டைட்டன் நிறுவனம், குண்டுபெரும்பேடு ஏரியை புத்துயிர் பெறச் செய்திருக்கிறது



டைட்டன் கம்பெனி லிமிடெட் தனது சுற்றுச்சூழல் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த முன் முயற்சியின் ஒரு பகுதியாக, தேசிய வேளாண் நிறுவனத்துடன் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுபெரும்பேடு ஏரியை வெற்றிகரமாகப் புத்துயிர் பெற செய்துள்ளது. டைட்டனின் முறைப்படியான நடவடிக்கைகளால், 157 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த பிரம்மாண்டமான ஏரி இப்போது நீர், விவசாயம் மற்றும் சமூக வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளது.

குண்டுபெரும்பேடு ஏரியை தூர்வாரி புனரமைக்கும் புத்துணர்ச்சிப் பணியில் 1.05 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அதன் அணைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.  435 மீட்டர் அளவிற்கு அரிப்பைத் தடுக்கும் அடிப்பகுதி சுவர் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மதகுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு உபரி அணை மற்றும் ஒரு தடுப்பு அணையுடன் புதிதாக கட்டப்பட்டு ஆர்.சி.சி பாஸ்வே பாலம் ஒன்றும் இந்த புனரமைப்பில் அடங்கும். இந்த முயற்சிகள் ஏரியின் கட்டமைப்பு வலிமையையும், நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் நிலைத்தன்மையையும் மீட்டெடுத்துள்ளன என்பது உற்சாகமளிக்கும் செய்தியாகும்.

குண்டுபெரும்பேடு ஏரி ஏற்படுத்த இருக்கும் தாக்கம், இப்பொழுதே மிக நன்றாக தெரிய ஆரம்பித்திருக்கிறது.  குண்டுபெரும்பேடு ஏரியின் தூர்வாரும் பணிகளின் மூலம்,  26 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கும் அதன் திறன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 5 மாதங்கள் கூடுதலாக விவசாயம் செய்ய உதவுவதோடு, இது இப்பகுதியில் உணவுப் பாதுகாப்பிற்கு நேரடியாக தனது பங்களிப்பையும் வழங்கும். நீர்மட்டம் ஏறக்குறைய 10 அடி உயர்ந்துள்ளது. இதன் பலனாக கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் பலனளிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.  பயிரிடும் மொத்த பரப்பளவில், இப்போது 20% அளவு விவசாயம் விரிவடைந்திருக்கிறது.  இதனால் 50 முதல்100 ஏக்கர் மீண்டும் சாகுபடிக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட மகசூல் மற்றும் நீர்நிலை வசதியினால் பயிர்கள் வாடாமல் தாக்குப்பிடிக்கும் என்பதால்  விவசாயிகள் தங்களது வருமானத்தில் 30-40% அதிகம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குண்டுபெரும்பேடு பகுதியில் சுமார் 3,000 பேர்,  இந்த ஏரியின் மூலம் நேரடியான தாக்கத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும் இதையொட்டியுள்ள இரண்டாம் நிலை கிராமங்களில் உள்ள 27,000 பேருக்கும் இதன் பலன்கள் கிடைத்து வருகின்றன. நிலத்தடி நீரை மீண்டும் உயரச் செய்திருக்கும் நீர்நிலை மேலாண்மை மற்றும் வெள்ள அபாயங்களைக் குறைக்கும் நடவடிக்கை மூலம், இந்த ஏரியின் பலன்கள் ஏறக்குறைய 1.2 லட்சம் மக்களை மறைமுகமாக  சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“நீர் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழல் சார்ந்த ஒன்றாக மட்டுமில்லாமல், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏராளமான மக்களுக்கு சமூக-பொருளாதார வசதியை அளிக்கும் ஒரு கட்டாய தேவையாகும்” என்று டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக துணைத் தலைவர் திருமதி ரேவதி காந்த் கூறினார். “குண்டுபெரும்பேடு ஏரியின் புனரமைப்பு பணிகள்,  சுற்றுச்சுழலின் நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சி மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிரப்படும் வளம் ஆகியவற்றுக்கு நாங்கள் முன்னுரிமை அளிப்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. நீர் வாழ்வாதாரத்திற்கு தொடர்ந்து பயன்படும் அதன் தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலம், இந்தத் திட்டம் ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த ஒன்றாக மட்டுமில்லாமல், சமூகம் முன்னெடுக்கும் முன்மாதிரி திட்டமாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது’ என்று அவர் மேலும் கூறினார்.

தூர் வாரப்பட்டு முற்றிலுமாக புனரமைக்கப்பட்ட இந்த ஏரி செப்டம்பர் 18-ம் தேதி, கலைச்செல்வி மோகன், ஐஏஎஸ் (மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம்), ஆர். அருண்மொழி (நீர்வளத்துறை, கீழ் பாலாறு வடிநிலக்கோட்டம்) மற்றும் எஸ். சுவாமிநாதன் (அறங்காவலர், தேசிய வேளாண் நிறுவனம்) ஆகியோர் முன்னிலையில் ரேவதி காந்த் (டைட்டன் நிறுவன தலைமை வடிவமைப்பு அதிகாரி). என்.இ. ஸ்ரீதர் (சுற்றுச் சூழல் நிலைத்தன்மை பிரிவு தலைமை அதிகாரி, டைட்டன்) மற்றும் விஜய், (நிதிப் பிரிவு துணைத் தலைவர், டைட்டன்) ஆகியோரால் குண்டுபெரும்பேடு ஏரி குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form