இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், நாற்பது ஆண்டுகளாக தொடரும் தனது ரேசிங் மரபை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 2025 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த அப்பாச்சி இரு சக்கர வாகனம் இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த இருசக்கர வாகன ப்ரியர்களை மனதில் கொண்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தும் மேம்பாட்டு அம்சங்கள் மற்றும் ஆக்ரோஷமான ஸ்டைலிங் ஆகியவற்றுடன் தெருக்களில் சாகச பயண அனுபவத்தை அளிக்கும் ’த அல்டிமேட் ஸ்ட்ரீட் விப்பன்’ ஆக இவ்வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதிய 2025 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310, ரேசிங் குணாதிசயத்துடன் தெருக்களில் தொடரும் தனது ஆதிக்கத்தை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலைகளில் வாகனம் ஓட்டும் போது, தங்களது சாகச திறமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கை, வாகனத்தை கையாள்வதில் இருக்கும் கட்டுப்பாடு, கம்பீரமான ஆளுமை இவையனைத்தையும் கொண்டிருக்கும் சாகச ப்ரியர்களுக்காக, செயல்திறனையும், துல்லியத்தையும் மிக நேர்த்தியுடன் கலந்திருக்கும் ஒரு தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது 2025 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310.
ஓபிடிபி-க்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 2025 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310, ஸ்மார்ட் செயல்திறனை மறுவரையறை செய்கிறது. தேவைப்படும் போது, நிகழ்நேரத்தில் வாகனத்தின் உமிழ்வைக் கண்காணிக்க உதவும் வசதி, உடனுக்குடன் செயல்திறனை வெளிபடுத்தும் ஆற்றல் மற்றும் இயந்திரத்தின் ஆரோக்கியம் குறித்த மேம்படுத்தப்பட்ட தகவல்களையும் வழங்குகிறது. பல மொழிகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான மொழியில் தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் அடுத்த தலைமுறை, யுஐ/யுஎக்ஸ்கிளஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட தகவல்களையும், வாகனம் ஓட்டுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் அம்சங்களின் அடிப்படையில் தகவல்களையும், ஒரு முழுமையான சாகச பயண அனுபவத்தையும் வழங்குகிறது. அனைத்து வகையிலும் ஒரு மன திருப்தியை அளிக்கும் சவாரி, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, நவீனத்தை வெளிப்படுத்தும் புதுமை என முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு முழுமையான சாகச பயணா அனுபவத்தை வழங்குகிறது.
இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக ட்ரான்ஸ்பரன்ட் க்ளட்ச் கவர், கீ லெஸ் ரைய்ட், ட்ராக் டார்க் கண்ட்ரோல், கார்னரிங் ட்ராக் டார்க் கண்ட்ரோல் [பிடிஒ] போன்ற சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் பயன்படுத்தும் வசதியை அளிக்கும் யுஐ உடன் கூடிய இரண்டாம் தலைமுறை கிளஸ்டர் வசதியும் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட தோற்றத்திலான கிராபிக்ஸ் மற்றும் மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கும்
டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310 அறிமுகம் குறித்துப் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவின் வணிகத் தலைவர் விமல் சம்ப்லி பேசுகையில், “இணைப்பு தொழில்நுட்பம், தனிப்பயனாக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைக்கு ஏற்ற தயாரிப்பு என பல அம்சங்களில் மிகச் சிறந்த ஒன்றாகவும் அறிமுகமாகி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய எல்லைகளைத் தாண்டி பயணிக்கும் எங்களது டிவிஎஸ் அபாச்சி ப்ரியர்களை உள்ளடக்கிய உலகளாவிய சமூகத்திற்கு இந்த மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை கொண்டு வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்றார்.
மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வரும் அதன் பாரம்பரியத்தை தொடர்ந்து தக்க வைக்கும் வகையில், 2025 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310 மோட்டார் சைக்கிள் 9,700 ஆர்பிஎம்மில் 35.6 பிஎஸ் மற்றும் 6,650 ஆர்பிஎம்மில் 28.7 என்-ஐ வழங்குகிறது. அடிப்படை நிலை ரூ.2,39,990க்கும், உயர் நிலை ரூ. 2,57,000க்கும் பிடிஓ ரகம் ரூ.2,75,000 ஆரம்ப விலையில் இருந்தும் ஜூலை 16 முதல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் கிடைக்கும்.