புதுச்சேரியில் புதிய கிளையை தொடங்கும் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட்



இந்தியாவின் முன்னணி மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, புதுச்சேரியில் தனது புதிய கிளையை இன்று தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய முதலீட்டுத் தீர்வுகளை வழங்கவும், அவர்களின் நிதி மேம்பாட்டிற்கு வழிவகுக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது.

புதிய கிளையின் முகவரி: ஆக்ஸிஸ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், எண்: 32, தரைத்தளம், ஈஸ்வரன் கோவில் தெரு, புதுச்சேரி - 605 001. இந்தக் கிளையின் தொடக்க விழாவில் தென்மண்டல ரீடைல் பிசினஸ் ஹெட்  சந்தோஷ் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்தப் புதிய கிளையானது, புதிய விண்ணப்பங்களைப் பெற்றுப் பரிசீலித்தல், கேஒய்சி (KYC), கணக்கு அறிக்கைகள் (Statement of Accounts) உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளை வழங்கும். மேலும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க அர்ப்பணிப்புடன் கூடிய ரிலேஷன்ஷிப் மேனேஜர்கள் குழுவும் இங்கு செயல்படும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களது நிதி இலக்குகளை அடையத் தேவையான உதவிகளைப் பெறுவது உறுதி செய்யப்படும். புதுச்சேரி கிளையின் தொடக்கத்தின் மூலம், முதலீட்டு வாய்ப்புகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதிலும், உள்ளூர் சமூகத்தினர் தங்களது நிதி இலக்குகளை எட்டுவதற்குத் தேவையான கருவிகளை வழங்குவதிலும் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரீடெயில் விற்பனைப் பிரிவு தேசியத் தலைவர் (National Head - Retail Sales)  ரோஹித் மட்டூ கூறுகையில், "புதுச்சேரியில் எங்களது புதிய கிளையைத் திறப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். துடிப்புடன் வளர்ந்து வரும் இந்தச் சந்தையில் உயர்தரமான முதலீட்டுச் சேவைகளை வழங்க வேண்டும் என்ற எங்களது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம் உள்ளூர் சமூகத்தினரின் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இப்பகுதியில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான எங்களது கூட்டாண்மையை வலுப்படுத்தவும் முடியும். இதன் மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்," என்று தெரிவித்தார்.

புதுச்சேரி கிளையின் தொடக்கமானது, இந்தியா முழுவதும் தனது இருப்பை விரிவுபடுத்துவதில் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் அனைத்துப் பிராந்தியங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் தரமான நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. பரந்த அளவிலான முதலீட்டு விருப்பங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகள் மூலம், புதுச்சேரி முதலீட்டாளர்கள் நிதித்துறையை நம்பிக்கையுடன் அணுகவும், தங்களது நீண்டகால நிதி இலக்குகளை அடையவும் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் இலக்கு வைத்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form