ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தமிழ்நாடு பிராந்திய முகவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவச மெகா மருத்துவ முகாம் கோயம்புத்தூர் COINDIA ஆடிட்டோரியத்தில் சிறப்பாக நடத்தியது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். பல முன்னணி மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து, முகவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் முன்னெச்சரிக்கை மருத்துவ சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை முன்னெடுக்க நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகர மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேயர் தீபம் ஏற்றி முகாமைத் தொடங்கி வைத்தார். பொதுமருத்துவம், எலும்பியல், மகளிர் நலம், கண், பல், உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை ஆகிய பல்வேறு பரிசோதனைகள் ஒருங்கிணைந்த முகாமில், தலா ரூ.6,000 மதிப்பிலான சேவைகளை ஒவ்வொருவருக்கும் வழங்கியது. அவர் இப்படியான முயற்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கவும், பொதுமக்களுக்கும் கொண்டு செல்லவும் பரிந்துரைத்தார்.
சி. பாலாஜிபாபு முகவர்களின் நலனுக்காக இத்தகைய மருத்துவ முகாம்களை நடத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவர் கோயம்புத்தூர் மண்டலம் இந்நிதியாண்டில் ரூ.210+ கோடி புதிய வணிகத்தையும், ரூ.143.50 கோடி மதிப்பிலான 23,800+ கிளைம்ஸ்களை தீர்வு செய்துள்ளதையும் குறிப்பிட்டார். ஸ்ரீராம் ரகுநந்தனன் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவர் நலனை முன்னெடுத்தல் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.