அமேசான் ஆஷ்ரே ஓய்வு மையங்கள் விரிவாக்கம்



அமேசான் இந்தியா, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் தனது ஆஷ்ரே மையங்களின் நெட்வொர்க்கை 100 ஆக விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆஷ்ரே மையங்கள் என்பவை இகாமர்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சூழல் அமைப்பு முழுவதும் உள்ள டெலிவரி அசோசியேட்களுக்கு ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட அறையில் இருக்கை வசதிகள், சுத்தமான குடிநீர், எலக்ட்ரோலைட்டுகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், கழிப்பறைகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் புத்துணர்ச்சியளிக்கும் வசதிகளை வழங்கும் பிரத்தியேக ஓய்வு இடங்களாகும்.

 இந்த முயற்சியானது, அதிக எண்ணிக்கையிலான டெலிவரி அசோசியேட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னர்கள் இருக்கும் பகுதிகளில் அவர்களுக்கு பிரத்தியேக ஓய்வு மையங்களை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்துறை சார்ந்த முதல் முயற்சியாகும். பெட்ரோல் பம்புகள் மற்றும் வணிகரீதியிலான வாடகை இடங்களில் அமைந்துள்ள இந்த மையங்கள் அத்தியாவசிய வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. ஆஷ்ரே மையங்கள் வாரத்தில் 7 நாட்களும் என ஆண்டு முழுவதும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன, வருகை தரும் அனைத்து டெலிவரி பார்ட்னர்களுக்கும் ஒரு வருகைக்கு 30 நிமிடங்கள் வரை இலவசமாக தங்கும் அணுகலை வழங்குகின்றன. எந்த நேரத்திலும் 15 பேர் வரை தங்கக்கூடிய திறன் கொண்ட இந்த மையங்கள், வசதியான பார்க்கிங் இடங்களையும் வழங்குகின்றன.

அமேசான் நிறுவனத்தின் இந்தியா அண்ட் ஆஸ்திரேலியா பிரிவு - விபி ஆபரேஷன்ஸ் தலைவர்  அபினவ் சிங் கூறுகையில்,  “டெலிவரி அசோசியேட்களின் உடல்நலம், நல்வாழ்வு மற்றும் சௌகரியம் எங்களின் முதன்மை முன்னுரிமையாகும். ஆஷ்ரே மையங்கள் சுத்தமான குடிநீர், முதலுதவி பெட்டிகள் மற்றும் சார்ஜிங் பாயிண்டுகள் போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட ஓய்வெடுக்கக்கூடிய இடங்களை  வழங்குகின்றன. இந்த வசதிகள் டெலிவரி அசோசியேட்கள் தங்கள் பரபரப்பான பணி சூழலின் போது வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவுகின்றன.  நாங்கள் இதுவரை பெற்ற  வரவேற்பை கண்டு ஊக்கமடைந்துள்ளோம், மேலும் இந்த முன்முயற்சியை இந்தியா முழுவதும் இதேபோன்ற 100 மையங்களுக்கு விரிவுபடுத்த உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form