உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ், ஆயுள் காப்பீடு தொடர்பான முதலீட்டுத் தயாரிப்புகள் மூலம் உங்கள் செல்வத்தை வளர்த்து, உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது, இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரு புதிய நிதிகளை டாடா ஏஐஏ அறிமுகப்படுத்துகிறது – இது இந்தியாவின் வளர்ச்சிக் கதை முழுமையாகக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும்.
தங்களது செல்வத்தை அதிகரிக்கவும், குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் விரும்புபவர்களுக்கு – டாடா ஏஐஏ டாப் 200 ஆல்பா 30 குறியீட்டு நிதி, பங்கு சார்ந்த வளர்ச்சியுடன் வலுவான ஓய்வூதிய கார்பஸை உருவாக்குவதில் கவனம் செலுத்துபவர்களுக்கு - டாடா ஏஐஏ டாப் 200 ஆல்பா 30 இன்டெக்ஸ் பென்ஷன் ஃபண்ட் ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இந்த நிதிகள் ஜூன் 23, 2025 அன்று முதலீட்டிற்காகத் திறக்கப்படும், மேலும் ஜூன் 30, 2025 அன்று முடிவடையும் புதிய நிதி சலுகை காலத்தில் யூனிட்டுக்கு வெறும் 10 ரூபாய்க்குக் கிடைக்கும்.
டாடா ஏஐஏவின் தலைமை வங்கி காப்பீட்டு அதிகாரி கமல் பரத்வாஜ் கூறுகையில், "இந்தியா வரும் தசாப்தங்களில் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளது. நாங்கள் அறிமுகம் செய்துள்ள புதிய நிதிகள், தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம் நிதி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைவான ஆபத்துடன் நீண்ட காலத்தில் ஊக்கமளிக்கும் வருமானத்தைக் கிடைக்கச் செய்வது இந்நிதிகளின் முக்கிய இலக்காகும்" என்றார்.