2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்துவரும் பதற்றங்கள் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் சமீபத்திய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் புவிசார் அரசியல் அதிர்ச்சிகளுக்கு உள்ளாகும் பாதிப்பை தீவிரமடையச் செய்துள்ளன.
டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் இந்தியா ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சி ஆராய்ச்சியான ஆராய்ச்சியான ஹாரிசன் வாட்ச் எமர்ஜிங் ரிஸ்க் ரிப்போர்ட், சர்வதேச மோதல்கள் தங்கள் நடவடிக்கைகளை கணிசமாக சீர்குலைக்கும் என்று 63% வணிகங்கள் எதிர்பார்க்கின்றன, ஆனால் தற்போது 19% மட்டுமே வழக்கமான புவிசார் அரசியல் இடர் மதிப்பீடுகளை நடத்துகின்றன என்று குறிப்பிடுகிறது.
வலுவான இடர் தயார்நிலையின் தேவையை வலியுறுத்துகின்ற இந்த சம்பவங்கள், விரைவாக மாறிவரும் புவிசார் அரசியல் நிலைமைகள் உலகளாவிய வணிகங்களுக்கு எவ்வாறு செயல்பாட்டு மற்றும் நிதி ரீதியான நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. உலகளாவிய ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலிகளைக் கொண்ட இந்திய வணிகங்களுக்கு, ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழித்தடம் போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளில் அதிகரித்து வரும் பதற்றம், அதிகரித்த சரக்கு கட்டணங்கள், தாமதமான கப்பல் போக்குவரத்து மற்றும் கூர்மையான உள்ளீட்டு விலை ஏற்ற இறக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி, லாப வரம்புகள் மற்றும் வணிகத் தொடர்ச்சி இரண்டையும் அச்சுறுத்துகின்றன.
இந்த அறிக்கையானது, மற்றவைகளுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடிஇஎஸ், இரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள், வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட 25 துறைகளைச் சேர்ந்த 300 இந்திய வணிகத் தலைவர்களிடம் நடத்தப்பட்ட விரிவான கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
விநியோகச் சங்கிலி சீர்குலைவும் ஒரு முக்கியமான பிரச்சினையாக தொடர்கிறது, இதில் பதிலளித்தவர்களில் 60%க்கும் மேற்பட்டோர் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து சவால்களை ஒரு பெரிய தடையாக முக்கியப்படுத்திக்காட்டுகின்றனர். நிறுவனங்களை பணப்புழக்க திட்டமிடல் மற்றும் வலுவான இடர் மேலாண்மை கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வழிவகுக்கின்ற வகையில், நிதி நிலையின்மையும் ஒரு அபாயப் பகுதியாக வெளிப்பட்டு வருகிறது, 48% வணிகங்கள் பொருளாதார மந்தநிலைகள், அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் குறித்து கவலை கொண்டுள்ளன.
புவிசார் அரசியல் மோதல்கள், தொழில்நுட்ப இடையூறுகள், சட்ட சவால்கள் மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் காரணமாக இடர் சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக மாறி வரும் நிலையில், இந்த முன்னேற்றங்களை தீவிரமாக கண்காணிக்கும் நிறுவனங்கள் முன்னிலை பெற்று வருகின்றன. நிச்சயமற்ற தன்மையை ஒரு போட்டித்திறன் நன்மையாக மாற்றுகின்ற இத்தகைய வணிகங்கள், சப்ளையர் பல்வகைப்படுத்தல், புவிசார் அரசியல் காட்சித் திட்டமிடல் மற்றும் காப்பீடு-ஆதரவு இடர் பரிமாற்றம் போன்ற முன்னெச்சரிக்கை உத்திகள் போன்றவற்றை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
இந்த ஹாரிசன் வாட்ச் எமர்ஜிங் ரிஸ்க் ரிப்போர்ட், புவிசார் அரசியல் அபாயங்களை மதிப்பிடுவதில் வணிகங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க தயார்நிலை இடைவெளி இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய மோதல்கள் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களின் சீர்குலைக்கும் தாக்கத்தை நிறுவனங்கள் அதிகளவில் உணர்ந்தாலும், இந்த அபாயங்களை மதிப்பீடு செய்வதற்கும் குறைப்பதற்கும் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் பல நிறுவனங்களிடம் இன்னும் இல்லாமல் உள்ளது. உலகளாவிய இடர் சூழல் மேலும் சிக்கலடைந்து வருவதால், வணிக நிறுவனங்கள் முற்போக்கான இடர் மேலாண்மை உத்திகளை ஏற்றுக்கொள்வதும், தங்கள் விநியோகச் சங்கிலிகள் மற்றும் செயல்பாடுகள் முழுவதும் மீள்திறனை வலுப்படுத்துவதும் அவசியமாகும். டாடா ஏஐஜி நிறுவனத்தில், இடர் நுண்ணறிவை விரிவான காப்பீட்டு தீர்வுகளுடன் ஒருங்கிணைப்பது, வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மைகளை வணிகங்கள் சமாளிப்பதற்கும் நீண்டகால வணிகத் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் உதவுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், என்று டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இன் கமர்சியல் பிசினஸ் பிரிவின் தலைவர் தீபக் சங்கர் கூறினார்.