இரு மற்றும் மூன்று சக்கர வாகனத் துறைகளில் செயல்படும், உலகளாவிய முன்னணி வாகன உற்பத்தியாளரான TVS Motor Company (TVSM), TVS Raider மூலம் இந்தியாவின் முதல் முறையான ‘க்ரவுட்சோர்ஸ்’ (Crowdsourced) விளம்பரப் படத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. TVS Raider உரிமையாளர்கள் பதிவு செய்த உண்மையான காட்சிகளை முழுமையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம், கூட்டுத் திரைப்பட உருவாக்க முறையின் மூலம் இந்தியா முழுவதும் இருந்து பெறப்பட்ட நிஜமான தருணங்களை ஒரே திரையில் ஒன்றிணைக்கிறது.
ஒவ்வொரு TVS Raider உரிமையாளரும் இயல்பாகவே திறமைசாலிகள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விளம்பரப் படம், சவாரி செய்வதோடு மட்டுமல்லாமல் பயணிக்கும் வாழ்க்கையின் தருணங்களை பதிவு செய்து பகிரும் புதிய தலைமுறையை கொண்டாடுகிறது. ஒரு மேடையை வழங்குவதன் மூலம், தினசரி ரைடர்களை உள்ளடக்க உருவாக்குநர்களாக (Content Creators) மாறச் செய்யும் சக்தியை TVS Raider வழங்குகிறது. பல்வேறு பகுதிகள், தொழில்கள் மற்றும் பின்னணிகளிலிருந்து வந்த ரைடர்களை ஒன்றிணைத்து, அவர்களின் நிஜமானதும் உற்சாகம் நிறைந்ததுமான சொந்த கதைகளை இந்த விளம்பரப் படம் வெளிப்படுத்துகிறது.
இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த TVS Motor Companyயின் Senior Vice President — Head Commuter & EV Business மற்றும் Head Corporate Brand & Media அனிருத்த ஹால்தார் கூறுகையில், TVS Raider என்பதின் வாக்குறுதி, வழக்கமான கட்டுப்பாடுகளை உடைத்து தனித்துவத்தை கொண்டாடுவதாகும். இந்தியாவின் முதல் ‘க்ரவுட்சோர்ஸ்’ விளம்பரப் படத்தின் மூலம், TVS Raider கதைக்கு இன்று சமூக ஈடுபாடு, கூட்டுத் தயாரிப்பு மற்றும் ரைடர்கள் முன்னெடுக்கும் உள்ளடக்கங்களின் வளர்ந்து வரும் சூழல் சக்தியளிக்கிறது. இன்றைய இளம் ரைடர்கள் உள்ளடக்கத்தை வெறும் நுகர்வோர் மட்டுமல்ல; அவர்கள் அதை உருவாக்குகிறார்கள், அதற்கு உரிமை பெற்றுக்கொள்கிறார்கள், மேலும் தங்களைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தையும் வடிவமைக்கிறார்கள் என்ற நம்பிக்கையையே இது பிரதிபலிக்கிறது” என்றார்.
இந்த முயற்சி குறித்து Kinnect நிறுவனத்தின் CEO சந்த்னி ஷா அவர்கள் கூறுகையில், “இன்றைய காலத்தில், கலாச்சாரத்தை மதித்து அதில் பங்கேற்கும் போது மட்டுமே ஒரு பிராண்டின் பொருத்தம் (Relevance) உருவாகிறது. Raider Bros மூலம், உண்மையான ரைடர்கள் தங்களது தனித்துவமான ஸ்டைலில் பிராண்டை வரையறுக்க TVS வாய்ப்பளிக்கிறது. இதனால், கட்டாயமாக திணிக்கப்பட்டதாக அல்லாமல், இயல்பாக உருவான உணர்வுபூர்வமான இணைப்பு உருவாகிறது” என்றார்.
இந்த பிரச்சாரம் தொழில்துறையில் ஒரு முதல் முயற்சியாக திகழ்கிறது. இந்தியாவில் இதுவரை எந்த ஆட்டோமொபைல் அல்லது லைஃப்ஸ்டைல் பிராண்டும், உண்மையான நுகர்வோர் மட்டுமே பங்கேற்கும் க்ரவுட்சோர்ஸ் விளம்பரப் படத்தை உருவாக்கியதில்லை.
உண்மைத்தன்மையும் சமூகப் பங்கேற்பும் அதன் மையமாக இருப்பதால், இந்த முயற்சி TVS Raider-ஐ அதன் பிரிவில் மிகவும் புதுமையான பிராண்டாக உறுதிப்படுத்துகிறது. தயாரிப்பு சிறப்பைத் தாண்டி புதுமையில் தொடர்ந்து முதலீடு செய்யும் அதன் அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது. இந்த அறிமுகத்தின் மூலம், இந்தியாவில் புதிய தலைமுறை மார்க்கெட்டிங்கிற்கான ஒரு புதிய அளவுகோலை TVS Raider அமைக்கிறது. உண்மையான குரல்களும், பகிர்ந்துகொள்ளப்படும் படைப்பாற்றலும், அர்த்தமுள்ளதும் நீடித்ததுமான பிராண்டு உறவுகளை உருவாக்கும் வலிமையை இந்த முயற்சி தெளிவாக வெளிப்படுத்துகிறது.
