மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, முயல் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் எஸ்.பி.எஸ்.குகன் என்கிற குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில் "சுப்பன்" என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. "தீய எண்ணங்கள் கொண்ட அரக்கனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்" நிகழ்வின் நியாய தர்மத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தை குகநேசன் சோனைமுத்து செய்துள்ளார்.
ரொட்டேரியன் ஆர்.ஆனந்தமுருகனின் ஶ்ரீ பகவான்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜோஸ் ஃப்ராக்ங்ளின் இசையமைத்துள்ளார். எடிட்டிங் ஜெயகிருஷ்ணா, கலை தாமோதரன் ராம், நடனம் நிஷார் கான், ஒப்பனை இதயா ஜேம்ஸ், தயாரிப்பு நிர்வாகம் சிவகாசி பாலா மற்றும் சமுத்ரா செந்தில், மக்கள் தொடர்பு என்.விஜயமுரளி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். பாடல்களை மோகன்ராஜன், கருமாத்தூர் மணிமாறன் எழுதி, முகேஷ், ஷிவானி பாடியுள்ளனர்.
இந்த படம், சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பேசுகிறது மற்றும் ரோட்டரி சங்கங்களின் சமூக சேவை, செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது
"சுப்பன்" திரைப்படத்தில் நடிகர்கள் ஆனந்த முருகன் (அறிமுகம்), பாலஹாசன், யாசர், நடிகைகள் காயத்ரி ரேமா, ஷார்மிஷா, ஸ்வாதி எஸ் பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் டாக்டர் சரவணன், ரொட்டேரியன் விஸ்வ நாராயண், ஸ்ரீதேவா, மிதுன் சக்ரவர்த்தி, கஜராஜ், சரவண சக்தி, ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இன்றைய சூழலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் இப்படம் பேசுகிறது. நாடு முழுவதும் ரோட்டரி சங்கங்கள் செய்து வரும் சமூக செயல்பாடுகளைக் குறிக்கும் வகையிலான காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. வெளியீட்டுக்கான இறுதிகட்டப் பணிகளும் நிறைவு பெற்று விட்டன. "சுப்பன்" திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
சுப்பன் திரைப்படம் குறித்து இயக்குனர் குகநேசன் சோனைமுத்து கூறுகையில், எங்களது மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது சுப்பன் திரைப்படத்தை மதுரையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஆர்.ஆனந்த முருகன் தயாரிப்பில் உருவாக்கியுள்ளோம். சமூக ஊடகங்களில் பெண்களுக்கு உள்ள ஆபத்துகள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துக்களைத் தாங்கி படம் தயாராகியிருக்கிறது, என்றார்.
