16 ஆண்டுகளாக தொடர்ந்து உலகளவில் நம்பர் 1 அப்ளையன்சஸ் பிராண்டாக இருக்கும் ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா, பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் அசோசியேட் ஸ்பான்சராக இருப்பது குறித்து பெருமிதம் கொள்கிறது; இந்நிகழ்ச்சியின் புதிய சீசன் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது மற்றும் ஜியோஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. தமிழகத்தின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றின் மூலம் தென்னிந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த, விவேகமான நுகர்வோருடான ஈடுபாட்டை மேம்படுத்த வேண்டும் என்கிற ஹையர் நிறுவனத்தின் நோக்கத்தில் இந்த கூட்டணி மற்றொரு அறிவார்ந்த முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியா முழுவதும் உள்ள நுகர்வோருடனான அதன் பிணைப்பை ஹையர் பிராண்டு வலுப்படுத்தியுள்ளது; அதாவது இந்த ஸ்பான்சர்ஷிப் மூலம் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு நெருக்கமாக ஹையர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பின் மூலம், ஹையரின் ஏர் கண்டிஷனர்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், மற்றும் எல்இடி டிவிகள் போன்ற சாதனங்கள் இந்த பண்டிகைக் காலத்தில், தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றின் மூலம் பலரை சென்றடையவுள்ளன.
இந்த அறிவார்ந்த ஒருங்கிணைப்பானது பிராண்டின் பரிச்சயத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ‘நவீன லைஃப்ஸ்டைலுக்குத் தேவையான தொழில்நுட்ப சாதனமாக திகழ வேண்டும்’ என்கிற ஹையரின் நிலைபபாட்டினையும் உறுதிசெய்கிறது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஸ்டார் விஜய் தளத்துடன் இணைவதன் மூலம், ஹையர் அதன் வணிகத் தத்துவமான ‘மோர் கிரியேஷன், மோர் பாஸிபிலிட்டீஸ்’ ('அதிக படைப்புகள், அதிக சாத்தியங்கள்’) என்பதை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது; அதாவது பல இலட்சக் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் பல அர்த்தமுள்ள புதுமைகளைக் கொண்டு வருகிறது.
இந்த சங்கம் குறித்து பேசிய ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்தின் பிரசிடென்ட் என்.எஸ். சதீஷ் கூறுகையில், “உண்மையாகவே முக்கியத்துவம் வாய்ந்த புதுமையான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் இந்திய குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டுமென்பதே ஹையர் நிறுவனத்தில் எங்கள் நோக்கமாகும். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியுடன் இணைவதன் மூலமாக, இந்த பிராந்தியத்தின் கலாச்சார கட்டமைப்பில் ஆழமாக பின்னப்பட்ட ஒரு நிகழ்ச்சியுடன் மில்லியன் கணக்கான குடும்பங்களுடன் கலாச்சார ரீதியாகவும், அர்த்தமுள்ள வழியிலும் எங்களால் ஒருங்கிணைய முடிகிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் எங்களது புதுமையான தயாரிப்பு வகைகளைக் காண்பிப்பது என்பதையும் கடந்து, ஒரு படி மேலே சென்று - நவீன இந்திய இல்லங்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற சிந்தனையுடன் சரியான தீர்வுகளை உருவாக்குவதில் நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் இந்த கூட்டணி வலுப்படுத்துகிறது. இந்த ஸ்பான்சர்ஷிப் மூலம், எங்கள் நுகர்வோரின் கருத்துக்களை தொடர்ந்து கேட்பதையும், அதற்கேற்ப எங்கள் தயாரிப்புகளை மாற்றியமைப்பதையும், மதிப்புமிக்க சேவையை வழங்குவதையும் எங்களால் மீண்டும் உறுதிசெய்ய முடிகிறது,” என்று தெரிவித்தார்.
பண்டிகைக் காலம் நெருங்கிவரும் சூழ்நிலையில், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேம்படுத்துவதன் மூலம் தமிழ் பேசும் நேயர்களுடனான அதன் பிணைப்பை ஆழப்படுத்த ஹையர் பிராண்டு தயாராக உள்ளது. இந்த கூட்டணியானது, கலாச்சார ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் பொருந்தும் இந்த பிராந்திய நிகழ்ச்சியானது - ஹையரின் இலக்குடன் சரியாக ஒத்துப்போகிறது. பொழுதுபோக்கு, டிராமா மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என அசத்தலான கலவையாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹையரின் தயாரிப்புகளை சரியான முறையில் காட்சிப்படுத்த ஒரு நல்ல தளமாக அமைகிறது. எனவே இந்த கூட்டு முயற்சியானது, இந்த பிராந்திய நுகர்வோரின் வளர்ந்து வரும் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும்; ஹையரை ஒரு பிராண்டாக மட்டுமல்லாமல், கொண்டாட்டங்கள் மற்றும் அன்றாட வாழ்வின் இயல்பான தருணங்களிலும் ஹையரை ஒரு நம்பகமான, உறுதுணையான சாதனமாகவும் நிலைநிறுத்துகிறது.