எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டாளரருக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு முயற்சி

 



இந்தியாவில் சேமிப்புகள் நிதிமயமாக்கப்படுவது அதிகரித்துள்ளதால், முதலீட்டுச் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது.பாரம்பரிய முதலீடுகளிலிருந்து நவீன நிதி சாதனங்கள் வரை, மூலதனச் சந்தைகளில் பங்கேற்பதன் மூலம் செல்வத்தை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்களின் நடத்தையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஒரு காலத்தில் ஃபிக்சட் டெபாசிட் போன்ற பாரம்பரிய முதலீடுகள் ஆதிக்கம் செலுத்திய சந்தை, தற்போது பரஸ்பர நிதிகள், ஆர்இஐடிஎஸ்  மற்றும் இடிஎப்எஸ் போன்ற நவீன நிதித் தயாரிப்புகளை ஏற்கும் வகையில் வளர்ச்சி கண்டுள்ளது.

தொடக்கத்தில், பரஸ்பர நிதி முதலீடுகள் பெருநகரங்கள் மற்றும் முதல் அடுக்கு நகரங்களில் மட்டுமே குவிந்திருந்தன. ஆனால், சமீபத்திய போக்குகள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுகின்றன.இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்கள் (பி30 அல்லது "முதல் 30 நகரங்களுக்கு அப்பால்" உள்ளவை என வகைப்படுத்தப்படுபவை) பரஸ்பர நிதித் துறைக்கான சக்திவாய்ந்த வளர்ச்சி இயந்திரங்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்திய பரஸ்பர நிதிகள் சங்கத்தின் படி, ஜூலை 2025 நிலவரப்படி, பரஸ்பர நிதித் துறையின் மொத்த நிர்வகிக்கப்படும் சொத்துக்களில் 18% பி30 நகரங்களில் இருந்து வந்துள்ளது.இந்தப் பகுதிகளிலிருந்து வரும் ஏயுஎம், ஜூன் 2025-ல் ரூ.13.80 லட்சம் கோடியாக இருந்து, ஜூலை 2025-ல் ரூ.14.20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.இது 3% மாதாந்திர வளர்ச்சியையும், ஜூலை 2024-ல் இருந்த ரூ.11.77 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 21% என்ற வலுவான வளர்ச்சியையும் குறிக்கிறது.இந்த எழுச்சியானது, சிறு நகரங்களில் நிதிச் சேவைகளின் பரவல் ஆழமாவதையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை வளர்ந்து வருவதையும் பிரதிபலிக்கிறது.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் திட்டங்கள் மூலமான மாதாந்திர முதலீட்டுத் தொகை, சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சீரான வளர்ச்சியைக் காட்டியுள்ளது.இது, சந்தை நிலவரங்களைப் பொருட்படுத்தாமல், ஒழுக்கமான, நீண்ட கால முதலீட்டு உத்திகளையே முதலீட்டாளர்கள் அதிகம் விரும்புவதைக் காட்டுகிறது.இந்த மாற்றம், பல்வேறு தரப்பு மக்களிடையே அதிகரித்து வரும் நிதி முதிர்ச்சியையும், நிதி உள்ளடக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

முதலீட்டாளர்களின் பங்கேற்பு, குறிப்பாக பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில், தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.பரஸ்பர நிதிகளின் மொத்த ஃபோலியோக்களின் எண்ணிக்கை, 2024-ம் நிதியாண்டில் 17.78 கோடியாக இருந்த நிலையில், 2025-ம் நிதியாண்டில் 32% அதிகரித்து 23.45 கோடியை எட்டியுள்ளது.வளர்ச்சி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களின் ஃபோலியோக்கள் 33.4% அதிகரித்து 16.38 கோடியாக உயர்ந்துள்ளன, என்று எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form