எஸ்எம்எப்ஜி இந்தியா கிரெடிட் நிறுவனம் இந்தியாவில் உள்ள 6 இடங்களில் 517 பங்கேற்பாளர்களுடன், "மிகப்பெரிய கால்நடை நல பாடம் (பல இடங்கள்)" என்ற கின்னஸ் உலக சாதனையை அடைந்து வரலாறு படைத்துள்ளது. இந்த சாதனை, நாடு முழுவதும் இந்த மிகப்பெரிய ஒரு நாள் கால்நடை பராமரிப்பு முகாமான 7வது பசு விகாஸ் திவாஸ் (பிவிடி) நிகழ்வின் ஒரு பகுதியாக அடையப்பட்டது. இந்த முகாம்கள், சுமார் 1,90,000 பயனாளிகள் (1,50,000 கால்நடைகள் மற்றும் 40,000 கால்நடை உரிமையாளர்கள்) பயனடைகின்ற வகையில் 16 மாநிலங்களில் உள்ள 500 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
இந்தியாவில், சுமார் 65-70% கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மை அல்லது வேளாண்மை தொடர்பான செயல்பாடுகளை நம்பியுள்ளனர். எனவே, கால்நடைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு அவர்களின் வாழ்வாதார உருவாக்கம் மற்றும் நிதி நலனில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பிரிக்கமுடியாத பிணைப்பை அங்கீகரிக்கின்ற வகையில் , எஸ்எம்எப்ஜி இந்தியா கிரெடிட், கிராமப்புற குடும்பங்களின் வாழ்க்கைகளில் கால்நடைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற வகையில் “என் பசு என் குடும்பம் " என்ற கருத்துருவின் கீழ் 7வது பசு விகாஸ் தினத்தைக் கொண்டாடியது.
இந்த ஆண்டு பிவிடி நிகழ்வு கிராமப்புற நலனுக்கான இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்ற வகையில் 6,000 க்கும் அதிகமான பணியாளர்களின் முனைப்பான பங்கேற்பைக் கண்டது.
எஸ்எம்எப்ஜி இந்தியா கிரெடிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. சாந்தனு மித்ரா கூறுகையில், " பல்வேறு இடங்களில் மிகப்பெரிய கால்நடை நலன் பாடத்திற்க்காக கின்னஸ் உலக சாதனையை அடைந்ததில், எங்களின் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களின் கடின உழைப்புக்காக ஒவ்வொரு ஊழியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆண்டைய பசு விகாஸ் திவாஸ், கால்நடை பராமரிப்பில் எதிர்பார்ப்புகளை விஞ்சியது மட்டுமல்லாமல், இந்தியாவின் பல இடங்களில் சிறப்பு அறிவுப் பாடங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது." என்று கூறினார்.
எஸ்எம்எப்ஜி இந்தியா கிரெடிட் தலைமை இயக்க அதிகாரி சுவாமிநாதன் சுப்பிரமணியன் கூறுகையில், "கின்னஸ் வேர்ல்டு ரெகார்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற இந்த அங்கீகாரம், எஸ்எம்எப்ஜி இந்தியா கிரெடிட் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு பெருமைமிகு மற்றும் வரையறுக்கின்ற தருணமாக இருக்கிறது. ஒரு நிறுவனமாக, நாங்கள் பன்னாட்டு அளவில் வரலாற்றுப் புத்தகங்களில் எங்கள் பெயரை பொறித்துள்ளோம், " என்றார்.
உலக சாதனைகளை அடைவதற்கான அதன் வளமான பாரம்பரியதில் கட்டமைக்கப்பட்ட பசு விகாஸ் திவாஸ் தினம், ஒரே நாளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய கால்நடை பராமரிப்பு முகாம்களுக்காக இது வேர்ல்டு ரெகார்டஸ் யூனியன், லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ், பெஸ்ட் ஆஃப் இந்தியா ரெகார்ட்ஸ் மற்றும் வேர்ல்டு புக் ஆஃப் ரெகார்ட்ஸ் போன்றவற்றால் முன்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.