டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, டிவிஎஸ் என்டார்க் 150க்கான புதிய விளம்பரத்தை வெளியிட்டது



இரு மற்றும் மூன்று சக்கர வாகனத் துறையில் உலகளாவிய முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, இந்தியாவின் முதல் 150சிசி ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரான டிவிஎஸ் என்டார்க்  150க்கான அதிரடி புதிய தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சாரம், ஒவ்வொரு பயணத்திலும் ரேஸ் டிராக்கின் அனுபவத்தை வழங்கும் திறன் டிவிஎஸ் என்டார்க்150-க்கு இருப்பதை வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், உற்சாகம், செயல்திறன் மற்றும் ஸ்டைலை விரும்பும் இளம், மகிழ்ச்சியை நாடும் ரைடர்களின் மனதைத் தொடும் வகையில் இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனது வளமான ரேசிங் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி முற்றிலும் புதிய டிவிஎஸ் என்டார்க் 150-ஐ இந்த பிரிவில் புதிய தரக்கோலை அமைக்கும் வகையில் வடிவமைத்துள்ளது. இந்தியாவின் முதல் ஹைப்பர் ஸ்கூட்டர் மற்றும் அதிவேக 150சிசி ஸ்கூட்டர் ஆகும் இது, வெறும் 6.3 விநாடிகளில் 0 – 60 கி.மீ/மணி வேகத்தை எட்டும் திறன் கொண்டது. மேலும், ரேஸ் மற்றும் ஸ்ட்ரீட் ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் போன்ற அம்சங்களுடன், தினசரி பயணத்திற்கும் ரேஸ் டிராக்கை நினைவூட்டும் செயல்திறனை வழங்குகிறது. எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் இயங்கும் இளம் ரைடர்களை கவரும் வகையில் இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மூத்த துணைத் தலைவர் — கம்யூட்டர் & இவி வர்த்தக தலைவர் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் & மீடியா தலைவர் அனிருத்த ஹால்தர் அவர்கள் கூறுகையில்,  “டிவிஎஸ் என்டார்க், செயல்திறன், தைரியமான அணுகுமுறை மற்றும் புதிய தலைமுறை ரைடர்களுடன் கொண்ட ஆழமான உணர்ச்சி பிணைப்பின் அடிப்படையில், இளைஞர்களுக்கான ஒரு ஐகானிக் பிராண்டாக வளர்ந்துள்ளது. எங்களது ஸ்கூட்டர்கள் பல ஆண்டுகளாக ரேஸ் டிராக்குகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன; அந்த ரேசிங் பாரம்பரியமே டிவிஎஸ் என்டார்க் 125-க்கு அடித்தளமாக அமைந்தது. முற்றிலும் புதிய டிவிஎஸ் என்டார்க் 150 மூலம், இந்த பாரம்பரியம் மேலும் பல படிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய டிவிசி, ‘ஹைப்பர்’ என்ற தத்துவத்தை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. அதாவது, முன்னணி இன்ஜினியரிங், ரேசிங் டிஎன்ஏ மற்றும் எப்போதும் செயல்பாட்டிலிருக்கும் போட்டி மனப்பான்மை ஆகியவை ஒன்றிணைந்து, ஒவ்வொரு பயணத்தையும் ஒரு தனிப்பட்ட ரேஸாக உணரச் செய்கின்றன” என்றார்.\

Post a Comment

Previous Post Next Post

Contact Form