கை உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கமற்ற தொழில் அமைப்பாக BDIA அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்த உச்சிமாநாட்டில் தன்னிச்சியான கிளவுட் உள்கட்டமைப்பு உருவாக்கம், செயற்கை நுண்ணறிவு தயார்நிலைக்கான கணினி செயலாக்க சூழல், டிஜிட்டல் தொழில் கொள்கைகள், மற்றும் வெளிநாட்டு கட்டுப்பாட்டில் உள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பின் மீதான நீண்டகால சார்பு போன்ற முக்கிய தலைப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பாரத் கிளவுட் இணை நிறுவனர் மற்றும் பிடிஐஏ நிறுவன உறுப்பினரான ராகுல் தக்கல்லப்பள்ளி கூறுகையில், “இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரே சூழலமைப்பின் கீழ் இணைந்து செயல்பட்டு வளரும்போது, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி மேலும் வலுப்படும். டிஜிட்டல் சுயாட்சி, நம்பகமான உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால தொழில்நுட்ப தன்னிறைவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு சுமார் 40 நிறுவனங்கள் பிடிஐஏ வாயிலாக ஒன்றிணைந்திருப்பது ஊக்கமளிக்கிறது. உருவெடுத்து வரும் நிறுவனங்களின் இந்த ஒத்துழைப்பு, பிடிஐஏ-வின் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் ஏஐ மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இலக்குகளை முன்னெடுக்க தொழில் துறை பங்குதாரர்கள் இணைந்து செயல்படக்கூடிய உண்மையான மற்றும் ஒத்துழைப்பு நிறைந்த தளமாக ‘பாரத் டிஜிட்டல் சம்வாத்’ அமைகிறது,” என்றார்.
பிடிஐஏ தலைவர் மற்றும் ஈஎஸ்டிஎஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன் லிமிடெட் நிறுவனத்தின் புரோமோட்டர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பியூஷ் சோமானி கூறுகையில், “உலகின் மிக விரிவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு சூழலமைப்புகளில் ஒன்றை இந்தியா ஏற்கனவே உருவாக்கியுள்ளது. இப்போது அந்த உள்கட்டமைப்பின் மூலம் உருவாகும் நிர்வாகம், கட்டுப்பாடு மற்றும் நீண்டகால மதிப்பு நாட்டிற்குள் நிலைத்திருக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. ‘டேட்டா ஸ்வராஜ்’ என்பது இனி எதிர்காலத்திற்கான ஒரு பெரிய தொலைநோக்கு பார்வையாக மட்டும் இல்லாமல், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கான நடைமுறை தேவையாக மாறி வருகிறது. தொழில் துறை மற்றும் கொள்கை அமைப்புகள் இணைந்து இந்த திசையை வடிவமைக்கும் முக்கியமான கட்டமாக ‘பாரத் டிஜிட்டல் சம்வாத்’ அமைந்துள்ளது,” என்றார்.
பிடிஐஏ பொதுச் செயலாளர் அபிஷேக் பட் கூறுகையில், “ரெட்டிவ்,சிஃப்பி, கோஜ் மற்றும் இந்தியாடைம்ஸ் போன்ற தளங்கள் மூலம் இந்தியா ஆரம்ப கட்டத்திலேயே முன்னணி நிலையை பெற்றிருந்தது. ஆனால், உள்நாட்டு டிஜிட்டல் சூழலமைப்புகள் போட்டித்திறனுடன் வளர தேவையான கொள்கை ஆதரவை பெறவில்லை. இன்று ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சி மற்றும் புதிய தலைமுறை நிறுவனர்கள் பெரிய அளவில் உருவாக்கி வரும் சூழலில், ‘பாரத் டிஜிட்டல் சம்வாத்’ மற்றும் பிடிஐஏ ஆகியவை இந்தியா வழிநடத்தும் டிஜிட்டல் சூழலமைப்புகளுக்கான வலுவான முன்னெடுப்பை பிரதிபலிக்கின்றன. முழுமையான டிஜிட்டல் சுயாட்சி நடைமுறையில் சாத்தியமில்லாவிட்டாலும், இந்தியா உள்நாட்டில் உருவாக்கப்படும் முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தியும் ஆதரித்தும் இருக்க வேண்டும். உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மூலோபாய பலங்களில் ஒன்றாக அதன் டிஜிட்டல் சந்தை அளவே திகழ்கிறது,” என்றார்.
