சூப்பர்டெக் இவி நிறுவனம் பொது வெளியீடு மூலம் ரூ.29.90 கோடி நிதி திரட்ட திட்டம்



சூப்பர்டெக் இவி லிமிடெட் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன (இவி) சந்தையில் முன்னோடியாக செயல்பட்டு வரும், குறிப்பாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மீது கவனம் செலுத்தும் நிறுவனமாகும். இந்த நிறுவனம், அதன் எஸ்எம்இ பொதுவெளியீட்டின் மூலம் ரூ. 29.90 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த வெளியீட்டை பிஎஸ்இ, எஸ்எம்இ பிளாட்ஃபாமில் துவங்குவதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஐபிஓ 2025 ஜூன் 25ஆம் தேதி சந்தாவுக்கு திறக்கப்பட்டு, ஜூன் 27ஆம் தேதி மூடப்படுகிறது. இந்த வெளியீட்டின் புக் ரன்னிங் லீட் மேனேஜராக கார்ப்பரேட் மேக்கர்ஸ் கேபிடல் லிமிடெட் செயல்படுகிறது.

ரூ. 29.90 கோடிக்கான ஆரம்ப பொது வெளியீடு முற்றிலும் புதிய வெளியீட்டாகும். ரூ.10 முக மதிப்புடன் 32,49,600 ஈக்விட்டி ஷேர்கள் வெளியிடப்படுகிறது. இந்த வெளியீட்டிற்கான விலை வரம்பு ஒரு பங்கிற்கு ரூ. 87 முதல் ரூ. 92 ஆகும். வெளியீட்டு வருமானத்தில், நிறுவனம் ரூ.16.50 கோடியை செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்கான நிதிக்காகவும், ரூ. 3 கோடியை சில கடன்களின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தவும், மீதமுள்ளதை பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் வெளியீடு தொடர்பான செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான குறைந்தபட்ச லாட் அளவு 1,200 பங்குகள் ஆகும், இது ஒரு பங்கிற்கு ரூ. 92 என்ற உயர் விலைக் குழுவில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,10,400 ஆகும். வெளியீட்டிற்கான சில்லறை ஒதுக்கீடு 47.51% என்ஐஐ 47.47%, க்யூஐபி 5.02% மற்றும் மார்க்கெட் மேக்கர் 5.02% ஆகும்.

2022-ல் நிறுவப்பட்ட சூப்பர்டெட் இவி லிமிடெட், இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையின் முன்னோடிகளில் ஒன்றாகும். இந்திய நுகர்வோரின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப, நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், குப்பை அகற்றும் வாகனங்கள் மற்றும் லோடர்கள் உள்ளிட்ட பல்வேறு வகை தயாரிப்புகளை வழங்குகிறது.  நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் மொத்தம் 12 மாடல்கள் உள்ளன. இதில் 8 வகையான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 வகையான இ-ரிக்ஷாக்கள் அடங்கும். சூப்பர்டெக் இவி, தற்போது 445 விநியோகஸ்தர்கள் கொண்ட விநியோக வலையமைப்பை உருவாக்கியுள்ளது மற்றும் இந்தியாவிலுள்ள 19 மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்யப்பிரதேசம் உள்ளிட்டவை அடங்கும்.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form