பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் அதன் மில்க் பிக்கிஸ் போர்ட்ஃபோலியோவில் சமீபத்திய அறிமுகமாக ஒரு புதிய ரகத்தை அறிவித்துள்ளது - பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட்; இது இந்தியாவின் முதல் டிஎச்ஏ மற்றும் 16 நுண்ணூட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டாகும். மேலும், 100% கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்டது. உலக செஸ் சாம்பியன் குகேஷ் டொம்மராஜு இந்த புதிய பிஸ்கட்டினை தலைமை தாங்கி அறிமுகம் செய்வதன்மூலம், பிரிட்டானியா மில்க் பிக்கிஸுடன் ஒருங்கிணைந்துள்ளது. மேலும் இது இளைஞர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் செஸ் வகிக்கக்கூடிய முக்கிய பங்கை வலுப்படுத்துகிறது.
டிஎச்ஏ தவிர, பிற நுண்ணூட்டச்சத்துக்களான கோலின், பி வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் டி மற்றும் ஜிங்க் ஆகியவையும் இதில் உள்ளன. இவையனைத்தும் இளம் தலைமுறையின் சிந்தனையை அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆதரிப்பதாக அறியப்படுகிறது; அதாவது கவனம் செலுத்துதல், சகிப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பேண உதவுகிறது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிரிட்டானியா நிறுவனத்தின், தலைமை மேம்பாடு மற்றும் தர அலுவலர், சுதிர் நேமா கூறுகையில், “பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் எப்போதும் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் இது பல தசாப்தங்களாக அன்றாட தருணங்களில் பெற்றோர்களின் நம்பகமான நண்பனாக இருந்து வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஆதரிப்பதில் உதவ - டிஎச்ஏ மற்றும் 16 நுண்ணூட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட 100% கோதுமை மாவினால் (ஆட்டா) தயாரிக்கப்பட்ட ‘பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட்’ மூலம், மில்க் பிக்கிஸின் அதே மரபை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இன்றைய ஆரோக்கிய உணர்வுள்ள நுகர்வோருக்கு புதிய, ஆரோக்கியமான, பொருத்தமான மற்றும் உற்சாகமூட்டும் தயாரிப்புகளை உள்ளடக்கிய ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க வேண்டும் என்கிற எங்கள் முயற்சிக்கு இந்த புதிய அறிமுகம் ஒரு நற்சான்றாகும்” என்றார்.
இந்த கூட்டணி குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட குகேஷ் டொம்மராஜு, “ஒவ்வொரு அசைவும் முக்கியமானது என்பதை செஸ் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது; மேலும் ஆரம்பத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள்தான் விளையாட்டின் போக்கை வரையறுக்கின்றன. பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட்டுடன் ஒருங்கிணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் ஸ்மார்ட்டான முடிவுகளை எடுக்க உதவும் என்கிற செஸ்ஸின் அதே தத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு தயாரிப்பாக இருக்கும்,” என்று கூறினார்.
மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட்டின் வெளியீட்டை அறிவிப்பதற்கான தொலைக்காட்சி விளம்பரத்தை முல்லன் லிண்டாஸ் நிறுவனம் கருத்தாக்கம் செய்தது. குகேஷ் அவர்கள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று அவரது சிந்தனையில் குறுக்கிடும் போது, அவர் ஒரு பாதுகாப்பற்ற தருணத்தில் இருப்பதாக இந்த விளம்பரம் துவங்குகிறது. அவர் தனது சொந்த யங்மாஸ்டர் அவதாரத்தை எதிர்கொள்வதை நாம் காண்கிறோம், அதாவது சிறுவயது குகேஷ்! இது யாரும் எதிர்பார்க்காத நகர்வுக்கு வழிவகுக்கிறது. கிராண்ட்மாஸ்டர் குகேஷ் கூட இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட் பிஸ்கட்டும் ஒரு சதுரங்க வடிவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சிற்றுண்டியை ஒரு வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான அனுபவமாகவும் மாற்றுகிறது; ஒவ்வொரு முறை கடித்து சாப்பிடும் போதும் நுகர்வோரை மகிழ்விக்கும் அதே நேரத்தில் விளையாட்டிற்கான ஆர்வத்தையும் தூண்டுகிறது.
பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் ஸ்மார்ட் இப்போது தமிழகம் முழுவதும் ரீடெயில் விற்பனை ஸ்டோர்களிலும், பிக் பாஸ்கெட்டிலும் கிடைக்கிறது.