போர்பன்இட் சீசன் 2-ஐ மீண்டும் கொண்டு வரும் பிரிட்டானியா நிறுவனம்



பிரிட்டானியா நிறுவனம் டபிள்யுபிபி மீடியா நிறுவனத்துடன் இணைந்து, போர்பன்இட் சீசன் 2-ஐ மீண்டும் கொண்டு வருகிறது. இப்போது குரல் மூலம் இயங்கும் வாய்ஸ் தொழில்நுட்பத்துடன் பல மொழிகளில் சமையல் செய்முறைகளுடன் வருகிறது.

இந்த போர்பன்இட் சீசன் 2-இல் சமையல் செய்முறை மற்றும் படங்களை உருவாக்கத்திற்காக கூகுள் ஜெமினி மற்றும்  சமையற்கலைஞர் பூஜா திங்கராவின் ஏஐ அவதாரத்தின் குரலுக்காக இலெவன் லேப்ஸ் நிறுவனமும்  உறுதுணையாக உள்ளன. இது இத்தளத்தை உரையாடலுடன் கூடிய, வாய்ஸ் - ஃபர்ஸ்ட் சமையல் செய்முறை உதவித் தளமாக மாற்றுகிறது. போர்பன் பேக்கேஜ் அல்லது க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பயனர்கள் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் கன்னடம் ஆகிய ஏழு இந்திய மொழிகளில் இருந்து தேர்வு செய்து அவர்களின் சமையல் செய்முறை யோசனைகளை நேரடியாகப் பேசிப் பெறலாம். கணினி உடனடியாக அவர்களின் வேண்டுகோளைப் புரிந்துகொண்டு அவற்றை முறையான சமையல் செய்முறை யோசனைகளாக மாற்றுகிறது; மேலும் தேவையான உட்பொருள் பரிந்துரைகள் மற்றும் படிப்படியான சமையல் வழிகாட்டுதலுடன் முழுமையான ஒன்றாக இருக்கும்.

இந்த சீசனிலும் பிராண்டின் தலைமை சுவை அலுவலராக செஃப் பூஜா திங்க்ரா ஒரு புதிய டிஜிட்டல் அவதாரத்தில் மீண்டும் வருகிறார். பயனர்கள் ஒரு உரையாடும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ரூபத்தின் மூலம் அவருடன் தொடர்பு கொள்ளலாம், சமையல் செயல்முறைகளை வழங்கி பயனர்களை அவரது குரல் வழிநடத்தும்.  மேலும் ஒரு வேடிக்கையான, உரையாடலுடன் கூடிய சமையல் அனுபவத்தையும் பெறலாம்; அதாவது அவருடன் நேரடியாக சமையலறையில் உரையாடுவது போன்ற நிஜ அனுபவம் கிடைக்கும்.

ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் படைப்பைக் கொண்டாடும் விதமாக  பூஜா திங்க்ராவால் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பிரத்தியேக சமையல் சான்றிதழைப் பெறுவார்கள். அவர்களின் செய்முறை தயாரானதும், பயனர்கள் போர்பனின் உத்வேகத்துடன் கூடிய உணவு பதார்த்தங்களின் புகைப்படங்களை அதற்குரிய  டாஷ்போர்டில் பதிவேற்ற வேண்டும். மேலும் பூஜா பிரிட்டானியா போர்பன்இட் சேலஞ்ச் நிகழ்வின் வெற்றியாளர்களை பின்னர் அறிவிக்க இந்த சீசன் முடிவடையும்.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் - மார்க்கெட்டிங், சித்தார்த் குப்தா கூறுகையில், "சீசன் 1 அளித்த ஊக்கம் மற்றும் அதன் சமர்ப்பிக்கப்பட்ட படைப்பாற்றலைக் கண்டு நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தோம்; அதற்கு நாடு முழுவதிலுமிருந்து 28,000-க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் வந்தன. நுகர்வோர் பிரிட்டானியா போர்பனை சாப்பிடுவதை விரும்புவதில்லை, அவர்கள் அதை வைத்து புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை போர்பன்இட்-யின் முதல் சீசன் நமக்குக் காட்டியது. இந்த சீசன் 2 மூலம், குரல் மற்றும் பிராந்திய மொழிகளுக்கு அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் அதே அனுபவத்தை மேலும் அணுகக்கூடிய ஒன்றாக மாற்ற விரும்புகிறோம். பிரிட்டானியா போர்பன் எப்போதும் ஒரு சாக்லேட், சாக்லேட், மற்றும் சாக்லேட் அனுபவத்திற்காக மட்டுமே உரியது. மேலும் இந்த தளத்தின் மூலம், மக்கள் தங்களுக்கு பிடித்த பிஸ்கட்டை ருசித்து அனுபவிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறினார்.

செஃப் பூஜா திங்ரா இதுபற்றி கூறுகையில், "சமையல் இயற்கையாக இருக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், அதைத்தான் போர்பன்இட் சீசன் 2 உயிர்ப்புடன் கொண்டு வருகிறது. நீங்கள் இப்போது எனது ஏஐ அவதாரத்துடன் பேசலாம், உங்கள் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம், ஒன்றாக நாம் எந்த விதமான சமையல் ரெசிபியையும், போர்பனின் ஆச்சாரியத்துடன் வழங்கலாம். இது எளிமையானது, நட்பானது மற்றும் மிகவும் வேடிக்கையானதும் கூட.” என்று தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form