தி ஸ்லீப் கம்பனி தமது முதலாவது பிரத்தியேக கடையை மதுரையில் தொடங்கியது

 


தி ஸ்லீப் கம்பனி (TSC) – இந்தியாவின் முன்னணி கம்ஃபர்ட் டெக் பிராண்ட் – மதுரையில் தனது முதலாவது கடை தொடக்கத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தமது ஆஃப்லைன் இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகரில் அமைந்துள்ள இந்த புதிய கடை, அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான தூக்கம் மற்றும் அமரும் அனுபவத்தை  முற்றிலும் மாற்றி அமைக்கிறது, ஏனெனில் இங்கு மேம்பட்ட நவீன கம்ஃபர்ட் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் காணப்படும் வலுவான தேவை காரணமாக, தென்னிந்தியாவில் TSC-க்கான முக்கிய சந்தைகளில் ஒன்றாக இது தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

முழுமையான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கடையில், TSC-யின் அனைத்து விதமான SmartGRID தொழில்நுட்பத்தால் இயங்கும் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் SmartGRID மெத்தைகள், எர்கோனாமிக் நாற்காலிகள், உயரத்தை மாற்றக்கூடிய டெஸ்குகள், மற்றும் SensAI Sleep Analyser மற்றும் SensAI Sleep Analyser Pillow போன்றவை அடங்கும். புதுமைகளைத் தன்னுடைய முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த D2C பிராண்ட், கம்ஃபர்ட் அனுபவத்தின் வரம்புகளைத் தொடர்ந்து விரிவுப்படுத்தி, அடுத்த கட்ட தூக்க நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்கிறது.

தூக்க ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல ஆய்வுகள், மாறி வரும் பழக்கங்களை – குறிப்பாக தாமதமான உறக்க நேரங்கள் மற்றும் அதிகரித்த டிஜிட்டல் பயன்பாட்டை – காட்டுகின்றன, மேலும் இவை ஒட்டுமொத்த நலனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மதுரையின் மிக மேம்பட்ட பகுதிகளில் ஒன்றான அண்ணாநகர், TSC-யின் புதிய சில்லறை முயற்சிக்கு சரியான இடமாகத் திகழ்கிறது. விரிவாக வளர்ந்து வரும் வர்த்தக சூழலும், முக்கிய வசதிகளுக்கு அருகாமை என்பதும், சிறந்த தூக்கத்திற்கும் அமர்விற்குமான தீர்வுகளைத் தேடும் நபர்களுக்கான சிறந்த இடமாக இதை உருவாக்குகின்றன.

புதிய கடை தொடக்கம் பற்றி கருத்து தெரிவித்த தி ஸ்லீப் கம்பெனியின் இணை நிறுவனர் ப்ரியங்கா சலோத், “இது தமிழ்நாட்டில் எங்களுடைய 13-வது ஷோரூம் ஆகும், மேலும் இங்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த திருப்தி அளவுக்கு மீறியது. சிறந்த செயல்திறன், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் வாழ்க்கையின் சவால்களை நேருக்குநேர் எதிர்கொள்ள தேவையான உற்சாகத்திற்காக, நாங்கள் SmartGRID தொழில்நுட்பத்தின் மூலம் உச்சநிலை கம்ஃபர்ட்டை வழங்குகிறோம். நல்ல பழக்கங்களை விரைவில் ஆரம்பித்துவிடுவது மிகவும் முக்கியம் என்பதைக் கூறுவது போல, இன்றே ஒரு சிறந்த தூக்க மற்றும் கம்ஃபர்ட் சூழலையும், சரியான தூக்க பழக்கங்களையும் உருவாக்கி பயனடைய வேண்டும். தமிழ்நாட்டைச் சிறப்பாக உறங்கச் செய்வதும், நன்கு அமரச் செய்வதும் எங்கள் குறிக்கோள். இதற்கான உறுதியான தொடக்கமாக உங்கள் முதல் 'தி ஸ்லீப் கம்பெனி' அனுபவம் அமையும்” என்றார்.

புதிய கடை தொடக்கம் குறித்து தி ஸ்லீப் கம்பெனியின் தலைமை செயல்பாட்டு அதிகாரி கரண் சிங்க்லா கூறுகையில், "கம்ஃபர்ட்டை மறுதொடக்கம் செய்யும் எங்கள் பயணம், மதுரையில் முதல் பிரத்தியேக ஷோரூமைத் தொடங்குவதன் மூலம் மேலும் விரிவடைகிறது. தி ஸ்லீப் கம்பெனியில், எங்களின் முக்கியக் குறிக்கோள், SmartGRID எனும் எங்கள் தனியுரிமை பெற்ற தொழில்நுட்பத்தின் மூலம் கம்ஃபர்ட்டை மறுபரிசீலனை செய்வதே. இந்த தொடக்கம், எங்களை, எங்கள் வாடிக்கையாளர்களிடம் மேலும் ஒரு படி அருகே கொண்டு செல்கிறது. மதுரை அண்ணாநகர் பகுதியின் சீறி வளர்கின்ற வர்த்தக மற்றும் குடியிருப்பு சூழல், எங்கள் விரிவாக்கத்திற்கான சிறந்த இடமாக திகழ்கிறது. மதுரை மக்களுக்கு எங்கள் புதுமையான தயாரிப்புகளை நேரடியாக அனுபவிக்க வைக்கும் இந்த வாய்ப்பு குறித்து நாங்கள் பெரிதும் உற்சாகமாக இருக்கிறோம்; மேலும் அவர்களுக்கு உயர்தர தூக்கத்தையும், அமர்வுக் கம்ஃபர்டையும் வழங்க ஆவலாக இருக்கிறோம்" என்றார்.

தி ஸ்லீப் கம்பெனி தனது விரிவாக்க பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், ஏஐ அடிப்படையிலான புதுமைகள் மற்றும் ஆராய்ச்சி - முனைப்புகள் (R&D) மீது அதிக முதலீடுகளை செலுத்தி, தயாரிப்பு வரிசையை மேம்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் இந்தியா முழுவதும் 130-க்கும் மேற்பட்ட கடைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், TSC, ஆஃப்லைன் வணிக துறையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி D2C பிராண்டாக உருவெடுத்துள்ளது.

TSC முக்கிய நகரங்களில் தனது விரிவாக்கத்தை முன்னெடுத்து வரும் நிலையில், மதுரையில் திறக்கப்படும் இந்த புதிய கடை, இந்திய குடும்பங்களுக்கு கம்ஃபர்ட்-டெக் தொழில்நுட்பத்தை மேலும் எளிமையாகக் கிடைக்கச் செய்யும் முக்கியமான ஒரு முன்னேற்றமாக அமைந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form