மாதாந்திர சுலபத் தவணை (இஎம்ஐI) பரிவர்த்தனைகளில் உடனடி தள்ளுபடிகளை வழங்குவதற்காக, ரீடெயில் துறையில் வலுவான நிலையில் உள்ள இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனமான ‘தி லுலு குரூப்’ உடன் ஃபெடரல் வங்கி இணைந்துள்ளது.
லுலு மால்களில் ஷாப்பிங் செய்பவர்கள் ஃபெடரல் வங்கியின் தற்போதைய ‘ சேவிங்ஸ் கி வித்யா’என்கிற பிரச்சாரத்தின் மூலம் பயனடையலாம். அதாவது ‘சேவிங்ஸ் கி வித்யா' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, இப்போது இந்தியா முழுவதும் உள்ள லுலு ஸ்டோர்களில் ஃபெடரல் வங்கியின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு - வங்கி 10% உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இச்சலுகை மூலம் ஜூன் 12 முதல் ஜூன் 30, 2025 வரை, குறைந்தபட்சம் ரூ.5,000 செலவில் மேற்கொள்ளப்படும் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர் அல்லது ஃபேஷன் என எதுவாக இருந்தாலும் - வாடிக்கையாளர்கள் இப்போது இஎம்ஐ-யின் வசதி மற்றும் உடனுக்குடனான வெகுமதிகள் மூலம் சாதுர்யமாக சேமிக்க முடியும்.
ஃபெடரல் வங்கியின் தலைமை மார்கெட்டிங் அலுவலர், எம்விஎஸ் மூர்த்தி இதுபற்றி கூறுகையில், “லுலு குழுமத்துடனான எங்கள் கூட்டணியின் நோக்கம், லுலு மால்களில் ஷாப்பிங் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சௌகரியத்தையும், மதிப்பையும் ஈட்டித் தருவதேயாகும். ஃபெடரல் வங்கியின் கார்டினை ஒவ்வொரு முறை ஸ்வைப் செய்யும் போதும் சேமிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே இந்த முன்முயற்சியின் இலக்காகும். உடனடி சேமிப்பின் என்கிற ஒரு கூடுதல் ஆதாயம் கிடைப்பதால், முழு குடும்பத்திற்குமான ஷாப்பிங்கின் போது அவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஃபெடரல் வங்கியின் கார்டுகளைப் பயன்படுத்தி லுலுவில் ஷாப்பிங் செய்வதை ஊக்குவிப்பதும், பிரீமியம் தரத்திலான தயாரிப்புகளை வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதுமே இந்த முன்னெடுப்பின் பின் உள்ள யோசனையாகும். இந்த கூட்டு முயற்சியின் மூலம், பணத்தை அனாயசமாக செல்வழிகிறோமோ என்கிற குற்ற உணர்வு இல்லாமல் சிறந்த லைஃப் ஸ்டைலை உருவாக்கலாம்,” என்று தெரிவித்தார்.
லுலு குரூப் இந்தியாவிற்கான ஹெட்- ரீடெயில் மார்கெட்டிங், பிரியா மேனன் செல்லப்பன் கூறுகையில், "லுலு எப்போதும் அதன் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பினை ஈட்டித் தருவதிலும், மகிழ்ச்சியை வழங்குவதிலும் முனைப்பாக உள்ளது. ஃபெடரல் வங்கியுடனான எங்கள் கூட்டணி ஷாப்பிங் செய்வதை மிகவும் பலனளிப்பதாக மாற்றுவதன் மூலம் அதனை அடுத்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. இந்த இஎம்ஐ தள்ளுபடி சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது அனைவருக்கும் ஏதுவானது மற்றும் பல்வேறு ரகங்கள் என இரண்டிலும் சிறந்தவற்றை பெற்று மகிழலாம்; இவையனைத்தும் ஒரே இடத்தில்,” என்று தெரிவித்தார்.