புதிய மீட்டியார் 350 ரக பைக் அறிமுகம்



நடுத்தர அளவிலான (மிட் சைஸ்) மோட்டார்பைக் பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனமாகத் திகழும் ராயல் என்ஃபீல்ட் - இந்தியாவில் அதன் புத்தம் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட மீட்டியார் 350 ரக பைக்குகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 

சூரிய அஸ்தமிக்கும் பொன்னிற வானம் சூழ, அழகிய நெடுஞ்சாலைகளில், ரம்மியமான பயணங்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த மீட்டியார் 350, உண்மையான க்ரூஸர் வடிவமைப்பு, தனித்தன்மை, சீரான செயல்திறன் மற்றும் நிதானமான பயணத்திற்கு வற்ற வடிவமைப்பு ஆகியவற்றுடன் வந்துள்ளது; இது மிட்சைஸ் க்ரூஸர் பிரிவில் புதிய தரநிலையை தொடர்ந்து நிர்ணயித்து வருகிறது. 2020-இல் முதலில் வெளிவந்த Meteor 350 பைக், சிரமமின்றி நீண்ட தூரம் பயணிப்பது, மற்றும் சீரான நகர்புற பயணங்களுக்கு என அனைத்திற்கும் ஏதுவாக ரிஃபைன் செய்யப்பட்ட நம்பகமான பைக் என்ற நற்பெயரை ஈன்றுள்ளது. தற்போது இந்த புதிய மோட்டார்பைக் - ஃபயர்பால், ஸ்டெல்லார், அரோரா மற்றும் சூப்பர்நோவாஆகிய வேரியண்ட்களில் புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் வருகிறது.

349சிசி ஏர்-கூல்டு ஜே- சீரிஸ் என்ஜினால் இயக்கப்படும், இது 20.2 பிஎச்பி, 6100 ஆர்பிஎம் இல் அதிகபட்ச பவர் மற்றும் 27 என்எம், 4000 ஆர்பிஎம் இல் அதிகபட்ச டார்க் வழங்குகிறது, 2025 மீட்டியார் 350 அதன் முழு வரிசையிலும் பல ஸ்டாண்டர்டு அப்கிரேட்களுடன் வருகிறது. இந்த அப்டேட்டில் எல்இடிஹெட்லாம்புகள், டிரிப்பர் பாட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், யுஎஸ்பி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட், அஸிஸ்ட் அண்ட் ஸ்லிப் கிளட்ச் மற்றும் அட்ஜெஸ்ட் பண்ணக்கூடிய லிவர்ஸ் அடங்கும்.

ராயல் என்ஃபீல்டு தனது மீட்டியார் 350 வரிசையை அனைத்து வேரியண்ட்களிலும் புதிய நிறத் தொகுப்புகளுடன் புதுப்பித்துள்ளது. மேல் தரமான  சூப்பர்நோவா வேரியண்ட் இப்போது க்ரோம் பினிஷுடன் கூடிய நவீன நிறத் திட்டத்தில் கிடைக்கிறது, அதே சமயம் அரோரா வேரியண்ட், பாரம்பரியம் மையமாகக் கொண்ட நிறத் தேர்வுகளுடன், ரெட்ரோ-ஸ்டைல் க்ரூசர் விரும்புபவர்களுக்கு ஈர்ப்பாக உள்ளது. ஸ்டெல்லர் வேரியண்ட் அதன் நுணுக்கமான மற்றும் தைரியமான நிறத் தேர்வுகளுடன், மற்றும் Fireball வெரியண்ட் அதன் விளைந்த மற்றும் உயிர்ப்பான நிற விருப்பங்களுடன், சுதந்திரமாக சாலையெங்கும் சஞ்சரிக்க விரும்பும் இளைஞர்களை கவரும். இந்த அப்டேட்களுடன், இந்த விழாக்காலத்தில் ராயல் என்ஃபீல்டு தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் சுறுசுறுப்பான க்ரூசிங் அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.

புதிய மீட்டியார் 350 பைக் பற்றி ஐச்சர் மோட்டார்ஸ் லிமிடெட்  நிறுவனத்தின், நிர்வாக இயக்குனரும், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின், தலைமை செயல் அலுவலருமான பி.கோவிந்தராஜன் கூறுகையில், “மீட்டீயார் 350 பைக் எப்போதும் ஒரு மோட்டார் பைக்காக தனித்து நிற்கிறது. இது காலத்தால் அழியாத வடிவமைப்பையும், நவீன காலத்தின் சௌகரியத்தையும் ஒருங்கிணைக்கிறது. இது எளிதான பயணத்தை விரும்புபவர்களுக்கு உற்ற துணையாக இருக்கிறது. அனைத்திலும் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட இதன் சமீபத்திய வேரியண்ட்களில், ரம்மியமான பயணங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக - புதிய வண்ணங்கள், புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் மீட்டீயார் பைக்கின் வசீகரத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளோம். மீட்டியார் 350 என்பது ஒரு மோட்டார்பைக் மட்டுமல்ல, பரந்த சாலையில் நிதானமான பயணங்களையும், மறக்கமுடியாத அனுபவங்களையும் வழங்கும் ஒரு லைஃப்ஸ்டைல் பிரகடனம் ஆகும். இந்த பண்டிகை காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக அனைவருக்கும் மீட்டியார் 350 பைக்கின் இந்த புதிய ரகத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறினார்.

 இந்த புதிய மீட்டியார் 350 பைக்கின் விலை சென்னை எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் ரூ.1,95,762 முதல் ஆரம்பமாகிறது. ஃபயர்பால் வேரியண்ட் ரூ.1,95,762, ஸ்டெல்லர் ரூ.2,03,419,ரரோரா ரூ.2,06,290 மற்றும் சூப்பர்நோவா வேரியண்ட் ரூ.2,15,883 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராயல் என்ஃபீல்டு இப்போது அதன் மோட்டார் பைக்குகளுக்கு 7 ஆண்டுகள் வரை ரோடுசைடு அசிஸ்டண்ஸ் சாலை உதவியுடன் கூடிய ஒரு விரிவான நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டியை வழங்குகிறது; இது வாடிக்கையாளரின் நம்பிக்கை மற்றும் வாகன உரிமையாளராக அவரது அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது. இந்த நீட்டிக்கப்பட்ட கவரேஜ் - வழக்கமான 3 ஆண்டுகள் / 30,000 கிமீ அல்லது 40,000 கிமீ (650 சிசி மோட்டார் பைக்குகள்) என்கிற வாரண்ட்டியுடன் சேர்த்து, கூடுதலாக 4 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ (எது முன்பு எட்டப்படுகிறது  அது பொருந்தும்) வாரண்ட்டியுடன் வருகிறது; இதனால் பயணிகளுக்கு ஒவ்வொரு பயணத்தின் போதும் நீண்ட கால உத்தரவாதம், மற்றும் மன நிம்மதி கிடைக்கிறது

Post a Comment

Previous Post Next Post

Contact Form