புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 டுயல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் அறிமுகம்



இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, முற்றிலும் புத்தம் புதிய 2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 -ஐ அறிமுகம் செய்திருக்கிறது.. இந்தப் புதிய பதிப்பு டிவிஎஸ் அப்பாச்சி வரிசை வாகனத்தில் மிகவும் வலிமையானதாக, டுயல் சேனல் ஏபிஎஸ்அளிக்கும் மிகவும் மேம்பட்ட அசத்தலான பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160  இருசக்கர வாகனமானது ஓபிடி2ஒஒபிக்கு ஏற்ற ஒன்றாகவும், டுயல் சேனல் ஏபிஎஸ் அம்சத்துடனும் அறிமுகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இவ்வாகன பிரிவிலேயே மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு, மிகச்சிறப்பான வாகன கட்டுப்பாடு  இரண்டையும் உறுதி செய்கிறது.. மேலும்அபார சக்தி, எந்த சூழலிலும் எளிதில் கையாளுவதற்கான கட்டுப்பாட்டையும் வழங்குவதால், இவ்வாகனப் பிரிவில் மிகச் சிறந்த தேர்வாக தனித்து நிற்கிறது.இன்றைய இரு சக்கர வாகன ப்ரியர்களிடையே அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் பொருத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 -ன்அதிநவீன தொழில்நுட்பம், மிகவும் துல்லியமான வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன்களை ஒருங்கிணைக்கும் வகையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஓபிடி2பி க்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பு, டுயல் சேனல் ஏபிஎஸ், சிவப்பு அலாய் வீல்கள் ஆகியவை 2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 -ன் புதிய அம்சங்கள் ஆகும்.  இந்த பைக் இந்தியா முழுவதும் உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவன விநியோகஸ்தர்களிடம் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,34,320 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)ல் இருந்து தொடங்குகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form