இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் 2026 விருதை வென்ற டிவிஎஸ் அபாச்சி

 


டிவிஎஸ்  மோட்டார் நிறுவனத்தின் புத்தம் புதிய அட்வென்ச்சர் ராலி டூரர் மாடலான டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ், ஜேகே டயர்ஸ் வழங்கும் 2026-ம் ஆண்டிற்கான கெளவரமிக்க 'இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர்'  (ஐஎம்ஓடிஒய் ) விருதை வென்றுள்ளது. இந்திய இருசக்கர வாகனத்துறையில் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் இவ்விருதை வென்றதன் மூலம், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ் மோட்டார்சைக்கிள் சந்தையில் தனது முதன்மைத்துவத்தை நிலைநாட்டியுள்ளது. 

‘ஆர்டி எக்ஸ்டி4’ பிளாட்ஃபார்மில், மோட்டார் பந்தய களத்தின் டி.என்.ஏ-வைக் கொண்டு முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக், அபாரமான செயல்திறன் மற்றும் சிலிர்க்க வைக்கும் சாகசப் பயணங்களை விரும்பும் ப்ரீமியம் வாடிக்கையாளர்களிடையே புதியதொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் இதழ்களைச் சேர்ந்த 27 மூத்த பத்திரிகையாளர்கள் அடங்கிய நடுவர் குழுவினால் டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு பிரிவுகளில் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வான 7 முன்னணி மோட்டார்சைக்கிள்களுடன் போட்டியிட்டு டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாபெரும் அங்கீகாரமானது, புதுமையான தயாரிப்புகள், அபாரமான செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் நலன் சார்ந்த பொறியியலில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் காட்டிவரும் அர்ப்பணிப்பையும், அக்கறையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்த மகத்தான வெற்றி குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் வணிகப் பிரிவுத் தலைவர் விமல் சும்ப்ளி கூறுகையில்: "2026-ம் ஆண்டிற்கான ஜேகே டயர், இந்தியன் மோட்டார் சைக்கிள் ஆஃப் தி இயர் விருது 2026 விருதைப் பெறுவது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். இந்த அங்கீகாரம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இடைவிடாத முயற்சியின் வெற்றியாகும். 40 ஆண்டுகளுக்கும் மேலான பந்தயக் கள அனுபவமும், 35 ஆண்டுகால ராலி அனுபவமும் இந்த மோட்டார்சைக்கிளின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளன. அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதலே டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஎக்ஸ் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகத் தரத்திலான மோட்டார்சைக்கிள்களை இந்தியாவிலேயே வடிவமைத்து உருவாக்கி, உலக அரங்கில் மிகச்சிறந்த வாகனங்களுடன் போட்டியிட முடியும் என்ற எங்களது நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியுள்ளது," என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form