இந்தியாவின் முன்னனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எச்டிஎப்சி லைஃப் ஆனது தனது சமீபத்திய ப்ராடக்டான எச்டிஎப்சி லைஃப் க்ளிக் 2 அச்சீவ் பார் அட்வான்டேஜ்ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பங்கேற்கும் ப்ராடக்ட் ஆனது ஒரு தனிநபரின் பல்வேறு வாழ்க்கை கட்டங்களுடன் தொடர்புடைய மைல்கல்களை மனதில் இருத்தி வடிவமைக்கப்பட்டதாகும். வளர்ந்து வரும் ஒருவரின் அபிலாசைகள்/இலக்குகளுக்காக அவர் தொடர்ந்து சேமிக்கையில் முன்கூட்டிய பணப்புழக்கம் (குறுகிய கால தேவைகளுக்காக), நெகிழ்த்தன்மை மற்றும் எதிர்காலத்திற்கான பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றுக்காக ஒரு விருப்பம் இருப்பது உணரப்பட்டது.
எச்டிஎப்சி லைஃப் கிளிக் 2 அச்சீவ் பார் அட்வான்டேஜ் ஆனது பின்வரும் முக்கிய அம்சங்களுடன் வருகிறது:
* காப்பீடு தொடரும் நன்மை (பாலிசி கண்டினுவன்ஸ் பெனிபிட் - பிசிபி) - இந்த விருப்பத்தேர்வு மூலம் காப்பீடு பெற்றவர் இறந்தால் எதிர்கால பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படும். உடனடியாக இறப்பு நன்மையானது ஒரு ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும் மற்றும் இத்திட்டத்தின் கீழ் எதிர்கால நன்மையானது நாமினி அல்லது சர்வைவருக்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
* இறப்பு நன்மை மடங்கின் விருப்பம் -இந்த விருப்பத்தேர்வானது ஒரு தனிப்பயனாக்கப்பட்ட இறப்பு நன்மை மடங்கை அவர்களின் தேவைக்கேற்ப தேர்வு செய்ய அனுமதிக்கிறது - 5மடங்கு, 7மடங்கு அல்லது 11மடங்கு என்று.
* பேய்ட் அப் அடிஷன் -இந்த விருப்பத்தேர்வு மூலம் கிடைக்கக்கூடிய பகுதி அல்லது ஒட்டுமொத்த கேஷ் போனசை காப்பீட்டு காலத்தில் எந்நேரமும் தொகையாக பெறும் வகையில் பேய்ட் அப் அடிஷன்களாக மாற்றிக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்கால தேவைகளுக்கேற்ப மேற்கண்ட விருப்பத்தேர்வுகளிலிருந்து எவ்வித கலவையையும் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த ப்ராடக்ட் அறிமுகத்தின் போது பேசிய எச்டிஎப்சி லைஃப்-ன் ப்ராடக்ட்ஸ் & செக்மென்ட்ஸ் தலைவரான அனீஷ் கன்னா, "எச்டிஎப்சி லைஃப்-ல் நாங்கள் வயது, வாழ்க்கை கட்டம், தற்போதைய வருமானம் மற்றும் எதிர்கால திட்டங்களை பொறுத்து ஒவ்வொரு தனிநபருக்கும் உகந்த ஆயுள் காப்பீட்டு திட்டங்களை தீட்ட வேண்டும் என்று நம்புகிறோம். தங்கள் அன்புக்குரியவர்களின் பொருளாதார அடிப்படையிலான பாதுகாப்பான எதிர்காலத்தை பற்றி கனவுகளும் வீடு வாங்குவது, ஒரு கௌரவமிக்க கல்வி நிறுவனத்தில் தங்கள் குழந்தைகளின் மேற்கல்வி, மற்றும் வேறுபல சுய இலக்குகளும் ஒவ்வொரு தனிநபரும் கொண்டுள்ளார். இந்த கனவுகளுக்கு நெகிழ்தன்மை, பணப்புழக்கம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கருவியுடன் கூடிய நீண்ட-கால திட்டமிடல் தேவை. எச்டிஎப்சி லைஃப் கிளிக் 2 அச்சீவ் பார் அட்வான்டேஜ் ஆனது ஒரு சிறந்த எதிர்காலத்தை செதுக்குவதற்கும் ஒரு பாதுகாப்பு வலையுடன் கூடிய தங்கள் கனவுகளை நிச்சையமற்ற நிலைமைகளுக்கு எதிராக பாதுகாத்திடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது." என்று விளக்கினார்.