பன்முகப்படுத்தப்பட்ட அதானி போர்ட்ஃபோலியோவின் சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருள் நிறுவனமான ஏசிசி, 88 வயதான ஒப்பந்ததாரரான கே.சி.மணியை பெருமையுடன் ஆதரிக்கிறது - அவரது அசாதாரண சேவை, கைவினைத்திறன் மற்றும் சமூக மேம்பாடு ஏலகிரி மலைப் பகுதியை மாற்றி அமைத்துள்ளது. 1945ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த மணியின் பயணம், துன்பங்களுடன் தொடங்கியது. பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய கட்டாயத்தில், பின்னர் அவர் ஒரு கட்டுமானத் தொழிலாளியாக ஆனார். படிப்படியாக நிபுணத்துவத்தை வளர்த்து வல்லுநராக மாறினார்.
1975 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக ஒரு பள்ளியைக் கட்டும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது - இது ஏலகிரி மலைப்பகுதியை நவீனமயமாக்கும் அவரது பயணத்திற்கு அடித்தளமாக அமைந்ததுடன், சிமெண்டால் கட்டப்பட்ட கட்டமைப்புகளுடன் நவீனமயமாக்கும் பல தசாப்த காலப் பணியின் தொடக்கம் ஆனது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிமென்ட் விற்பனை நிலையத்தை நடத்தி வரும் அவரது மனைவியின் ஆதரவுடன், மணி, ஏழை குடும்பங்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். மற்றும் 75 க்கும் மேற்பட்ட இளம் கிராமவாசிகளுக்கு கட்டுமானத்தில் பயிற்சி அளித்துள்ளார். அவர்களில் பலர் இப்போது வெற்றிகரமான தொழில்களை வழி நடத்துகின்றனர். அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், இன்றும் கூட பள்ளிகள் உட்பட புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார்.
அதன் உயர்தர தயாரிப்புகள், சேவைகள் மற்றும் மதிப்புகள் மூலம், ஏசிசி நிறுவனம், கட்டிடங்களில் மட்டுமல்ல, அதிகாரம் பெற்ற உயிர்களின் எண்ணிக்கையிலும், எதிர்காலத்தை மாற்றியமைத்ததிலும், கே.சி.மணி போன்ற மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுடன் பெருமையுடன் நிற்கிறது.