பாண்டலூன்ஸின் ‘ஸ்பார்க் யுவர் இமாஜினேஷன்’ பிரச்சாரம்



இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மற்றும் நம்பகமான பேஷன் பிராண்டான பாண்டலூன்ஸ், இன்று புகழ்பெற்ற நடிகையும் ஸ்டைல் ஐகானுமான சமந்தா ரூத் பிரபுவை அதன் முதன் முதலான பிராண்டு தூதராக வரவேற்று ஸ்டைலில் ஒரு புதிய சகாப்தத்தை அறிவித்துள்ளது. இந்த கூட்டுஒத்துழைப்பானது, முன்னோடியான நவீன, புது ஸ்டைலான மற்றும் ஃபேஷன் ட்ரெண்ட்-ஃபார்வேடாக உள்ள இந்த பிராண்டை நிலைநிறுத்தி, பாண்டலூன்ஸின் பயணத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட தருணத்தைக் குறிக்கிறது.

இக்கூட்டாண்மையைக் கொண்டாடுவதற்கு, பாண்டலூன்ஸ்-ஆனது ‘ஸ்பார்க் யுவர் இமாஜினேஷன்’ எனும் அதன் பண்டிகைக்கால பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இது நவீன இந்தியாவை அவர்களின் சொந்த ஃபேஷன் கதைகளை உருவாக்க ஊக்குவிக்கும் இந்த பிராண்டின் புதிய முன்மொழிவை உயிரூட்டுகிறது. இப்பிரச்சாரமானது, அச்சமின்றி பரீட்சார்த்த முறையில் முயற்சிக்கவும் மற்றும் நம்பிக்கையுடன் தங்கள் தனித்துவமான சுயத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நுகர்வோரின் படைப்பாற்றலைத் தூண்டி, அவர்களை ஊக்கப்படுத்துவதும் பாண்டலூன்ஸின் நோக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த பிராண்டானது, இந்த ஸ்டைல் பயணத்தை முன்னின்று வழிநடத்த, ஒரு உண்மையான ஃபேஷன் முன்னோடியான சமந்தா ரூத் பிரபுவைத் தவிர வேறு யாரையும் இணைத்துக் கொள்ளவில்லை.

இக்கூட்டிணைவு குறித்து பேசிய பாண்டலூன்ஸ் மற்றும் ஓடபிள்யுஎன்டி-இன் தலைமை நிர்வாக அதிகாரி சங்கீதா தன்வானி கூறுகையில், “ஸ்பார்க் யுவர் இமாஜினேஷன் என்பது ஒரு பண்டிகைக்கால பிரச்சாரத்திற்கும் மேலானதாகும் - இது பாண்டலூன்ஸ்-இன் ஒரு புதிய அத்தியாயத்திற்கான தொடக்கமாகும். இன்றைய ஃபேஷன் என்பது படைப்பாற்றல், விளையாட்டு மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவை பற்றியதாகும்; மற்றும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் தங்களை ஒரு படைப்பாளியாகக் காண ஊக்குவிக்க விரும்புகிறோம். சமந்தா ரூத் பிரபு அந்த உணர்வை சரியாக வெளிப்படுத்துகிறார்; அவர் தன்னம்பிக்கை மிக்க, பல்துறை திறன் கொண்ட மற்றும் பரீட்சார்த்தம் செய்ய அஞ்சாதவர் ஆவார். அவருடன், பாண்டலூன்ஸ் ஃபேஷனை மட்டும் அணியாமல், அவர்களின் அடுத்த தனித்துவமான தோற்றத்தையும் உருவாக்கும் ஒரு நவீன இந்தியாவைக் கொண்டாடத் தயாராக உள்ளது” என்றார்.

பாண்டலூன்ஸ்-இன் முகமாக ஆவதை பற்றிப் பேசிய சமந்தா ரூத் பிரபு, “எனக்கு ஃபேஷன் என்பது சுய வெளிப்பாட்டின் ஒரு வடிவமாகும்; மற்றும் பாண்டலூன்ஸ் அந்த நம்பிக்கையுடன் கச்சிதமாக ஒத்துப்போகிறது. ‘ஸ்பார்க் யுவர் இமாஜினேஷன்’ ஆனது, ஃபேஷன் எப்படி இருக்க வேண்டுமென நான் உண்மையிலேயே நம்புகிறேனோ, அப்படியே தைரியம், தனிப்பட்ட மற்றும் ஊக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. இந்த பிராண்டானது நான் ஆழமாக இணைந்திருக்கும் மதிப்புகளான நம்பிக்கை, பல்துறை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது. அவர்களின் சொந்த ஒப்பற்ற ஸ்டைல் பயணங்களை உருவாக்கும் நவீன இந்தியாவை ஊக்குவிக்க, பாண்டலூன்ஸ்-உடன் கூட்டிணைவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form