இந்தியாவில் வேளாண் இயற்கை உரங்களை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சோபுரம் மற்றும் தியாகவல்லி கிராமங்களில் ஆர்.ஓ. குடிநீர் நிலையங்களை நிறுவியுள்ளது. இந்த முன்முயற்சியானது, கோரமண்டல் நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ’கோரோநீர்’ திட்டத்தின் கீழ் இது தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த குடிநீர் நிலையங்கள் இக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குடிநீர் நிலையங்களின் தொடக்க விழாவில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் துணைத் தொகுதி மேம்பாட்டு அதிகாரி பிரேம்குமார், பஞ்சாயத்துத் தலைவர்கள்; அரசு பஞ்சாயத்து செயலாளர்; மற்றும் கிராம பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பயோ ப்ராடெக்ட்ஸ் பிரிவின் வைஸ் பிரசிடெண்ட் மற்றும் பிசினெஸ் ஹெட் சீனிவாசன், சி.எஸ்.ஆர் பிரிவின் தலைவர் ஜெயகோபால் சதுர், பயோ ப்ராடெக்ட்ஸ் பிரிவின் அசிஸ்டெண்ட் ஜெனரல் மேனேஜர் மற்றும் யூனிட் ஹெட் அசோக் பாலாஜி எஸ் ஆகியோர் முன்னிலையில் கோரமண்டல் நிறுவனத்தின் பிற மூத்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்
கோரமண்டல் நிறுவனம், இந்த இரு கிராமங்களில் ஆர்.ஒ. குடிநீர் நிலையங்களை அமைப்பதற்காக 34 லட்சங்கள் முதலீடு செய்துள்ளது. சமூகத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கும், பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த குடிநீர் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் இவை சுத்தமான குடிநீரை வழங்குவதால், நீரினால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளைக் குறைப்பதோடு, சமூக நல்வாழ்வை மேம்படுத்த உதவும். இதனால் இந்த கிராமங்களில் வசிக்கும் 1,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தத் திட்டம் பற்றி கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பயோ ப்ராடெக்ட்ஸ் பிரிவின் வைஸ் பிரசிடெண்ட் மற்றும் பிசினெஸ் ஹெட் சீனிவாசன் கே.பி கூறுகையில், " எங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சி வெளிகாட்டும் வகையில் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீர் இங்குள்ள மக்களுக்கு கிடைக்க செய்திருப்பது, அவர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவும். மேலும் இந்த அத்தியாவசியமான உள்கட்டமைப்பு வசதிகளின் மூலம் திருச்சோபுரம் மற்றும் தியாகவல்லி கிராமங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்." என்றார்.