வரி நிபுணர்களுக்கு டேலி சொல்யூசன்ஸ் பாராட்டு

இந்தியாவின் சிறு, குறு மற்றும் மத்தியத் தொழில் நிறுவனங்களின் கணக்கியல் மற்றும் வரி தேவைகளை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை முன்னேற்றும் மதுரையின் வரி மற்றும் கணக்கியல் சமூகத்தின் முக்கிய பங்களிப்புகளை Tally Solutions நிறுவனம் சிறப்பித்து கௌரவித்துள்ளது. ஜிஎஸ்டி நிபுணர்கள், கணக்காளர்கள், வரி வக்கீல்கள் மற்றும் பிற நிபுணர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்க, டேலி சொல்யூசன்ஸ் நிறுவனம் 'டேக்ஸ் அண்ட் அக்கவுண்டிங்' என்ற பிரத்யேக நிகழ்வை நடத்தி அவர்களின் திறமைகளை பாராட்டியது. இந்த நிகழ்ச்சியில் தங்கள் தொழிலில் அசாதாரண அர்ப்பணிப்பு மற்றும் நாட்டத்தை வெளிப்படுத்திய மதுரையைச் சேர்ந்த 10 சிறந்த வரி நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த முயற்சி பற்றி தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட டேலி சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தெற்குப் பகுதி பொது மேலாளர் அனில் பார்கவன் கூறுகையில், “மதுரையின் வரி மற்றும் கணக்கியல் சமூகத்தின் அபார பங்களிப்புகளை கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எம்எஸ்எம்இக்கள் இன்று சந்திக்கும் சவால்களை சமாளிக்க மற்றும் வளர்ச்சியடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானதாகும். 'டேக்ஸ் அண்ட் அக்கவுண்டிங்டைட்ட்ன்ஸ்' முயற்சியின் மூலம், தனிநபர் திறமைக்காகவும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒட்டுமொத்த பங்களிப்புக்காகவும் பாராட்டு தெரிவிக்கிறோம். தொழில்நுட்ப ஏற்றத்தால் அனைத்து தொழில்களுக்கும் நிலைத்த வளர்ச்சி மற்றும் ஒழுங்குகளை ஏற்படுத்த உதவுவதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்றார்.

இந்த நிகழ்வு, எம்எஸ்எம்இகளுக்கான கணக்கியல் மற்றும் வரி துறையை முன்னேற்றுவதில் சமூகத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. டிஜிட்டல் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி பல செயல்முறைகளை எளிதாக்கி திறனை மேம்படுத்துவதில் இந்த நிபுணர்கள் முக்கிய பங்கை வகித்துள்ளனர். டேலி நிறுவனத்தின் 'டேக்ஸ் அண்ட் அக்கவுண்டிங் டைட்ட்ன்ஸ்'எனும் தனிச்சிறப்பு முயற்சி, இந்த நிபுணர்களின் இடைவிடாத முயற்சிகளை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சேலம் பகுதியின் மாநில ஜிஎஸ்டி இணை ஆணையர் மெ. மகேஸ்வரி, இணைஆணையாளர் (மாநில ஜி.எஸ்.டி.), மதுரைபிரிவு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றிபெற்ற வரி நிபுணர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form