கோரமண்டல் இண்டர்நேஷனல் சில்லறை வர்த்தக செயல்பாடுகள் விரிவாக்கம்



இந்தியாவின் முன்னணி வேளாண் தீர்வுகள் நிறுவனங்களில் ஒன்றான கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட், தமிழ்நாட்டின் ஊட்டியில் தனது 901-வது ‘நமது குரோமோர்’ பிரத்தியேக விற்பனை நிலையத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் தனது சில்லறை வர்த்தக செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் விதமாக, கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தனது பிரத்தியேக விற்பனை நிலையங்களை பரவலாக அறிமுகம் செய்து வருகிறது.

 ஊட்டியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ‘நமது குரோமோர்’ விற்பனை நிலையத்தை கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ். சங்கரசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.  இவ்விழாவில் அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த புதிய விற்பனை நிலையம் இரண்டு தளங்களில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.  இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு மாதிரி விற்பனை நிலையமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள 'நமது குரோமோர்' சில்லறை விற்பனை நிலையம் உரங்கள், பயிர் பாதுகாப்பு தயாரிப்புகள், சிறப்பு ஊட்டச்சத்துக்கள், கரிம வேளாண்மை தீர்வுகள், பண்ணை கருவிகள், கால்நடை தீவனம் மற்றும் விவசாய காப்பீடு போன்ற பல்வேறு விவசாய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும். மேலும், இந்த விற்பனை நிலையம் விவசாயிகளுக்கு பல புதுமையான தொழில்நுட்ப சேவைகளையும் வழங்குகிறது. 

ட்ரோன் மூலம் உரம் தெளித்தல், ’மை குரோமோர்’ செயலி மூலம் டிஜிட்டல்/ஆன்லைனில் விவசாய தயாரிப்புகளை வாங்கும் வசதி, இமேஜ் ரிககனைஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும் சேவை என அதிநவீன சேவைகளை இங்குள்ள விவசாயிகள் பெறமுடியும். பாரம்பரிய விவசாயத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், தோட்டம் வைப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளும் இந்த விற்பனை நிலையத்தில் இடம்பெற்றுள்ளன. வீட்டுத்தோட்டம் மற்றும் நகர்ப்புற தோட்டக்கலை தேவைகளுக்கான பல்வேறு தயாரிப்புகளும் இதில் அடங்கும்.  

புதிய விற்பனை நிலைய தொடக்க விழாவில், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.சங்கரசுப்பிரமணியன் பேசுகையில், "ஊட்டியில் எங்களது 901-வது ’நமது குரோமோர்’ சில்லறை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டிருப்பது, விவசாயத்தை அடிமட்ட அளவிலிருந்து  மாற்றுவதில் கோரமண்டல் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் அடுத்த கட்டமாக அமைந்திருக்கிறது. கேரட் மற்றும் தோட்ட விளைபொருள்கள் போன்றவை  செழிப்பாக விளையும் பன்முகத்தன்மை கொண்ட ஊட்டி, விவசாய புதுமைகளை மேற்கொள்வதற்கேற்ற அருமையான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இதனால் இந்த புதிய விற்பனை நிலையம் ஒரு சில்லறை விற்பனைக் நிலையமாக மட்டுமல்லாமல், ஊட்டியில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் குறித்த அறிவு மற்றும் ஆதரவை வாங்கும் ஒரு மையமாகவும் திகழும். எங்கள் கரிமப் பொருட்களில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் ஊட்டி விவசாயிகளுக்கு அறிவு மற்றும் ஆதரவு மையமாக இருக்கும்.  மேலும் நீலகிரிப் பகுதி முழுவதிலும் விவசாய முன்னேற்றத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதை  ஊக்குவிக்கும்." என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form