இந்தியாவின் முன்னணி பசுமை சிமென்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றான மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட ஜேஎஸ்டபிள்யு குழுமத்தின் ஒரு பகுதியான ஜேஎஸ்டபிள்யு சிமென்ட் நிறுவனம், நாட்டின் வெப்பமண்டல தெற்கு பிராந்தியத்தில் வீடுகள் எதிர்கொள்ளும் அதிக ஈரப்பத சவால்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புரட்சிகரமான சூப்பர் பிரீமியம், நீர் எதிர்ப்பு சிமென்டான சிஎச்டி வாட்டர்கார்ட் இன் அறிமுகத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.
டர்போ ஜெல் டெக்னாலஜி மூலம் ஆதரிக்கப்படும் சிஎச்டி வாட்டர்கார்ட், ஒரு சக்திவாய்ந்த உருவாக்கத்தில் வலிமை, ஆயுட்காலம் மற்றும் ஈரப்பத எதிர்ப்பு ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட, சிமென்ட் கண்டுபிடிப்பில் ஒரு புதிய தரத்தை கொண்டுவருகிறது
ஜேஎஸ்டபிள்யு சிமென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. நிலேஷ் நர்வேகர் இதை அறிவிக்கின்றபோது கூறுகையில், "தென்னிந்தியாவின் வெப்பமண்டல காலநிலை, அதன் கடுமையான ஈரப்பதம், கடலோர உப்பு காற்று மற்றும் கனமான மழைக்காலங்கள் ஆகியவை கான்கிரீட் கட்டமைப்புகளின் நீண்ட ஆயுளை பாதிக்கின்றன. சிஎச்டி வாட்டர்கார்ட் மூலம், வீடுகளை கசிவு, ஈரப்பதம், உப்பு அரிமானம் மற்றும் ஈரப்பதம் சார்ந்த சேதங்களிலிருந்து சிறப்பாக பாதுகாக்கும் ஒரு தனித்திறன் தீர்வை நாங்கள் வழங்குகின்றோம்." என்றார்.
ஒரு நீர் எதிர்ப்பு கொண்ட ஜேஎஸ்டபிள்யு சிஎச்டி வாட்டர்கார்ட் இன் முதன்மை அம்சம் என்னவென்றால், இது கசிவு மற்றும் ஈரப்பதத்தைத் தடுக்கிறது, இதன் மூலம் வீடுகளை உலர்வாகவும் சேதமின்றியும் வைத்திருக்கிறது. இது அரிப்பை எதிர்க்கும் தன்மை கொண்டது, இது வலுவூட்டப்பட்ட இரும்பு கம்பிகளை துருப்பிடிப்பிலிருந்து பாதுகாக்கிறது, இதன் விளைவாக, கட்டமைப்பு உறுதியை மேம்படுத்துகிறது. இந்த டர்போ ஜெல் நன்மை, மேம்பட்ட வேலைத்திறன் மற்றும் அழுத்த வலிமைக்கான பாலிமர்-செறிவூட்டப்பட்ட நீரேற்ற மேட்ரிக்ஸை உறுதி செய்கிறது.
“இது வெறும் சிமென்ட் அல்ல. இது உங்கள் கனவு இல்லத்திற்கான பாதுகாப்பு. சிஎச்டி வாட்டர்கார்டு மூலம், செயல்திறன் தரநிலையை உயர்த்துவது மட்டுமல்லாமல், ஒரு பண்டமாக குறைவாகவும் செயல்திறன் சார்ந்த தீர்வாக அதிகமாகவும் சிமென்ட் எவ்வாறு கருதப்படுகிறது என்பதையும் மறுவரையறை செய்கிறோம். " என்று ஜேஎஸ்டபிள்யு சிமென்ட் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஹிதேந்திர ஜரிவாலா கூறினார்.
கடலோர ஈரப்பதம், வெப்பசலன பருவமழை மற்றும் உப்புக் காற்று வெளிப்பாடு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிற தென்னிந்தியா, பெரும்பாலும் கான்கிரீட் சிதைவு, வலுவூட்டு இரும்பு பட்டை அரிமானம் மற்றும் ஈரப்பத ஊடுருவல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்த பிராந்தியம் முழுவதும் உள்ள தனியார் வீடு கட்டுபவர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சிவில் பொறியாளர்கள் அனைவருக்கும் சிறந்த தேர்வாக இதை அமைக்கின்ற வகையில் சிஎட்சி வாட்டர்கார்ட் இந்த சவால்களை நேரடியாக சமாளிக்கிறது.