இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய நிறுவனமாக முன்னணி வகிக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் ஸ்மார்ட்டான வாழ்க்கை முறைக்கான இணைப்புத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னணி பிராண்டான நாய்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, மின்சார வாகன தொழில்துறையில் முதல் முறையாக அறிமுகமாகும் மின்சார வாகனம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஒருங்கிணைப்பை அறிமுகம் செய்திருக்கின்றன.
இந்தியாவிலேயே முதல் முறையாக மின்சார வாகனமும் ஸ்மார்ட் வாட்ச்சும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் வாகனங்களுடன் இணைப்புத் தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேர தகவல்களைப் பெற்றபடி பயணிக்க முடியும். இந்த புதிய ஒருங்கிணைப்பு டிவிஎஸ் ஐ க்யூப் மின்சார ஸ்கூட்டரை நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் சிறப்பு பதிப்பு உடன் இணைக்கிறது, இந்த வசதி, வாகனத்தின் நிலை, பேட்டரி பற்றிய தகவல்கள், டயர்களில் இருக்கும் காற்றின் அழுத்தம் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்கும். மேலும் நாய்ஸ் ஸ்மார்ட் வாட்ச்சில் ஏற்கனவே உள்ள பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களையும், வாகனம் ஓட்டுபவர்கள் பயன்படுத்த முடியும்.
டிவிஎஸ் ஐக்யூப்இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் 6,50,000 வாகனங்கள் விற்பனையாகி இருப்பதன் மூலம் புதிய மைல்கல்லைத் தாண்டி, இந்தியாவின் நம்பர் 1 மின்சார ஸ்கூட்டர் பிராண்டாக தனது முன்னோடித்துவமிக்க நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நாய்ஸ் நிறுவனத்தின் உடனான இந்தக் கூட்டு செயல்பாடு வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத் தேர்வாக இவ்விரு பிராண்ட்களையும் தேர்ந்தெடுப்பதை மேலும் அதிகரிக்க செய்யும். கைகளில் அணியும் ஸ்மார்ட்வாட்சை, மின்சார வாகனம் பற்றி தகவல்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான ஒரு ஸ்மார்ட் கருவியாக அறிமுகப்படுத்தி இருப்பது, இந்தியாவின் போக்குவரத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு புரட்சிகரமான துணையாக இருக்கும். வாழ்க்கை முறை அடிப்படையிலான பயன்பாட்டு அணிகலன்கள் நவீன வசதிகளை அளிக்கும் என்ற தயாரிப்புக்கு அப்பாற்பட்ட ஸ்மார்ட்வாட்ச் ஆக மேம்படுத்தப்படும் போது, அவை பல்வேறு செயல்களுக்கும், போக்குவரத்திற்கும் கட்டளையிட உதவும் மையங்களாக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அன்றாட பயணங்களை ஸ்மார்ட்டாகவும், பாதுகாப்பாகவும், செளகரியமானதாகவும் மாற்றுகின்றன. டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் நாய்ஸ் இணைந்து முன்னெடுத்து இருக்கும் மின்சார வாகனம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இடையேயான இந்த புதிய இணைப்புத் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் அனுபவத்தில் இதுவரையில்லாத ஒரு புதிய அளவுகோலை உருவாக்கி இருக்கிறது.
இத்தொழில்துறையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் , கம்மூட்டர் அண்ட் இவி பிஸினெஸ் பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் & மீடியா பிரிவின் தலைமை அதிகாரி அனிருத்தா ஹால்டார் கூறுகையில், “நவீன தொழில்நுட்பம், சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதுமையான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம் போக்குவரத்தின் எதிர்காலத்தை மறுயறை செய்யவேண்டுமென்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நாய்ஸ் உடனான எங்களது கூட்டு செயல்பாடு எங்களது இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. இது ஸ்மார்ட்வாட்சை ஒரு வாழ்க்கை முறை பயன்பாட்டு சாதனம் என்பதிலிருந்து ஸ்மார்ட் ரைடிங் அசிஸ்டெண்ட் ஆக மாற்றுகிறது. டிவிஎஸ் ஐக்யூப் ஐ இணைப்புத் தொழில்நுட்ப ஸ்மார்ட்வாட்ச்சுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவில் போக்குவரத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்திருக்கிறோம். அதேநேரம், எங்களது வாகன உரிமையாளர்களுக்கு மிகச்சிறந்த, பாதுகாப்பான மற்றும் விருப்பத்தேர்வுகளின் அடிப்படையில் வாகன செயல்பாடுகளை மாற்றும் இன்டியுடிவ் பயணங்களுடன் மேம்படுத்துகிறோம்.” என்றார்.
மின்சார வாகனம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஒருங்கிணைப்பின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த, நாய்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அமித் காத்ரி, "நாய்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், மக்கள் ஸ்மார்ட் முறையில் வாழவும், தங்களது வேலைகளைப் பார்க்கவும், எப்போதும் இணைப்பில் இருக்கவும் அவசியமான தொழில்நுட்பத்தை உருவாக்குவதே எங்களது தொலைநோக்குப் பார்வையாக இருந்து வருகிறது. அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடனான இந்த கூட்டு செயல்பாடானது அதை நோக்கிய பயணத்தில் அமைந்திருக்கும் ஒரு சக்திவாய்ந்த முன்னேற்றமாகும். ஸ்மார்ட்வாட்சை ஒரு போக்குவரத்து துணையாக மாற்றுவதன் மூலம் அதை அணியும் உங்கள் மணிக்கட்டில் அர்த்தமுள்ள பல புதுமைகளைக் கொண்டுவருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது நாளைக் கடந்து செல்ல புத்திசாலித்தனமான, பல அம்சங்கள் ஒருங்கிணைந்த வழிகளைத் தேடுகிறார்கள். இதற்கான ஒரு தீர்வாக அமைந்திருக்கும் இந்த முதல் வகையான அனுபவம் எல்லைகளைத் தாண்டிச் செல்வதற்கும், நோக்கமுள்ள தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதற்கும், இந்தியாவில் இணைப்புத் தொழில்நுட்பம் அடிப்படையிலான வாழ்க்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் நாங்கள் காட்டிவரும் அக்கறையை பிரதிபலிக்கிறது." என்றார்.
டிவிஎஸ் ஐக்யூப் நாய்ஸ் ஸ்மார்ட் வாட்ச், டிவிஎஸ் ஐக்யூபின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ. 2,999 என்ற கவர்ச்சிகரமான அறிமுக விலையில், பிரத்தியேகமாகக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 12 மாத நாய்ஸ் கோல்ட் இலவச சந்தா உடன் கிடைக்கிறது.